பூந்தமல்லி – போரூர் மெட்ரோ திட்டம்.. ஏப்ரல் மாத இறுதியில் 2 ஆம் கட்ட சோதனை!

Poonamallee-Porur Line Test Run Update | சென்னை பூந்தமல்லி - போரூர் வழித்தடத்தில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணிகள் நிறைவு பெற்று மார்ச் 20, 2025 அன்று முதற்கட்ட சோதனை ஓட்டம் நடைபெற்ற நிலையில், இரண்டாம் கட்ட சோதனை ஓட்டம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

பூந்தமல்லி - போரூர் மெட்ரோ திட்டம்.. ஏப்ரல் மாத இறுதியில் 2 ஆம் கட்ட சோதனை!

மாதிரி புகைப்படம்

Published: 

19 Apr 2025 10:23 AM

சென்னை, ஏப்ரல் 19 : பூந்தமல்லி (Poonamallee) – போரூர் (Porur) வழித்தடத்தில் அமைக்கப்பட்டுள்ள மெட்ரோ வழித்தடத்தில் ஏப்ரல் 2025 இறுதிக்குள் 2 ஆம் கட்ட சோதனை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மார்ச் 2025-ல் முதல் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்ட நிலையில், தற்போது இரண்டாவது சோதனை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. மெட்ரோ பணிகள் சீராக நடைபெற்று வரும் நிலையில், டிசம்பர் 2025-க்குள் மெட்ரோ சேவை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், இரண்டாம் கட்ட சோதனை குறித்து வெளியான தகவல் குறித்து விரிவாக பார்க்கலாம்.

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பூந்தமல்லி மெட்ரோ பணிகள்

சென்னையில் ஏற்கனவே சில பகுதிகளில் மெட்ரோ சேவை பயன்பாட்டில் உள்ள நிலையில், இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டம் சுமார் 116 கிலோ மீட்டர் தூரத்திற்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்பட உள்ளது. இதில் சென்னையின் முக்கிய பகுதிகளான கலங்கரை விளக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலை மற்றும் பவர் ஹவுஸ் உள்ளிட்ட வழித்தடங்கில் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த மூன்று வழித்தடங்களில் பூந்தமல்லி வழித்தடம் மிகவும் முக்கியமானதாக கருதபப்டுகிறது. ஏராளமான பொதுமக்கள் பூந்தமல்லியில் இருந்து சென்னைக்கு பயணம் செய்யும் நிலையில், அலுவலக நேரங்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தி போக்குவரத்தை மிகவும் எளிதாக மாற்றும் என கருதப்படுகிறது.

போரூர் – பூந்தமல்லி வழித்தடத்தில் பல இடங்களில் ரயில் பாதை அமைக்கும் பணி மற்றும் பொறியியல் கட்டுமானம் நிறைவடைந்துள்ளது. பூந்தமல்லி மெட்ரோ பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், டிசம்பர் 2025-க்குள் அது பொதுமக்கள் பயனபாட்டிற்கு கொண்டுவரப்படும் என கூறப்பட்டுள்ளது. அதன்படி, பூந்தமல்லி மெட்ரோ சேவை பொதுமக்கள் பயப்பாட்டிற்கு வர இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில், இறுதிகட்ட பணிகள் தீவிரம் அடைந்துள்ளது. முன்னதாக மெட்ரோ முதல் சோதனை ஓட்டம் மார்ச் 2025-ல் நடைபெற்ற நிலையில், தற்போது இரண்டாவது சோதனை ஓட்டத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மார்ச் மாதத்தி நடத்தப்பட்ட முதற்கட்ட சோதனை

இரண்டாம் கட்ட சோதனை குறித்து வெளியான அறிவிப்பு

சென்னை பூந்தமல்லி – போரூர் வழித்தடத்தில் முதற்கட்டமாக பூந்தமல்லி முதல் முல்லை தோட்டம் வரையிலான சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட்டுள்ள மெட்ரோ ரயில் பாதையில் மார்ச் 20, 2025 அன்று முதற்கட்ட சோதனை நடைபெற்றது. இந்த சோதனை வெற்றி பெற்றதை அடுத்து ஏப்ரல் 2025 இறுதிக்குள் இரண்டாவது கட்ட சோதனை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.