Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

அகவிலைப்படி உயர்வு.. ரூ.5 லட்சம் திருமண முன்பணம்.. அரசு ஊழியர்களுக்கு 9 முக்கிய அறிவிப்புகள்!

CM 110 Announcement in Tamil Nadu Assembly | சட்டப்பேரவையில் இன்று (ஏப்ரல் 28, 2025) அரசு ஊழியர்களுக்கு பலன் அளிக்கும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதில் அரசு ஊழியர்கள் ஈட்டிய விடுப்புக்கு பண பலன் பெறுவது குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அகவிலைப்படி உயர்வு.. ரூ.5 லட்சம் திருமண முன்பணம்.. அரசு ஊழியர்களுக்கு 9 முக்கிய அறிவிப்புகள்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
vinalin-sweety
Vinalin Sweety | Updated On: 28 Apr 2025 13:32 PM

சென்னை, ஏப்ரல் 28 : அரசு ஊழியர்களுக்கான ஈட்டியன் விடுப்பை சரண் செய்யும் (Cash Benefit for Earned Leave) நடைமுறை இந்த ஆண்டே (2025) அமல்படுத்தப்பட உள்ளதாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் (Tamil Nadu Assembly) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஏப்ரல் 28, 2025) அறிவித்துள்ளார். அதன்படி, 01.10.2025 முதல் 15 நாட்கள் வரை ஈட்டிய விடுப்பை அரசு ஊழியர்கள் சரண் செய்து பலன் பெறலாம் என்று 110 விதியின் கீழ் முதலமைச்சர் அறிவித்துள்ளார். அதுமட்டுமன்றி தமிழ்நாடு அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு தொடர்பான முக்கிய அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார். இந்த நிலையில் அரசு ஊழியர்களுக்கு பயனளிக்கும் வகையில் முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்புகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

சட்டப்பேரவையில் அரசு ஊழியர்களுக்கு பலனளிக்கு அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர்

மார்ச் 2025 முதல் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மார்ச் 14, 2025 அன்று 2025 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட் (Tamil Nadu Budget 2025) தாக்கல் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து சட்டப்பேரவையில் துறை ரீதியான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதாவது ஒவ்வொரு நாளும் ஒரு துறையின் மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து, புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஏப்ரல் 30,2025 உடன் முடிவடையும் நிலையில், இன்று (ஏப்ரல் 28, 2025) வழக்கம்போல சட்டப்பேரவை தொடங்கியது. இன்றைய நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு ஊழியர்களுக்கு பலன் அளிக்கும் வகையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

110 விதியின் கீழ் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அரசு ஊழியர்களுக்கான முக்கிய அறிவிப்புகள்

  • ஜனவரி 1, 2025 முதல் அரசு ஊழியர்களுக்கு 2 சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும்.
  • அரசு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று ஈட்டிய விடுப்பை சரண் செய்து பலன் பெறும் நடைமுறை 2025 முதலே அமல்படுத்தப்படும்.
  • அரசு ஊழியர்களுக்கு மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை காலம் முன்பணம் ரூபாய் 10,000-ல் இருந்து ரூபாய் 20,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
  • கல்வி முன்பணமாக தொழிற்கல்விக்கு ரூபாய் 1 லட்சம், காலை, அறிவியல் மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளுக்கு ரூபாய் 50,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
  • திருமண முன் பணமாக அரசு ஊழியர்களுக்கு ரூபாய் 5 லட்சம் வழங்கப்படும்.
  • அரசு ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசு தொகை ரூபாய் 500-ல் இருந்து ரூபாய் 1,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
  • ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை காலம் முன்பணம் ரூபாய் 4,000-ல் இருந்து ரூபாய் 6,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
  • பெண் அரசு ஊழியர்களின் மகப்பேறு விடுப்பு காலங்கள் பதவி உயர்வுக்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
  • 3 வகையான ஓய்வூதியங்கள் குறித்து ஆராய அமைக்கப்பட்டுள்ள குழு செப்டம்பரில் அறிக்கை அளிக்கும்.

இத்தகைய முக்கியமான மற்றும் பயனுள்ள 9 திட்டங்களை முதலமைச்சர் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சூறாவளியாக உருவெடுத்த வைபவ் சூர்யவன்ஷி.. 35 பந்துகளில் சதம்!
சூறாவளியாக உருவெடுத்த வைபவ் சூர்யவன்ஷி.. 35 பந்துகளில் சதம்!...
Video: பயங்கரவாத தாக்குதலின் நடுவே ஜிப்லைனில் பயணித்த இளைஞர்!
Video: பயங்கரவாத தாக்குதலின் நடுவே ஜிப்லைனில் பயணித்த இளைஞர்!...
சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் பட டிரெய்லர் ரிலீஸ்?
சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் பட டிரெய்லர் ரிலீஸ்?...
லாக்கான கதவு... மாட்டிக்கொண்ட ஓனரை காப்பாற்றிய பூனை!
லாக்கான கதவு... மாட்டிக்கொண்ட ஓனரை காப்பாற்றிய பூனை!...
ஆந்திரா பாஜக மாநிலங்களவை வேட்பாளராக வெங்கட சத்தியநாராயணா தேர்வு!
ஆந்திரா பாஜக மாநிலங்களவை வேட்பாளராக வெங்கட சத்தியநாராயணா தேர்வு!...
300 கிராமிற்கு அதிகமாக சிக்கன் சாப்பிட்டால் புற்றுநோய் வருமா?
300 கிராமிற்கு அதிகமாக சிக்கன் சாப்பிட்டால் புற்றுநோய் வருமா?...
கோடைகாலம் உஷார்... கண்களில் இந்த அறிகுறிகள் இருந்தால் கவனிக்கவும்
கோடைகாலம் உஷார்... கண்களில் இந்த அறிகுறிகள் இருந்தால் கவனிக்கவும்...
ஸ்ரேயாவின் ஃபிட்னஸ் ரகசியம் என்ன தெரியுமா? அவரே சொன்ன சீக்ரெட்!
ஸ்ரேயாவின் ஃபிட்னஸ் ரகசியம் என்ன தெரியுமா? அவரே சொன்ன சீக்ரெட்!...
என் பதிவை தவறாக புரிந்து கொண்டோர் கவனத்திற்கு... விஜய் ஆண்டனி
என் பதிவை தவறாக புரிந்து கொண்டோர் கவனத்திற்கு... விஜய் ஆண்டனி...
சொத்து குவிப்பு வழக்கில் சிக்கும் 6 அமைச்சர்கள்.. யார் யார்?
சொத்து குவிப்பு வழக்கில் சிக்கும் 6 அமைச்சர்கள்.. யார் யார்?...
2028 முதல் 94 போட்டிகள்! ஐபிஎல்லில் அதிகரிக்கும் ஆட்டங்கள்..!
2028 முதல் 94 போட்டிகள்! ஐபிஎல்லில் அதிகரிக்கும் ஆட்டங்கள்..!...