Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

வேற லெவல்.. விரைவில் ஓட்டுநரில்லா மெட்ரோ ரயில்.. நடந்து முடிந்த சோதனை ஓட்டம்!

Chennai Metro Rail : சென்னை மெட்ரே ரயில் 2ஆம் கட்ட திட்டத்தில் இயக்கப்பட உள்ள ஓட்டுநரில்லா மெட்ரோ ரயிலின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்து உள்ளது. பூந்தமல்லி போரூர் இடையேயான வழித்தடத்தில் ஓட்டுநரில்லா மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடந்து முடிந்துள்ளது. இந்த வழித்தடம் 2025 டிசம்பர் மாதத்திற்குள் பயன்பாட்டிற்கு வரும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

வேற லெவல்..  விரைவில் ஓட்டுநரில்லா மெட்ரோ ரயில்..  நடந்து முடிந்த சோதனை ஓட்டம்!
ஓட்டுநரில்லா மெட்ரோ ரயில்
umabarkavi-k
Umabarkavi K | Published: 29 Apr 2025 06:43 AM

சென்னை, ஏப்ரல் 29: சென்னையில் ஓட்டுநரில்லா மெட்ரோ (Driverless metro Chennai) ரயிலுக்கான சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. பூந்தமல்லி – போரூர் (Poonamallee Porur metro) வரை சோதனை ஓட்டத்தை மெட்ரோ ரயில் நிர்வாகம் 2025 ஏப்ரல் 28ஆம் தேதியான நேற்று நடத்தி முடித்துள்ளது.  இதன் மூலம், விரைவில் ஓட்டுநரில்லா மெட்ரோ ரயில் பயன்பாட்டுக்கு வரலாம். சென்னையில் போக்குவரத்து சேவைகளில் மிகவும் முக்கியமானது மெட்ரோ ரயில் சேவை. மெட்ரோ ரயிலில் தினமும் ஆயிரக்கணக்கானோர் பயணித்து வருகின்றனர்.

விரைவில் ஓட்டுநரில்லா மெட்ரோ ரயில்

தற்போது இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.  இந்த நிலையில், மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இரண்டாம் கட்ட திட்டத்தில் 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளது.

இதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெறுகிறது. 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 116 கி.மீ தூரத்துக்கு செயல்படுத்தப்படுகிறது. இதில் மிகவும் முக்கியமான வழித்தடம் பூந்தமல்லி போரூர். இந்த வழித்தடத்தில் மெட்ரோ பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.

பூந்தமல்லி போரூர் மெட்ரோ வழித்தடத்தில் 10 மெட்ரோ நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதாவது, பூந்தமல்லி பைபாஸ், பூந்தமல்லி, முல்லைத் தோட்டம், கரையாஞ்சாவடி, குமணஞ்சாவடி, ஐயப்பதாங்கல், தெல்லையகரம், காட்டுப்பாக்கம் என இடங்களில் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இங்கு மெட்ரோ ரயில்கள் நின்று செல்லும். இந்த நிலையில், பூந்தமல்லி முதல் போரூர் வரையிலான 10 கி.மீ தூரத்துக்கான ஓட்டுநரில்ல சோதனை ஓட்டம் 2025 ஏப்ரல் 28ஆம் தேதியான நேற்று நடந்தது. முன்னதாக, 2025 மார்ச் மாதம் பூந்தமல்லி முதல் போரூர் வரை சோதனை ஓட்டம் நடந்தது. அதில், சில கோளாறுகள் ஏற்பட்டது.

நடந்து முடிந்த சோதனை ஓட்டம்


இந்த நிலையில், தற்போது ஓட்டுநரில்ல மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்துள்ளது. 2025 மே 30ஆம் தேதி போரூரில் இருந்து பூந்தமல்லி வரை ஓட்டுநரில்லா மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் தொடங்கும் என மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

எனவே டிசம்பர் மாதத்திற்குள் பூந்தமல்லி போரூர் இடையே மெட்ரோ சேவை முழுமையாக இயக்கப்படலாம் என தெரிகிறது.  பூந்தமல்லி முதல் முல்லைத் தோட்டம் வரையிலான முதல் நாள் சோதனை ஓட்டத்தின் போது, ​​ரயில் மணிக்கு 10-15 கி.மீ வேகத்தில் இயக்கப்பட்டது. 2025 ஏப்ரல் 28ஆம் தேதியான நேற்று நடந்த சோதனை ஓட்டத்தில் வேகம் மணிக்கு 15-20 கி.மீ. ஆக இருந்தது. சராசரியாக மணிக்கு 35 கி.மீ. வேகத்தில் ரயில் இயக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினர். வரும் நாட்களில் வேகம் அதிகரிக்கப்படும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.

 

வீட்டில் குங்குமம் தயாரிப்பது எப்படி? எத்தனை நாட்கள் பயன்படும்..?
வீட்டில் குங்குமம் தயாரிப்பது எப்படி? எத்தனை நாட்கள் பயன்படும்..?...
சனி பகவானுக்குப் பிடித்த 3 ராசிக்காரர்கள்.. யாருன்னு தெரியுமா?
சனி பகவானுக்குப் பிடித்த 3 ராசிக்காரர்கள்.. யாருன்னு தெரியுமா?...
பள்ளியில் தண்ணீர் தொட்டியில் விழுந்த 4 வயது சிறுமி பலி!
பள்ளியில் தண்ணீர் தொட்டியில் விழுந்த 4 வயது சிறுமி பலி!...
மே 1-ம் தேதி வெளியாகும் 3 படங்களில் எதை முதலில் பார்ப்பீங்க?
மே 1-ம் தேதி வெளியாகும் 3 படங்களில் எதை முதலில் பார்ப்பீங்க?...
’காலனி' என்ற சொல் நீக்கம்.. முதல்வர் ஸ்டாலின் அதிரடி!
’காலனி' என்ற சொல் நீக்கம்.. முதல்வர் ஸ்டாலின் அதிரடி!...
வராரு வராரு அழகர் வராரு.. மதுரை கள்ளழகர் கோயில் சிறப்புகள்!
வராரு வராரு அழகர் வராரு.. மதுரை கள்ளழகர் கோயில் சிறப்புகள்!...
காஷ்மீரில் 48 சுற்றுலா தலங்கள் மூடல்.. மத்திய அரசு அதிரடி
காஷ்மீரில் 48 சுற்றுலா தலங்கள் மூடல்.. மத்திய அரசு அதிரடி...
பத்ம பூஷன் விருது பெற்ற அஜித்திற்கு வாழ்த்து சொன்ன பவன் கல்யாண்!
பத்ம பூஷன் விருது பெற்ற அஜித்திற்கு வாழ்த்து சொன்ன பவன் கல்யாண்!...
சித்ரா பௌர்ணமி.. கள்ளழகர் திருவிழா.. மே மாத முக்கிய நிகழ்வுகள்!
சித்ரா பௌர்ணமி.. கள்ளழகர் திருவிழா.. மே மாத முக்கிய நிகழ்வுகள்!...
கொடியேற்றத்துடன் தொடங்கிய மதுரை சித்திரை திருவிழா...
கொடியேற்றத்துடன் தொடங்கிய மதுரை சித்திரை திருவிழா......
நீச்சல் அடிக்கும்போது ஏற்படும் சரும கருமையை தவிர்க்க சில வழிகள்..
நீச்சல் அடிக்கும்போது ஏற்படும் சரும கருமையை தவிர்க்க சில வழிகள்.....