ஆட்சியில் பங்கு உண்டா? அதிமுக கூட்டணி குறித்து பதிலளித்த நயினார் நாகேந்திரன்!
Nainar Nagendran replied to Edappadi Palaniswami | 2026 சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் மட்டுமே அங்கம் வகிப்போம் , ஆட்சி பங்கு குறித்து தாங்கள் பேசவில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருந்த நிலையில், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அதற்கு விளக்கம் அளித்துள்ளார். இந்த நிலையில், இது குறித்து அவர் கூறியது என்ன என பார்க்கலாம்.

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்
சென்னை, ஏப்ரல் 17 : பாரதிய ஜனதா கட்சியுடன் (BJP – Bharatiya Janata Party) கூட்டணியில் அங்கம் வகிப்போம் என்று கூறினோம். கூட்டணி ஆட்சி என்று கூறவில்லை என அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக (AIADMK – All India Anna Dravida Munnetra Kazhagam) பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்த நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயலாளர் நயினார் நாகேந்திரன் அதற்கு விளக்கம் அளித்துள்ளார். இந்த நிலையில், எடப்பாடி பாழனிசாமியின் கருத்துக்கு நயினார் நாகேந்திரன் அளித்த விளக்கம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
2026 சட்டமன்ற தேர்தலை கூட்டணியுடன் சந்திக்கும் பாஜக
2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைத்து களம் கண்ட நிலையில், 2026 சட்டமன்ற தேர்தலிலும் அதே கூட்டணி தொடர உள்ளது. இது குறித்து உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா அண்மையில் அறிவித்து இருந்தார். கடந்த சில நாட்களுக்கு தமிழகம் வந்த அமித்ஷா, பாஜக மாநில தலைவர் தேர்தல் உள்ளிட்ட முக்கிய பணிகளை கண்காணிக்கும் வகையில் இரண்டு நாட்கள் பயணமாக சென்னை வந்திருந்தார். அப்போது நடைபெற்ற நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிலையில், இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார்.
கூட்டணி ஆட்சி – திட்டவட்டமாக மறுத்த எடப்பாடி பழனிசாமி
அதிமுக பாஜக இடையே கூட்டணி அமைந்துள்ள நிலையில், 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி ஆட்சி அமையும் என்று பாஜகவினர் சிலர் கூறி வருகின்றனர். இதன் காரணமாக, இதுவரை இல்லாத ஒரு புதிய விதிக்கு அதிமுக ஒப்பந்தம் செய்திருப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி அந்த கருத்துக்கு திட்டவட்டமாக மறுத்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் பல்வேறு கெஏள்விகள் எழுப்பப்பட்டன. அதாவது பாஜக உடன் அதிமுக கூட்டணி அமைத்ததன் மூலம் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி வருமா என அவர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.
இந்த நிலையில், அதற்கு பதில் அளித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, பாஜகவுடன் கூட்டணியில் அங்கம் வகிப்போம் என்று கூறினோம். கூட்டணி ஆட்சி என்று கூறவில்லை என கூறினார். அவரின் இந்த பதில் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பதில் அளித்துள்ளார். அது குறித்து கூறியுள்ள அவர், இந்த விவகாரத்தில் எங்கள் கட்சியின் தலைமை தான் முடிவு செய்யும். ஏனெனில் அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது எங்கள் கட்சியில் தேசிய தலைமை தான். அது குறித்து அவர்கள் இருவரும் பேசி முடிவு செய்வர் என்றும் அவர் கூறியுள்ளார்.