சென்னையில் கட்டுமான கழிவுகளை வீதிகளில் கொட்டினால் ரூ.5 லட்சம் அபராதம்..

Chennai Corporation: சென்னை மாநகராட்சி, கட்டுமான கழிவுகளை முறையாக பராமரிக்காதவர்களுக்கு ரூ.1,000 முதல் ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கும் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. 20,000 ச.மீ.க்கு மேல் தளங்களில் அதிகபட்ச அபராதம் விதிக்கப்படும். மீறல்களுக்கு 10 நாட்கள் அவகாசம் அளிக்கப்படும், மீண்டும் மீறல் ஏற்பட்டால் பணிகள் நிறுத்தப்படுகின்றன.

சென்னையில் கட்டுமான கழிவுகளை வீதிகளில் கொட்டினால் ரூ.5 லட்சம் அபராதம்..

கட்டுமான கழிவுகளை வீதிகளில் கொட்டினால் ரூ.5 லட்சம் வரை அபராதம்

Published: 

30 Apr 2025 14:12 PM

சென்னை ஏப்ரல் 30: சென்னை மாநகராட்சி (Chennai Corporation), கட்டுமான கழிவுகளை முறையாக கையாளாதவர்களுக்கு ரூ.1,000 முதல் ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கும் புதிய வழிகாட்டுதல்களை (Chennai Municipal Corporation meeting) வெளியிட்டுள்ளது. சென்னையில் தினமும் 800 மெட்ரிக் டன் கழிவுகள் உருவாகின்றன, அவை பெரும்பாலும் முறையற்ற முறையில் பராமரிக்கப்படுகின்றன. 20,000 சதுர மீட்டருக்கு மேல் பரப்பளவு உள்ள தளங்களில் 5 லட்சம் ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்படும். குறைந்த பரப்பளவு தளங்களில் அபராதம் ரூ.1,000 முதல் 25,000 வரை இருக்கும். விதிமீறல்கள் சரிசெய்ய 10 நாட்கள் அவகாசம் அளிக்கப்படும். மீண்டும் மீறல் நிகழ்ந்தால் கட்டுமான பணிகள் நிறுத்தப்படும் என சென்னை மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

காற்று மாசைக் குறைக்கும் அதிரடி நடவடிக்கை – மாநகராட்சியின் புதிய தீர்மானம்

சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் தொடங்கி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. அதில் முக்கியமாக சென்னையில் கட்டுமானப் பணிகள் ஏற்படக் கூடிய காற்று மாசை தவிர்க்க தவறினால் ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியின் எல்லைக்குள் கட்டுமான மற்றும் இடிப்பாட்டுப் பணிகளால் ஏற்படும் கழிவுகளை முறையாக கையாள முடியாத நிலை தொடர்வதை கட்டுப்படுத்தும் நோக்கில், புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இதற்கிணங்க விதிகளை மீறும் நிறுவனங்களுக்கு ரூ.1,000 முதல் ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மாநகராட்சி வழிகாட்டு நெறிமுறைகள்

சென்னையின் 200 வார்டுகளில் தினமும் சுமார் 800 மெட்ரிக் டன் கட்டுமான கழிவுகள் உருவாகின்றன. இவை பெரும்பாலும் முறையற்ற வகையில் வாகனங்களில் ஏற்றி நகரின் பல்வேறு பகுதிகளில் கொட்டப்படுகின்றன. இது காற்று மாசை அதிகரிக்கச் செய்வதுடன், நகர சுகாதாரத்தையும் பாதிக்கிறது.

இந்த சிக்கலை கட்டுப்படுத்தும் வகையில், பொதுமக்கள் ஆலோசனைகளுடன் இணைத்து சுத்தமான மற்றும் பாதுகாப்பான கட்டுமானத்திற்கான வழிகாட்டுதல்கள் (Draft Guidelines) உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பின்பற்றாமல் செயற்படுபவர்கள் மீது அபராதம் விதிக்கப்படும்.

அபராத கட்டண விவரம்

20,000 ச.மீ.க்கு மேல் உள்ள தளங்களில் விதிமீறல் – ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை அபராதம்

500 ச.மீ. முதல் 20,000 ச.மீ. வரை தளங்களில் – ரூ.10,000 முதல் ரூ.25,000 வரை அபராதம்

300 ச.மீ. முதல் 500 ச.மீ. வரை தளங்களில் – ரூ.1,000 முதல் ரூ.10,000 வரை அபராதம்

மீறல்களுக்கு எச்சரிக்கையும், அவகாசமும்

விதி மீறல்கள் நடுத்தர அல்லது குறைந்த முக்கியத்துவம் கொண்டதாக இருந்தால், முதலில் எச்சரிக்கை அறிவிப்பு வழங்கப்படும். இதனை சரிசெய்ய 10 நாட்கள் அவகாசம் அளிக்கப்படும். ஆனால், முக்கியமான விதிமீறல்கள் அல்லது மீண்டும் மீண்டும் மீறல் செய்தாலோ, 15 நாட்களுக்குள் சீர்செய்யப்படாவிட்டாலோ, அபராதத்துடன் கட்டுமான பணிகளை நிறுத்தும் உத்தரவும் பிறப்பிக்கப்படும். இந்த நடவடிக்கைகள் மூலம் நகரில் சுத்தமான சூழலை மேம்படுத்தவும், காற்று மாசினை கட்டுப்படுத்தவும் சென்னை மாநகராட்சி உறுதி மேற்கொண்டுள்ளது.