Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Breaking News in Tamil Live: குமரி ஆனந்தன் மறைவிற்கு த.வெ.க தலைவர் விஜய் இரங்கல்

இன்று அதிகாலை வயோதிகம் காரணமாக உயிரிழந்த காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி ஆனந்தனுக்கு பல்வேறு தரப்பினரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மகள் தமிழிசை வீட்டில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு முதல்வர் முகஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். இந்நிலையில் தவெக தலைவர் விஜய் அறிக்கை மூலம் இரங்கல் தெரிவித்துள்ளார்.

chinna-murugadoss
C Murugadoss | Updated On: 17 Apr 2025 19:56 PM
Breaking News in Tamil Live: குமரி ஆனந்தன் மறைவிற்கு த.வெ.க தலைவர் விஜய் இரங்கல்
தமிழ் நேரலை செய்திகள்

News in Tamil : இன்று 2025, ஏப்ரல் 09 ஆம் தேதி அதிகாலை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், பாஜகவைச் சேர்ந்த தமிழிசை சவுந்தரராஜனின் தந்தையுமான குமரி ஆனந்தன் காலமானார். அவருக்கு வயது 93. வயோதிகம் காரணமாக கடந்த சில மாதங்களாக உடலிநிலை சரியில்லாமல் இருந்த வருக்கு சிறுநீர பிரச்னையும் சேர்ந்தது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். தொடர் சிகிச்சையில் இருந்த நிலையில் இன்று அதிகாலை அவர் உயிர் பிரிந்தது. அவரின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள், கட்சி தொண்டர்கள் என பலரும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். முன்னாள் பாஜக மாநில தலைவர் தமிழிசை வீட்டில் குமரி ஆனந்தன் உடல் வைக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 09 Apr 2025 05:27 PM (IST)

    குமரி அனந்தன் மறைவு – பிரதமர் மோடி இரங்கல்

    தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான குமரி அனந்தன் வயது மூப்பால் காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில்,  திரு குமரி அனந்தன் அவர்கள், மதிப்புமிகு சமூக சேவைக்காகவும், தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கான ஆர்வத்திற்காகவும் நினைவுகூரப்படுவார். தமிழ் மொழியையும், கலாச்சாரத்தையும் பிரபலப்படுத்துவதற்காகவும் அவர் பல முயற்சிகளை மேற்கொண்டார். அவரது மறைவு வேதனையளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும், தொண்டர்களுக்கும் இரங்கல்கள். ஓம் சாந்தி” என தெரிவித்துள்ளார்.

  • 09 Apr 2025 03:09 PM (IST)

    தமிழ்நாடு வருகை தரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

    மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை (ஏப்ரல் 10) இரவு சென்னை வருகிறார். ஏப்ரல் 11 ஆம் தேதி காலை முதல் மாலை வரை அவர் பல்வேறு தரப்பு பிரமுகர்களையும் சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

  • 09 Apr 2025 12:44 PM (IST)

    குமரி அனந்தன் உடலுக்கு சீமான் நேரில் அஞ்சலி

    வயது மூப்பால் காலமான காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் உடலுக்கு நாம் தமிழர் கட்சியின்  தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் அஞ்சலி செலுத்தினார். குமரி அனந்தன் உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என முன்னதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

  • 09 Apr 2025 11:48 AM (IST)

    ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராக, நாடாளுமன்ற உறுப்பினராக நேர்மையுடன் பணியாற்றியவர். – குமரி ஆனந்தன் மறைவுக்கு விஜய் இரங்கல்

    “ ஆசிரியராகத் தம் வாழ்க்கையைத் தொடங்கி, நம் கொள்கைத் தலைவர் பெருந்தலைவர் காமராஜர் அவர்களுடன் சேர்ந்து பயணித்து மக்கள் சேவையாற்றியவர்; மது ஒழிப்பிற்காகத் தம் வாழ்நாள் முழுவதும் போராடியவர்; தமிழகக் காங்கிரஸ் கட்சியின் தலைவராக, ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராக, நாடாளுமன்ற உறுப்பினராக நேர்மையுடன் பணியாற்றியவர். – குமரி ஆனந்தன் மறைவுக்கு விஜய் இரங்கல்

  • 09 Apr 2025 11:47 AM (IST)

    குமரி ஆனந்தன் மறைவுக்கு விஜய் இரங்கல்

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி ஆனந்தனின் மறைவிற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Published On - Apr 09,2025 11:46 AM

10 வருடத்தைக் கடந்த துல்கர் சல்மானின் ஓ காதல் கண்மணி..!
10 வருடத்தைக் கடந்த துல்கர் சல்மானின் ஓ காதல் கண்மணி..!...
கோடைகாலத்தில் குழந்தைகளை பாதிக்கும் 3 நோய்கள் !
கோடைகாலத்தில் குழந்தைகளை பாதிக்கும் 3 நோய்கள் !...
ஜனாதிபதிக்கு உச்சநீதிமன்றம் காலக்கெடு நிர்ணயிக்க முடியுமா?
ஜனாதிபதிக்கு உச்சநீதிமன்றம் காலக்கெடு நிர்ணயிக்க முடியுமா?...
கோடைகாலத்தில் வெங்காயம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!
கோடைகாலத்தில் வெங்காயம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!...
உதடுகள் வறண்டு வெடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்..?
உதடுகள் வறண்டு வெடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்..?...
மணி ஹெய்ஸ்ட் படத்தின் தமிழ் ரீமேக்கா கேங்கர்ஸ் படம்?- சுந்தர் சி!
மணி ஹெய்ஸ்ட் படத்தின் தமிழ் ரீமேக்கா கேங்கர்ஸ் படம்?- சுந்தர் சி!...
வெற்றிமாறன் வழிகாட்டுதலில் ஐபோனில் உருவாகும் சினிமா !
வெற்றிமாறன் வழிகாட்டுதலில் ஐபோனில் உருவாகும் சினிமா !...
96 ஆண்டுகளாகக் குழந்தைகள் பிறக்காமல் இருக்கும் நாடு எது தெரியுமா?
96 ஆண்டுகளாகக் குழந்தைகள் பிறக்காமல் இருக்கும் நாடு எது தெரியுமா?...
குடியரசுத் தலைவர் கையால் அஜித் குமாருக்குப் பத்ம பூஷன் விருது!
குடியரசுத் தலைவர் கையால் அஜித் குமாருக்குப் பத்ம பூஷன் விருது!...
மாமல்லபுரம்: ஏப்ரல் 18ல் இலவச சுற்றுலா அனுமதி
மாமல்லபுரம்: ஏப்ரல் 18ல் இலவச சுற்றுலா அனுமதி...
மீண்டும் அந்த இயக்குநருடன் இணைகிறாரா ரஜினிகாந்த்?
மீண்டும் அந்த இயக்குநருடன் இணைகிறாரா ரஜினிகாந்த்?...