Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

2026-ல் விஜய் கட்சி இரண்டாவது இடத்தை பிடிக்கலாம்.. தமிழிசை சௌந்தரராஜன் கருத்து!

Tamilisai Soundararajan About 2026 Election | 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா காட்சி மற்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் இரண்டாவது இடத்தைப் பிடிக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

2026-ல் விஜய் கட்சி இரண்டாவது இடத்தை பிடிக்கலாம்.. தமிழிசை சௌந்தரராஜன் கருத்து!
தமிழிசை செளந்தரராஜன்
vinalin-sweety
Vinalin Sweety | Updated On: 15 Apr 2025 07:56 AM

சென்னை, ஏப்ரல் 15 : 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் (2026 Tamil Nadu Assembly Election) பாரதிய ஜனதா கட்சி (BJP – Bharatiya Janata Party) மற்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக (AIADMK – Anaithinthiya Anna Dravida Munnetra Kazhagam) கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் என்றும், விஜய்யின் தமிழக வெற்றி கழகம் (TVK – Tamilaga Vetri Kazhagam) இரண்டாவது இடத்தை பிடிக்கலாம் என்றும் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும் பொதுக்குழு உறுப்பினருமான தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று (ஏப்ரல் 14, 2025) செய்தியார்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். இந்த நிலையில், செய்தியாளர் சந்திப்பில் சட்டமன்ற தேர்தல் குறித்து தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

சட்டமன்ற தேர்தலை அதிமுக கூட்டணியுடன் சந்திக்கும் பாஜக

2021 சட்டமன்ற தேர்தலை பாஜக – அதிமுக கூட்டணி அமைத்து சந்தித்தது. ஆனால், இந்த தேர்தலில் பாஜக – அதிமுக கூட்டணி தோல்வியை தழுவிய நிலையில், தேர்தலுக்கு பிறகு சில காலம் கழித்து கூட்டணியும் முறிந்தது. தற்போது 2026-ல் தமிழகத்தில் மீண்டும் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதிமுக – பாஜக கூட்டணி மீண்டும் கைகோர்த்து உள்ளது. முன்னதாக பாஜக அதிமுக உடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தால், மாநில தலைவர் பதவியில் இருந்து விலகுவேன் என்று அண்ணாமலை அறிவித்திருந்தார்.

தற்போது அதிமுக உடன் பாஜக கூட்டணி அமைத்துள்ள நிலையில், அவர் மாநில தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ளார். இந்த நிலையில், தற்போது புதிய மாநில தலைவராக பதவி ஏற்றுள்ள நயினார் நாகேந்திரனின் தலைமையில் 2026 சட்டமன்ற தேர்தலை சந்திக்க பாஜக தயாராகி வருகிறது. எப்படியாவது தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என பாஜக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், 2026-ல் பாஜக கூட்டணி தான் ஆட்சி அமைக்கும் என்று தமிழிசை சௌந்தரராஜன் உறுதி அளித்துள்ளார்.

2026 சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி தான் ஆட்சி அமைக்கும் – தமிழிசை

நேற்று (ஏப்ரல் 15, 2025), பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன், 2026-ல் பாஜக பங்கேற்கும் கூட்டணி ஆட்சி தான் இருக்கும் என்று சொன்ன நாள் முதல் திமுகவில் உள்ள அனைவருக்கும் தூக்கம் போய்விட்டது என்றும் திமுக அமைத்திருப்பது பொருந்தாத கூட்டணி என்றும் கூறியுள்ளார். தொடர்ந்து பேசி அவர், பாஜக அமைத்திருப்பது மக்கள் நல கூட்டணி, தேர்தலில் இரண்டாவது இடத்தை பிடிக்கத்தான் விஜய்க்-கும் திமுகவு-க்கும் போட்டி என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், விஜய் இரண்டாவது இடத்தை பிடிக்கலாம் என்றும் நாங்கள் முதல் இடத்திற்கு வருவோம் என்றும் அவர் உறுதியாக கூறியுள்ளார்.

தக் லைஃப் படத்தின் முதல் சிங்கிள் ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ!
தக் லைஃப் படத்தின் முதல் சிங்கிள் ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ!...
STR49 படத்தில் சிம்புவுடன் சந்தானம் நடிப்பது உறுதி?
STR49 படத்தில் சிம்புவுடன் சந்தானம் நடிப்பது உறுதி?...
ஊட்டி, கொடைக்கானலில் 28 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை !
ஊட்டி, கொடைக்கானலில் 28 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை !...
சைலண்டாக திருமணத்தை முடித்த தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே!
சைலண்டாக திருமணத்தை முடித்த தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே!...
இறுதிக்கட்டத்தில் இட்லி கடை ஷூட்டிங்.. எங்கே நடக்குது தெரியுமா?
இறுதிக்கட்டத்தில் இட்லி கடை ஷூட்டிங்.. எங்கே நடக்குது தெரியுமா?...
சஸ்பென்ஸ் த்ரில்லர்.. எமகாதகி படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ!
சஸ்பென்ஸ் த்ரில்லர்.. எமகாதகி படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ!...
ஃபேமிலி காரை தேடுகிறீர்களா? 8 லட்சத்திற்குள் டாப் 5 கார்கள் இதோ!
ஃபேமிலி காரை தேடுகிறீர்களா? 8 லட்சத்திற்குள் டாப் 5 கார்கள் இதோ!...
வக்ஃப் சட்டம்.. மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!
வக்ஃப் சட்டம்.. மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!...
சரத்குமார் படத்தில் விருப்பமே இல்லாமல் நடித்த வடிவேலு...
சரத்குமார் படத்தில் விருப்பமே இல்லாமல் நடித்த வடிவேலு......
அமெரிக்கா: பேஸ்புக்கில் மனித எலும்புகள் விற்பனை செய்த பெண்
அமெரிக்கா: பேஸ்புக்கில் மனித எலும்புகள் விற்பனை செய்த பெண்...
அறிகுறியே இல்லாமல் கண் பார்வையை பறிக்கும் நோய் - தடுப்பது எப்படி?
அறிகுறியே இல்லாமல் கண் பார்வையை பறிக்கும் நோய் - தடுப்பது எப்படி?...