திருவாலங்காடு அருகே ரயில் தண்டவாளத்தில் சதி முயற்சி: அதிவிரைவு ரயில்கள் நிறுத்தப்பட்டதால் விபத்து தவிர்ப்பு
Thiruvallur District: திருவள்ளூர் மாவட்டம் அரிச்சந்திராபுரத்தில் 2025 ஏப்ரல் இன்று அதிகாலை, ரயில் எக்ஸ்பிரஸ் பாதையில் மர்மமாக போல்டுகள் அகற்றப்பட்டதால் சிக்னல் தடை ஏற்பட்டது. இதனால் பல அதிவிரைவு ரயில்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. போலீசார் சதி முயற்சி கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர் ஏப்ரல் 25: திருவள்ளூர் மாவட்டம் (Thiruvallur) திருவாலங்காடு (Thiruvalangadu) அருகே, சென்னை-அரக்கோணம் ரயில் பாதையில் (Railway Express) எக்ஸ்பிரஸ் லைன் கிளிப்பிங் பகுதியில் போல்டுகள் மர்மமாக அகற்றப்பட்டன. இதனால் சிக்னல் தடை ஏற்பட்டதுடன், பல அதிவிரைவு ரயில்கள் தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டதால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. சம்பவம் 2025 ஏப்ரல் 25 இன்று அதிகாலை 2 மணிக்கு அரிச்சந்திராபுரம் பகுதியில் நடைபெற்றது. தடயங்களை சேகரிக்க கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்கள் கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழியில் பல மாநிலங்களுக்கு விரைவு ரயில்கள் இயக்கப்படுவதால் சம்பவம் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சதி முயற்சியாக இருந்ததா என்ற கோணத்தில் ரயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரயில் பாதையில் இரும்பு போல்டுகள் அகற்றம்
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ரயில்வே நிலையம் அருகே உள்ள அரிச்சந்திராபுரம் பகுதியில் இன்று ஏப்ரல் 25 அதிகாலை 2 மணி அளவில் பரபரப்பான சம்பவம் ஒன்று இடம்பெற்றது. சென்னை-அரக்கோணம் ரயில் பாதையில், எக்ஸ்பிரஸ் லைன் இணைப்பு பகுதியில் (கிப்ளிங் பகுதியில்) மர்ம நபர்கள் சிலர் இரும்பு போல்டுகளை அகற்றியுள்ளனர். இது ரயில்வே பாதுகாப்புக்கு எதிரான ஒரு சதி முயற்சியாக சந்தேகிக்கப்படுகிறது.
அதிவிரைவு ரயில்கள் தண்டவாளத்தில் நிறுத்தம்
இந்த சம்பவத்தினால் ரயில்களில் சிக்னல் கிடைக்காமல், பல அதிவிரைவு ரயில்கள் தண்டவாளத்தில் ஆங்காங்கே நிறுத்தப்பட வேண்டியுள்ளது. இதன் காரணமாக ஒரு பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. சம்பவம் நடைபெற்ற இடத்தில் நேற்றிரவு 11.30 மணிக்கு ஒரு சரக்கு ரயில் சென்றிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் பிறகு தானே சிக்னல் கோளாறுகள் தொடங்கியதாக கூறப்படுகிறது.
சிக்னல் கோளாறு சரிசெய்ய தண்டவாளம் பரிசோதனை
பின்னர், சிக்னல் கோளாறு சரிசெய்ய தண்டவாளம் பரிசோதனை செய்யப்பட்டபோது கிப்ளிங் பகுதியில் போல்டுகள் அகற்றப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அரக்கோணம் ரயில்வே அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்ட மற்றும் அரக்கோணம் ரயில்வே போலீசார் இணைந்து, 50-க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர். கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்கள் கொண்டு தடயங்கள் சேகரிக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
தண்டவாளத்தில் நடக்கும் சீரமைப்பு பணிகள்
இந்த வழியில் மும்பை, பெங்களூரு, மைசூர், மங்களூரு, திருவனந்தபுரம், எர்ணாகுளம் போன்ற நகரங்களை நோக்கி செல்லும் பல அதிவிரைவு ரயில்கள் இயங்கும் காரணத்தால் இந்த சம்பவம் மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. தற்போது பாதிக்கப்பட்ட தண்டவாளத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதே சமயம், ரயில்கள் மெதுவாக செல்ல அனுமதிக்கப்படுகின்றன.
சதி முயற்சியாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை
சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதி உள்ளதைக் குறிப்பிட்டு, இது சதி முயற்சியாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிப்ளிங் போல்டுகள் அகற்றப்பட்ட சம்பவம் ரயில்வே துறையிலும் பொதுமக்களிடையிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.