சமத்துவத்தை நோக்கி நாம் எல்லோரும் நகர வேண்டும்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
MK Stalin's Chennai Speech on Social Equality | சட்ட மேதை அம்பேதகரின் 135வது பிறந்த நாள் இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற சமத்துவ நாள் விழாவில் பங்கேற்று உரையாற்றியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமத்துவம் குறித்து உரையாற்றி உள்ளார். அவர் பேசியது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

சென்னை, ஏப்ரல் 14 : சமூகத்தில் நிலவும் சாதியை ஏற்றத்தாழ்வுகள், தீண்டாமை குற்றங்களுக்கு எதிராக முழங்கியவர் அம்பேத்கர் (Ambedkar) என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (M.K.Stalin) பேசியுள்ளார். அண்ணல் அம்பேத்கரின் 135 வது பிறந்த நாளை (Ambedkar 135 Birthday) முன்னிட்டு இன்று (ஏப்ரல் 14, 2025) சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற சமத்துவ நாள் விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேடையில் பேசும்போது இவ்வாறு கூறியுள்ளார். இந்த நிலையில், சமத்துவ நாள் விழாவில் முதலமைச்சர் பேசியது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படும் அம்பேத்கர் பிறந்த நாள்
அரசியல் சாசனத்தின் தந்தை என அழைக்கப்படும் அண்ணம் அம்பேத்கரின் 135வது பிறந்த நாள் இந்தியா முழுவதும் இன்று (ஏப்ரல் 14, 2025) சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் உள்ள முக்கிய கட்சிகளின் தகைவர்களான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, தவெக தலைவர் விஜய் உள்ளிட்டோர் அம்பேத்கரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிலையில் அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு சுமார் ரூ.322 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஏப்ரல் 14, 2025) தொடங்கி வைத்தார்.
அதாவது சென்னை சைதாப்பேட்டையில் உள்ள எம்.சி ராஜா கல்லூரி மாணவர் விடுதி வளாகத்தில் ரூ.44.50 கோடி மதிப்பிலான 10 மாடி கொண்ட தங்கும் விடுதியை திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து, ரூ.277 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள மாணவ, மாணவிகளுக்கான 18 விடுதிகள், 46 பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுகள், 22 கல்லூரி விடுதிகள், 19 சமுதாய நலக்கூடங்கள் மற்றும் 1,000 பழங்குடியினர் குடியிருப்புகள் ஆகியவற்றை திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து விழா மேடையில் அவர் உரையாற்றினார்.
சமத்துவத்தை நோக்கி நாம் எல்லோரும் நகர வேண்டும் – மு.க.ஸ்டாலின்
சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற சமத்துவ நாள் விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேடையில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், தீண்டாமையை எதிர்த்து வரலாற்றை மாற்றியவர் அம்பேத்கர். சமத்துவத்தை நோக்கி நாம் எல்லோரும் நகர வேண்டும். அம்பேக்தரின் கொள்கைகளை உயர்த்தி பிடித்துக் கொண்டிருக்கிறது தமிழ்நாடு. திராவிட மாடல் அரசு அம்பேத்கரை தூக்கி பிடித்து போற்றி வருகிறது என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய முதலமைச்சர், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு பல்வேறு திட்டங்களை தமிழக ஆரசு செயல்படுத்தி வருகிறது. வெளிநாடுகளில் 174 மாணவர்கள் முதுகலை ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் 625 பயனாளிகளுக்கு ரூ.30 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது. அரசினுடைய முத்திரை திட்டமான கட்டணம் இல்லா விடியல் பயண திட்டத்தில் அதிகம் பயனடைய கூடியவர்கள் ஆதி திராவிடர் சமூகத்தை சேர்ந்த சகோதரிகள் தான் என்று அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.