அடுத்தவர் வீட்டின் கதவை மூட திருமாவளவன் யார்.. நயினார் நாகேந்திரன் கேள்வி!
BJP Leader Nainar Nagendran Attacks Thirumavalavan | கூட்டணி ஆட்சி அதிகாரத்தில் பங்கு என கூறி கூட்டணிக்கு அழைத்து அதிமுக மற்றும் தவெக கதவுகளை மூடிவிட்டதாக விசிக தலைவர் திருமாவளவன் கூறியது குறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பதில் அளித்துள்ளார். அது குறித்து பார்க்கலாம்.

சென்னை, ஏப்ரல் 27 : திருமாவளவன் ஒரு கூட்டணியில் உள்ளார், அடுத்தவர் வீட்டின் கதவை மூட திருமாவளவன் யார் என்று பாரதிய ஜனதா கட்சி (BJP – Bharatiya Janata Party) மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் (AIADMK – All India Anna Dravida Munnetra Kazhagam) மற்றும் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி குறித்து திருமாவளவன் கருத்து தெரிவித்திருந்த நிலையில், அவர் இவ்வாறு கூறியுள்ளார். இந்த நிலையில், திருமாவளவனின் பேச்சுக்கு நயினார் நாகேந்திரன் அளித்த பதில் குறித்து விரிவாக பார்க்கலாம்.
பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சி ஒளிபரப்பிற்கு மறுத்த காவல்துறை
சென்னை மெரினா கடற்கரை அருகே உள்ள நடுக்குப்பம் பகுதியில் பிரதமர் நரேந்திர மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சி ஒளிப்பரப்பு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. ஆனால், நிகழ்ச்சிக்கு காவல்துறையிடம் முறையான அனுமதி பெறாத நிலையில், காவதுறையினர் மறுப்பு தெரிவித்தனர். அதனை தொடர்ந்து நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை காவல்துறையினர் அகற்றினர். அதன்பிறகு காவல்துறையினர் உடன் பாஜவினர் பேச்சுவார்த்தை நடத்தியன் அடிப்படையில் வேறு இடத்தில் ஒளிபரப்பு செய்ய அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.
நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பு
Chennai: Tamil Nadu BJP chief Nainar Nagendran says, “Last year, we screened ‘Mann Ki Baat’ and there was no untoward incident. We don’t know why permission was not given for the screening (of Mann Ki Baat) this time in the Nadukuppam area. This area falls in the constituency of… pic.twitter.com/Za7qVCfsNX
— ANI (@ANI) April 27, 2025
அப்போது பேசிய அவர், காஷ்மீர் சம்பவம் உலகையே உலுக்கியுள்ளது. காஷ்மீர் சம்பவம் குறித்து பிரதமர் மனதின் குரல் நிகழ்ச்சியில் மிகவும் உருக்கமாக பேசியுள்ளார். ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் மனதின் குரல் நிகழ்ச்சியில் முக்கியமான நபர்களை தேர்ந்தெடுத்த நினைவுகளை நிகழ்வுகளில் பகிர்ந்து கொள்கிறார். இந்த முறை 126 வது மனிதன் குரல் நிகழ்ச்சியில் மக்களோடு நான் நின்று பார்த்தேன். கடந்த ஆண்டு இதே இடத்தில் நடத்த எங்களுக்கு காவல்துறை அனுமதி இருந்தது. ஆனால், இந்த ஆண்டு அனுமதி வழங்கப்படவில்லை என்று கூறியுள்ளார். துணை முதலமைச்சர் உதயநிதியின் தொகுதியாக இருக்கும் காரணத்தினால் காவல் இணை ஆணையர் பாஜக நிகழ்ச்சி நடத்தக்கூடாது என கூறினாரா என்பது தெரியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
அப்போது, கூட்டணி ஆட்சி அதிகாரத்தில் பங்கு என கூறி கூட்டணிக்கு அழைத்து அதிமுக மற்றும் தவெக கதவுகளை மூடிவிட்டதாக விசிக தலைவர் திருமாவளவன் கூறியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், திருமாவளவன் கூட்டணியில் உள்ளார். அடுத்தவர் வீட்டின் கதவை மூட திருமாவளவன் யார். வேண்டுமானால் திருமாவளவன் அவர் வீட்டு கதவை மூடிக்கொள்ளட்டும் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.