கேரள அரசை எதிர்த்து தீர்மானம் வருமா…? முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி சவால்

Demands Assembly Resolution: அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, தமிழக முதல்வர் ஸ்டாலினை கடுமையாக விமர்சித்து, நீர்வள உரிமைகள் குறித்து தனித் தீர்மானம் கொண்டு வர சவால் விட்டார். காவிரி, முல்லைப் பெரியாறு விவகாரங்களில் செயலற்ற நிலையில் தமிழகம் உள்ளதாக குற்றம்சாட்டினார். திமுக அரசு மக்களின் நலனுக்கே எதிராக செயல்படுகிறது என்றும் விமர்சித்தார்.

கேரள அரசை எதிர்த்து தீர்மானம் வருமா...? முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி சவால்

முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி சவால்

Published: 

11 Apr 2025 16:39 PM

தமிழ்நாடு ஏப்ரல் 11: திராவிட முன்னேற்ற கழக தலைவர் மு.க ஸ்டாலின் (Dravida Munnetra Kazhagam leader M.K. Stalin) மீது கடும் விமர்சனத்தை ஏற்றி முன் வைத்துள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி (AIADMK general secretary Palaniswami). ‘‘கர்நாடக காங்கிரஸ் முதல்வர் மற்றும் துணை முதல்வருடன் கூட்டங்களில் பங்கேற்று, காவிரி நதி விவகாரம் குறித்து பேச முடியாத நிலைமையா ஸ்டாலினுக்கு ஏற்பட்டுள்ளது என்ற அவர், கேரள கம்யூனிஸ்ட் முதல்வருடன் மேடைகளை பகிர்ந்து கொண்டு, முல்லைப் பெரியாறு பிரச்சனையை விவாதிக்க முடியவில்லையா என்றார். 2009-ஆம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டு வரை காங்கிரசின் யுபிஏ ஆட்சியில் அடிமைத்தனமாக நடந்துகொண்டதையே இன்றும் தொடர்கிறீர்கள்’’ என்று சாடினார். மேலும், தமிழகத்தின் நீர்வள உரிமைகளுக்கு எதிராக செயல்படும் கர்நாடக மற்றும் கேரள அரசுகளை கண்டித்து சட்டப்பேரவையில் தனி தீர்மானம் கொண்டு வர ஸ்டாலின் தலைமையிலான அரசுக்கு அவர் சவால் விடுத்தார்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அறிக்கை

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, ”தமிழக அரசின் செயல்பாடுகள் மக்களின் நலனுக்கு எதிரானவை. தனித் தீர்மானம் கொண்டு வரக் கூடிய பல்வேறு விவகாரங்களில் உடனடியாக சட்டசபையில் தீர்மானம் கொண்டு வாருங்கள்; அதனை நாங்கள் எப்படி எதிர்கொள்கிறோம் என்பதைக் காணலாம்” என்கிறார்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘ஒரு அரசின் அடையாளம், அதன் ஆட்சியில் நடைமுறையில் வந்த மக்களின் நலத்திட்டங்களாகும். ஆனால் தற்போதைய திமுக ஆட்சி, சட்ட ஒழுங்கு சீர்கேடு, பெண்களின் பாதுகாப்பு பற்றிய குறைகள், போதைப்பொருள் பரவல், ஊழல் ஆகியவற்றின் பிரதிநிதியாக தான் உள்ளது. இந்த அதிருப்தியையும் குறைகளையும் மறைக்கத்தான் கடந்த ஒரு மாதமாக ஸ்டாலின் நாடக அரசியலில் ஈடுபட்டுள்ளார்’’ எனக் குற்றம்சாட்டுகிறார்.

‘சோத்துல கல்லு இருக்கு’: பழனிசாமி

 

‘சோத்துல கல்லு இருக்கு’: பழனிசாமி

முதல்வர் ஸ்டாலின் கொண்டு வரும் தீர்மானங்களை கிண்டலாகக் கூறிய அவர், ‘‘கவுண்டமணியின் நகைச்சுவையைப் போல் இலையில் செங்கல் வைத்து ‘சோத்துல கல்லு இருக்கு’ என்பதுபோலத்தான் இவை. கருணாநிதி காலத்து டெக்னிக்குகள் இன்று செல்லுபடியாகும் என்று நம்புவது எப்படிச் சரி? காவிரி நதிநீர் உரிமையைப் பற்றிய ஒரு தீர்மானம் கூட இன்று வரவில்லை’’ என விமர்சித்தார்.

காவிரி குறித்து பேசமுடியாத நிலைமை ஸ்டாலினுக்கு ஏற்பட்டுள்ளதா?: பழனிசாமி

மேலும், ‘‘கர்நாடக காங்கிரஸ் முதல்வர், துணை முதல்வருடன் கூட்டங்களில் கலந்து கொண்டு காவிரி குறித்து பேசமுடியாத நிலைமை ஸ்டாலினுக்கு ஏற்பட்டுள்ளதா? கேரள கம்யூனிஸ்ட் முதலமைச்சருடன் மேடைகளை பகிர்ந்து கொண்டு, முல்லைப் பெரியாறு குறித்து பேசமுடியாத நிலைமையா இது? 2009-14 UPA ஆட்சியில் காங்கிரசுக்கு அடிமைப்பட்டதையே இன்று தொடர்கிறீர்கள்’’ என்றார்.

அதிமுகவுக்கு எதிராக பேச உங்களுக்கு என்ன நியாயம் இருக்கிறது?: பழனிசாமி

‘‘இலங்கை இறுதிப் போர், 2ஜி ஊழல், அறிவாலய ரெய்டுகள் என எல்லாவற்றிலும் உங்கள் கட்சி கொண்டிருந்த நிலைமைகளை மக்கள் மறந்துவிடவில்லை. நீட் தேர்வை அறிமுகப்படுத்தியது கூட உங்கள் கட்சியின் மத்திய இணை அமைச்சர் என்பதையும் மறக்க முடியாது’’ எனக் குற்றம்சாட்டிய அவர், ‘‘அதிமுகவுக்கு எதிராக பேச உங்களுக்கு என்ன நியாயம் இருக்கிறது?’’ என வினவினார்.

கர்நாடக மற்றும் கேரள அரசுகளை கண்டித்து தீர்மான வருமா?

தமிழகத்தின் உரிமைகளுக்கு எதிராக செயல்படும் கர்நாடக மற்றும் கேரள அரசுகளை கண்டித்து, அதனை எதிர்க்கும் தனித் தீர்மானத்தை சட்டசபையில் கொண்டு வாருங்கள் என்று ஸ்டாலின் தலைமையிலான அரசுக்கு நேரடியாக சவால் விடுத்தார். அமைச்சரான நேருவுக்காக தயாரிக்கப்பட்ட ‘தொட்டுப் பார் – சீண்டிப் பார்’ வீடியோ எப்போது வெளியாவதாகும் என்றும், அது மக்களுக்கு ஒரு நகைச்சுவையாக அமையும் என்பதால் தவறாமல் வெளியிட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.