பாஜகவுடன் கூட்டணி ஆட்சியா? அமித் ஷாவுக்கு அதிர்ச்சி.. எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பதில்!

Edappadi Palaniswami: தமிழகத்தில் பாஜகவுடன் கூட்டணி தான்.. கூட்டணி ஆட்சி கிடையாது என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தள்ளார். கடந்த வாரம் சென்னை வந்த அமித் ஷா, அதிமுக பாஜக கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்த நிலையில், இதற்கு எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.

பாஜகவுடன் கூட்டணி ஆட்சியா? அமித் ஷாவுக்கு அதிர்ச்சி.. எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பதில்!

எடப்பாடி பழனிசாமி - அமித் ஷா

Updated On: 

16 Apr 2025 12:07 PM

சென்னை, ஏப்ரல் 16: தமிழகத்தில் பாஜகவுடன் கூட்டணி (AIADMK BJP Alliance) தான்.. கூட்டணி ஆட்சி கிடையாது என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி (Edappadi Palaniswami) தெரிவித்தள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “கூட்டணியில் அங்கம் வகிப்போம் என்று கூறினோம். கூட்டணி ஆட்சி என்று கூறவில்லை. நாங்கள் யாருடன் கூட்டணி வைத்தால் திமுகவுக்கு ஏன் எரிச்சல்? திமுகவுக்கு பயம். தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என்று அமித் ஷாவும் கூறவில்லை.

பாஜகவுடன் கூட்டணி ஆட்சியா?

டெல்லிக்கு பிரதமர் மோடி, தமிழ்நாட்டுக்கு எடப்பாடி பழனிசாமி என்று அமித் ஷா கூறினார்” என்று தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இன்னும் தேர்தலுக்கு ஓராண்டு இருக்கும் சூழலில், இப்போதே அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

குறிப்பாக, கூட்டணி சலசலப்பு இருந்து வருகிறது. தமிழகத்தில் திமுக கூட்டணி பலமாக இருக்கும் நிலையில், அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்தது.  சமீபத்தில் சென்னை வந்த அமித் ஷா, தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான் நடக்கும் என்றும் அதற்கு எடப்பாடி பழனிசாமி தான் தலைமை தாங்குவார் என்றும் அமித் ஷா தெரிவித்திருந்தார்.

அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்தற்கு திமுக விமர்சித்தது. இந்த நிலையில்,  கூட்டணி குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி 2025 ஏப்ரல் 16ஆம் தேதியான இன்று விளக்கம் அளித்துள்ளார்.  சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை எடப்பாடி பழனிசாமி சந்தித்தார்.

எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பதில்

அப்போது அவரிடம் பாஜக உடனான கூட்டணியில் அதிகாரத்திலும் பங்கு உண்டா என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, ”கூட்டணி ஆட்சி என்று கூறவில்லை. தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்று அமித் ஷாவும் கூறவில்லை.

டெல்லிக்கு பிரதமர் மோடி. தமிழ்நாட்டுக்கு எடப்பாடி பழனிசாமி என அமித் ஷா தெளிவாக கூறினார்.  தமிழகத்தில் பாஜகவுடன் கூட்டணி..  பாஜகவுடன் கூட்டணி ஆட்சி கிடையாது”  என்று திட்டவட்டமாக கூறினார்.

மேலும், “அதிமுகவின் கூட்டணி பற்றி பேச திமுகவிற்கு அருகதை இல்லை. தங்கள் கூட்டணியை பார்த்து திமுகவிற்கு ஏன் எரிச்சலும், பயமும் வருகிறது? பாஜக உடனான கூட்டணி என்பது திமுகவிற்கு எதிரான வாக்குகள் சிதறக்கூடாது என்பதற்கு தான். தேர்தலுக்கு ஒன்னும் ஓராண்டு உள்ளதால் அதிமுக கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் சேரும். அது யார் யார் என்பதை இப்போது சொல்ல முடியாது” என்று கூறினார். தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும் என அமித் ஷா கூறிய நிலையில், அதனை எடப்பாடி பழனிசாமி மறுத்து இருப்பது  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.