Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பெண்களுக்கு இனி பாதுகாப்பு.. சென்னையில் வருகிறது ரோபோட்டிக் காப்.. இதுல இவ்வளவு சிறப்பு இருக்கா?

Chennai Red Button Robotic Cop : சென்னையில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், 'ரெட் பட்டன் - ரோபோட்டிக் காப்’ என்ற புதிய சாதனத்தை மாநகர காவல்துறை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த ரோபோட்டிக் காப் சாதனத்தை சென்னையில் 200 இடங்களில் 2025 ஜூன் மாதம் முதல் பொருத்தப்பட உள்ளன.

பெண்களுக்கு இனி பாதுகாப்பு.. சென்னையில் வருகிறது ரோபோட்டிக் காப்..   இதுல இவ்வளவு சிறப்பு இருக்கா?
சென்னையில் ரெட் பட்டன் ரோபோட்டிக் காப் சாதனம்Image Source: X
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 29 Apr 2025 09:54 AM

சென்னை, ஏப்ரல் 29: சென்னையில் பொதுமக்கள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ரோபோட்டிக் காப் (Red Button Robotic Cop) என்ற புதிய பாதுகாப்பு சாதனம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த புதிய சாதனம் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மாநகரில் 200 இடங்களில் ரெட் பட்டன் ரோபோட்டிக் காப் என்ற புதிய சாதனம் பொருத்தப்பட உள்ளதாக மாநகர காவல்துறை (Greater Chennai Police) தெரிவித்துள்ளது.  நாட்டில் பெண்களுக்கு எதிராக குற்றச் செயல்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.

சென்னையில் வருகிறது ரோபோட்டிக் காப்

குழந்தைகள் முதல் பலருக்கு எதிராக குற்றச் செயல்கள் நடந்து வருகிறது. இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தொடர் நடவடிக்கைகைளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் அரங்கேறி வருகிறது.

இந்த நிலையில், தமிழகத்தின் தலைநகரில் சென்னையில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்  புதிய சாதனம் ஒன்றை மாநகர காவல்துறை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது, ’ரெட் பட்டன் – ரோபோட்டிக் காப்’ என்ற சாதனத்தை மாநகர காவல்துறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இந்த ரெட் பட்டன் ரோபோட்டிக் காப் என்ற சிவப்பு நிற பொத்தான் சென்னையில்  2025 ஜூன் மாதம் முதல் 200 இடங்களில் பொருத்தப்பட உள்ளது. இந்த ரெட் பட்டான் ரோபோட்டிக் காப் பொத்தானை சென்னையில் உள்ள ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், வழிபாட்டு தளங்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், பூக்காக்கள் உளிள்டட முக்கிய இடங்களில் நிறுவப்பட உள்ளன.

சிறப்பம்சங்கள் என்னென்ன?


இந்த சிவப்பு நிற பொத்தானை ஆபத்தில் உள்ளள நபர்களோ அல்லது அவர்களுக்கு அருகில் உள்ள நபர்களோ அழுத்தினால் காவல்துறைக்கு உடடியாக அழைப்பு, அருகில் இருப்பவர்களுக்கு எச்சரிக்கை ஒலி, வீடியோ கால் மூலம் காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ள முடியும்.

அதோடு, ரோந்து வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைவார்கள் என மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது. 24 மணி நேரமும் இயக்கக் கூடிய இந்த பாதுகாப்பு சாதனம், 360 டிகிரியில் சாலையின் அனைத்து பகுதிகளையும் கவர் செய்யும் அம்சத்தை கொண்டுள்ளது.

இதுகுறித்து சென்னை நகர காவல் ஆணையர் ஏ.அருண் கூறுகையில், “பெண்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக நாங்கள் தொடர்ச்சியான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலோ அல்லது குற்றச் சம்பவங்கள் நிகழும் பகுதிகளிலோ ரெட்-பட்டன் ரோபோடிக் காப் என்ற கருவியை பொருத்துவோம். இந்த சாதனம் பெண்களின் பாதுகாப்பு பெரிதும் உதவும்” என்றார்.

இந்த பாஸ்வேர்டுகளை 1 விநாடிக்குள் ஹேக் செய்ய முடியும்!
இந்த பாஸ்வேர்டுகளை 1 விநாடிக்குள் ஹேக் செய்ய முடியும்!...
பருப்பு வேகவைக்கும்போது தண்ணீர் வெளியேறுகிறதா? தடுப்பது எப்படி..?
பருப்பு வேகவைக்கும்போது தண்ணீர் வெளியேறுகிறதா? தடுப்பது எப்படி..?...
பழம், காய்கறிகளில் பூச்சிக்கொல்லிகளை கண்டறியும் பயோசென்சார்கள்!
பழம், காய்கறிகளில் பூச்சிக்கொல்லிகளை கண்டறியும் பயோசென்சார்கள்!...
ரீ ரிலீஸாகும் பிரபாஸின் பாகுபலி படம் - எப்போது தெரியுமா?
ரீ ரிலீஸாகும் பிரபாஸின் பாகுபலி படம் - எப்போது தெரியுமா?...
திராவிட மாடல் 2.0-க்கு எதிராக அதிமுக வெர்ஷன் 2026 தயாராகிறது!
திராவிட மாடல் 2.0-க்கு எதிராக அதிமுக வெர்ஷன் 2026 தயாராகிறது!...
இனிமேல் வெயில் இப்படி தான் இருக்கும் - வானிலை ரிப்போர்ட்..
இனிமேல் வெயில் இப்படி தான் இருக்கும் - வானிலை ரிப்போர்ட்.....
வீட்டில் குங்குமம் தயாரிப்பது எப்படி? எத்தனை நாட்கள் பயன்படும்..?
வீட்டில் குங்குமம் தயாரிப்பது எப்படி? எத்தனை நாட்கள் பயன்படும்..?...
சனி பகவானுக்குப் பிடித்த 3 ராசிக்காரர்கள்.. யாருன்னு தெரியுமா?
சனி பகவானுக்குப் பிடித்த 3 ராசிக்காரர்கள்.. யாருன்னு தெரியுமா?...
பள்ளியில் தண்ணீர் தொட்டியில் விழுந்த 4 வயது சிறுமி பலி!
பள்ளியில் தண்ணீர் தொட்டியில் விழுந்த 4 வயது சிறுமி பலி!...
மே 1-ம் தேதி வெளியாகும் 3 படங்களில் எதை முதலில் பார்ப்பீங்க?
மே 1-ம் தேதி வெளியாகும் 3 படங்களில் எதை முதலில் பார்ப்பீங்க?...
’காலனி' என்ற சொல் நீக்கம்.. முதல்வர் ஸ்டாலின் அதிரடி!
’காலனி' என்ற சொல் நீக்கம்.. முதல்வர் ஸ்டாலின் அதிரடி!...