சென்னையில் 18 மின்சார ரயில்கள் ரத்து… எந்தெந்த ரூட்ல தெரியுமா?

Chennai EMU Train Cancelled : சென்னையில் 2025 ஏப்ரல் 12ஆம் தேதியான நாளை மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னையில் 18 மின்சார ரயில்கள் ரத்து... எந்தெந்த ரூட்ல தெரியுமா?

சென்னையில் மின்சார ரயில்கள் ரத்து

Updated On: 

11 Apr 2025 13:16 PM

சென்னை, ஏப்ரல் 11: சென்னையில் 18 மின்சார ரயில்கள் (Chennai EMU Train) 2025 ஏப்ரல் 12ஆம் தேதி ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பயணிகளின் சிரமத்தை போக்க சிறப்பு ரயில்களும் தெற்கு ரயில்வே சார்பில் இயக்கப்படுகிறது. சென்னையில் முக்கிய போக்குவரத்து சேவைகளில் ஒன்றாக இருப்பது  மின்சார ரயில்கள். சென்னையில் உள்ள மின்சார ரயில்கள் நாள்தோறும்  ஆயிரக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர்.

சென்னையில் மின்சார ரயில்கள் ரத்து

மின்சார ரயில்களில்  ஒருநாள் இல்லையென்றால் பயணம் கடும் சிரமப்படுவார்கள். தற்போது, சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கபட்டு – வேளச்சேரி ஆகிய வழித்தடங்களில் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

பயணிகளுக்கு சீரான பயணத்தை வழங்குவதற்கு அவ்வப்போது தெற்கு ரயில்வே சார்பில் பராமரிப்பு பணிகள் மேறகொள்ளப்பட்டு வருகிறது.  பராமரிப்பு பணிகளின்போது  குறிப்பிட்ட வழித்தடங்களில் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவது வழக்கம்.

அந்த வகையில், தற்போது முக்கிய அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. அதன்படி, 2025 ஏப்ரல் 12ஆம் தேதி 18 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி,  சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரயில்கள் ஏப்ரல 12ஆம் தேதி (நாளை) ரத்து செய்யப்படுகிறது.

எந்தெந்த வழித்தடத்தில்?


சென்னை சென்ட்ரல் – கூடுர் ரயில் விழித்தடத்தில் உள்ள பொன்னேரி – கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. இந்த வழித்தடங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 18 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

அதன்படி,  2025 ஏப்ரல் 12ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை என 6 மணி நேரத்திற்கு மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.  அதன்படி,சென்டரலில் இருந்து காலை 10.15, மதியம் 12.10, 1.05 மணிக்கு புறப்பட்டு சூலூர்பேட்டை செல்லும் மின்சார ரயில்களும், மறுமார்க்கத்தில் சூலூர்பேட்டையில் இருந்து காலை 11.45, மதியம் 1.15, மாலை 3.10, இரவு 9 மணிக்கு புறப்பட்டு சென்ட்ரல் நோக்கி செல்லும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

மேலும், சென்னை சென்ட்ரலில் இருநது காலை 10.30, 11.35 மணிக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. கடற்கரையில் இருந்து காலை 9.40, மதியம் 12.40 மணிக்கு புறப்பட்டு, கும்மிடிப்பூண்டி நோக்கி செல்லும் ரயில்கள், கும்மிடிப்பூண்டியில் இருந்து காலை 10.50, மதியம் 2.30, 3.15 மணிக்கு புறப்பட்டு, கடற்கரை செல்லும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.