புனித வெள்ளி.. சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்… டைமிங் நோட் பண்ணுங்க!

Chennai Metro Rail : சென்னை மெட்ரோ ரயில் சேவையில் 2025 ஏப்ரல் 18ஆம் தேதியான நாளை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புனித வெள்ளி பண்டிகையையொட்டி, சென்னை மெட்ரோ ரயில் சேவை சனிக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

புனித வெள்ளி.. சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... டைமிங் நோட் பண்ணுங்க!

சென்னை மெட்ரோ ரயில்

Updated On: 

17 Apr 2025 11:57 AM

சென்னை, ஏப்ரல் 17: புனித வெள்ளி பண்டிகையை முன்னிட்டு, சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது. 2025 ஏப்ரல் 18ஆம் தேதியான நாளை, புனித வெள்ளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னையில் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக இருப்பதாக  மெட்ரோ ரயில் சேவை. இந்த மெட்ரோ ரயில் சேவையில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர்.

சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்

காலதாமதம் ஏற்படாமல் விரைவாக செல்வதால் மக்கள் மெட்ரோ சேவை அதிகம் பயன்படுத்தி வருகின்னர். பயணிகள் சிரமமின்றி பயணிக்க பல்வேறு சலுகைகளை மெட்ரோ நிர்வாக வழங்கி வருகிறது. சென்னையில் தற்போது இரு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

சென்னை விமான நிலையம், நந்தனம் வழியாக ஒரு வழித்தடத்திலும், சென்டரில் இருந்து கோயம்பேடு, ஆலந்தூர் அடையும் வகையில் ஒரு வழித்தடத்திலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகிறது.

இந்த நிலையில், அவ்வப்போது மெட்ரோ ரயில் சேவைகளில் மாற்றம் கொண்டு வரப்படுகிறது. பண்டிகை நாட்களில் பயணிகள் கூட்டம் குறைவாக இருக்கும் என்பதால் மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படுகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் 2025 ஏப்ரல் 18ஆம் தேதி வெள்ளிக்கிழமை (நாளை) புனித வெள்ளி கொண்டாடப்படுகிறது.

வெளியான அறிவிப்பு


இதனால், மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  அதன்படி, 2025 ஏப்ரல் 17ஆம் தேதியான நாளை சனிக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிவர்காம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2025 ஏப்ரல் 17ஆம் தேதியான நாளை காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 8 மணி வரையிலும், ஒவ்வொரு 6 நிமிடங்களுக்கும் ரயில்கள் இயக்கப்படும்.

காலை 5 மணி, காலை 11 மணி முதல் மாலை 5 மணி மற்றும் இரவு 8-10 மணி வரை, ஒவ்வொரு 7 நிமிடங்களுக்கும் ரயில்கள் இயக்கப்படும். இரவு 10-11 மணி வரை, ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் ரயில்கள்  இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, 2025 மார்ச் மாதத்தில் மட்டும் 92.10 லட்சம் பயணிகள் மெட்ரோ ரயிலில் பயணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.