ஏப்ரல் 14 வரை தமிழ்நாட்டின் இந்த பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு!
Bay of Bengal Depression: வளிமண்டல சுழற்சி வலுப்பெறும் நிலையில் 2025 ஏப்ரல் 14 வரை தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்புள்ளது. வங்கக் கடலில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக, புதுக்கோட்டை, தஞ்சாவூர், காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சில இடங்களில் வெப்பநிலை 2-3° செல்சியஸ் உயரக் கூடும் எனவும், இடைக்கிடையாக இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு ஏப்ரல் 09: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி (Atmospheric circulation) வலுப்பெறுவதால் வரும் 2025 ஏப்ரல் 14 ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்புள்ளது. வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி (A deep depression over the Bay of Bengal) மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் 2025 ஏப்ரல் 14ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் (Meteorological Observatory) தெரிவித்துள்ளது. குறிப்பாக, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வு பகுதிகளின் தாக்கம் காரணமாக, தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வெப்பநிலை உயரும் நிலையில் இதன் இடையே மழை நிகழ்வுகளும் எதிர்பார்க்கப்படுகின்றன.
தற்போதைய வானிலை நிலவரம்
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் இல்லை. ஆனால் தமிழகத்தின் சில பகுதிகளில் வெப்பநிலை இயல்பைவிட 2-3° செல்சியஸ் குறைவாக இருந்தது. வட தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் வறண்ட வானிலை நிலவுகின்றது; தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பதிவாகியுள்ளது.
வெப்பநிலை உயர்வு – முன்னறிவிப்பு
08-04-2025 முதல் 10-04-2025 வரை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3° செல்சியஸ் வரை உயரக்கூடும். 36°C முதல் 39°C வரை வெப்பநிலை வடதமிழக சமவெளி பகுதிகளில் பதிவாகும் எனவும், தென் தமிழகத்தில் 34°C முதல் 35°C வரை இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலோரப்பகுதிகளில் 33°C–36°C, மலைப்பகுதிகளில் 21°C–31°C வரை வெப்பநிலை பதிவாகும்.
வானிலை மாற்றத்திற்கு காரணம்
வங்கக் கடலின் மத்திய பகுதியில் 2028 ஏப்ரல் 7 ஆம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, 08-04-2025 காலை வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு மற்றும் மத்தியமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று, மத்திய வங்கக்கடல் பகுதிகளுக்கு நகரும் எனவும், அதன் பின் படிப்படியாக வலுக்குறைந்துவிடும் எனவும் கணிக்கப்படுகிறது.
சென்னையில் நிலவும் வானிலை
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இன்று ஏப்ரல் 9 ஆம் தேதி சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35°C–36°C மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28°C ஆக இருக்கலாம்.
அடுத்த 6 நாட்களுக்கு வானிலை முன்னறிவிப்பு
09-04-2025 முதல் 10-04-2025 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
11-04-2025 மற்றும் 12-04-2025: இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
13-04-2025 மற்றும் 14-04-2025: மீண்டும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வானிலை மையம் வெளியிட்டுள்ள எச்சரிக்கையின்படி, அதிக வெப்பநிலையும் அதிக ஈரப்பதமும் இருப்பதால், சில பகுதிகளில் மக்கள் அசௌகரியத்தை எதிர்கொள்ள நேரிடக்கூடும்.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வு பகுதிகளின் தாக்கம் காரணமாக, தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வெப்பநிலை உயரத்துடனே, இடையே மழை நிகழ்வுகளும் எதிர்பார்க்கப்படுகின்றன. பொதுமக்கள் சுகாதாரம் மற்றும் பயணத்திற்கான தேவைகளை முன்னிட்டு, வானிலை மாற்றங்களை கவனத்தில் கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகிறது.