Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மெரினா பீச்சுக்கு நுழைவு கட்டணம்? வருகிறது புதிய வசதிகள்.. என்னென்ன தெரியுமா?

Chennai Marina Beach : சென்னை மெரினா கடற்கரையில் குறிப்பட்ட பகுதிகளுக்கு செல்ல பொதுமக்கள் கட்டணம் செலுத்தி செல்ல வேண்டியிருக்கும். மெரினா நீச்சல் குளத்தில் அருகில் உள்ள இடங்களுக்கு செல்ல கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த புதிய விதிமுறை விரைவில் அமலாகும் என்று கூறப்படுகிறது.

மெரினா பீச்சுக்கு நுழைவு கட்டணம்? வருகிறது புதிய வசதிகள்.. என்னென்ன தெரியுமா?
மெரினா கடற்கரைImage Source: PTI
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 15 Apr 2025 14:49 PM

சென்னை, ஏப்ரல் 15: சென்னையில் மெரினா கடற்கரையில் (Chennai Marina Beach) குறிப்பிட்ட பகுதிகளுக்கு பொதுமக்கள் கட்டணம் செலுத்தி தான் செல்ல முடியும். கட்டணமன்றி செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனை டைம்ஸ் ஆஃப இந்தியா செய்தி வெளியிட்டு இருக்கிறது. இந்த நடைமுறை எப்போது முதல் அமலுக்கு வரும் என்ற தகவல் எதுவும் வெளிவரவில்லை. மெரினா கடற்கரை சென்னையின் அடையாளமாக திகழ்கிறது.

மெரினா பீச்சுக்கு நுழைவு கட்டணம்?

அதோடு இல்லாமல், சுற்றுலா பயணிகள் முதல் உள்ளூர் மக்கள் வரை பலரும் மாலை மற்றும் காலை நேரத்தில் இளைப்பாற இருந்து செல்கின்றனர்.  பண்டிகை நாட்கள், வார இறுதி நாட்கள் என்று இல்லாமல், நாள்தோறும் மெரினா கடற்கரையில் மக்கள் தங்கள் பொழுதை கழித்து செல்கின்றனர்.

மெரினா கடற்கரைக்கு எந்த கட்டணமும் வசூலிக்கப்படாததால் அனைத்து தரப்பு மக்களும் சென்றும் செல்லும் இடமாக மெரினா கடற்கரை உள்ளது.  இந்த நிலையில், புதிய விதி விரையில் அமலாக உளளது. அதாவது, மெரினா கடற்கரையில் குறிப்பிட்ட பகுதிக்கு மக்கள் கட்டணம் செலுத்தி தான் செல்ல வேண்டி இருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

நீச்சல் குளத்திற்கு அருகில் உள்ள பகுதிகளுக்கு கட்டணம் செலுத்தி செல்ல வேண்டிய சூழல் வரலாம்.  நீலக்கொடி கடற்கரை திட்டத்தின் கீழ், மெரினா கடற்கரை புணரமைக்கப்பட உள்ளது. ரூ.6 கோடி செலவில் மெரினா கடற்கரையில் மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளது.

வருகிறது புதிய வசதிகள்

சாய்வு நாற்காலிகள், சிற்றுண்டிச்சாலை, உடற்பயிற்சி கூடங்கள், கண்காணிப்பு கோபுரங்கள், தோட்டங்கள், கழிப்பறைகள், ஒரு சர்ஃபிங் பகுதி மற்றும் முதலுதவி மையங்கள் உள்ளிட்டவை அமைக்கப்பட உள்ளன. இதற்காக சென்னை மாநகராட்சி 250 ஏக்கர் கடற்கரையில் 50 ஏக்கர் பரப்பளவை தேர்வு செய்து ஒதுக்கி உள்ளது.

மேலும், 360 டிகிரி கண்காணிப்பு கேமரா, நீச்சல் வீரர்கள் மற்றும் சர்ஃபிங்கில் ஈடுபடுபவர்களுக்கான அறைகள் அமைக்கப்பட உள்ளன. மேலும், மணலில் நடந்தபடி அந்த பகுதிக்கு யாரும் வராத முடியாதபடி தனிப்பாதை அமைக்கப்பட உள்ளன. கடற்கரையின் இந்த பகுதி சுத்தம் செய்யப்பட உள்ளது.

இதனால், 100க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, வியாபாரிகள் கடைகள் அமைக்க தடை செய்யப்பட உள்ளன. நீச்சல் குளத்திற்கு அருகில் நுழைவு வாயில் கட்டப்பட்டு, கட்டணத்துடன் இந்த பகுதிக்குள் அனுமதிக்கப்படுவர். 2025 மே மாத இறுதிக்குள் பணிகள் முடிவடையும் என்று மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீலக்கொடி கடற்கரை திட்டத்தின் கீழ், கோவளம் கடற்கரையில் வசூலிக்கப்படும் கட்டணமே மெரினா கடற்கரைக்கும் வசூலிக்கப்படும் என அதிகாரிகள் கூறுகின்றனர். கோவளம் கடற்கரையில் தனிநபர் ஒருவருக்கு ரூ.30 கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மருத்துவமனை ஐசியுவில் விமான பணிப்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை
மருத்துவமனை ஐசியுவில் விமான பணிப்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை...
கூலி படம் குறித்து முக்கிய அப்டேட் கூறிய நடிகர் உபேந்திரா
கூலி படம் குறித்து முக்கிய அப்டேட் கூறிய நடிகர் உபேந்திரா...
மலையாள நடிகர் ஃபஹத் பாசில் கூட்டணியில் படம்? - எஸ்.ஜே.சூர்யா!
மலையாள நடிகர் ஃபஹத் பாசில் கூட்டணியில் படம்? - எஸ்.ஜே.சூர்யா!...
கூலி படத்தில் ஸ்பெஷல் பாடல்.. கண்டிப்பா ஹிட்டாகும்- பூஜா ஹெக்டே!
கூலி படத்தில் ஸ்பெஷல் பாடல்.. கண்டிப்பா ஹிட்டாகும்- பூஜா ஹெக்டே!...
'குட் பேட் அக்லி' சர்ச்சை: இளையராஜாவின் குற்றச்சாட்டு நியாயமானதா?
'குட் பேட் அக்லி' சர்ச்சை: இளையராஜாவின் குற்றச்சாட்டு நியாயமானதா?...
தோழியர் வேண்டுதல்.. மணக்கோலத்தில் மீனாட்சி இருக்கும் கோயில்!
தோழியர் வேண்டுதல்.. மணக்கோலத்தில் மீனாட்சி இருக்கும் கோயில்!...
நெல்லை: இருட்டு கடை அல்வா கடை உரிமையாளருக்கு வந்த சோதனை...
நெல்லை: இருட்டு கடை அல்வா கடை உரிமையாளருக்கு வந்த சோதனை......
சென்னையில் கனமழை தொடரும்.. வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
சென்னையில் கனமழை தொடரும்.. வெதர்மேன் கொடுத்த அப்டேட்!...
சம்மர் விடுமுறையை டெல்லியை சுற்றியும் கொண்டாடலாம் வாங்க..!
சம்மர் விடுமுறையை டெல்லியை சுற்றியும் கொண்டாடலாம் வாங்க..!...
நன்மைகள் அளிக்கும் தீப வழிபாடு.. கவனிக்க வேண்டிய விஷயங்கள்!
நன்மைகள் அளிக்கும் தீப வழிபாடு.. கவனிக்க வேண்டிய விஷயங்கள்!...
ஜெயிலர் 2 படத்தில் நடிக்க உள்ளதை உறுதி செய்த சிவராஜ்குமார்
ஜெயிலர் 2 படத்தில் நடிக்க உள்ளதை உறுதி செய்த சிவராஜ்குமார்...