Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

60 ஆண்டு கனவு நிறைவுவேறுமா..? திண்டுக்கல்-சபரிமலை அகல ரயில்பாதை திட்டம் எப்போது வரும்?

Southern Railway Consultation: திண்டுக்கல்-சபரிமலை அகல ரயில்பாதை திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டுமென தேனி எம்.பி. தங்கத் தமிழ் செல்வன் தெற்கு ரயில்வே ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தினார். 60 ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டும் இந்த திட்டம் நடைமுறையில் வராததை அவலமாகக் கூறி, சபரிமலைக்கு ரயில்பாதை அமைக்க முடியாவிட்டால், குறைந்தது பம்பை வரை பாதை அமைக்க வேண்டும் என்றார்.

60 ஆண்டு கனவு நிறைவுவேறுமா..? திண்டுக்கல்-சபரிமலை அகல ரயில்பாதை திட்டம் எப்போது வரும்?
திண்டுக்கல்-சபரிமலை அகல ரயில்பாதை திட்டம்Image Source: x
sivasankari-bose
Sivasankari Bose | Published: 27 Apr 2025 07:22 AM

தமிழ்நாடு ஏப்ரல் 27: தெற்கு ரயில்வே ஆலோசனை கூட்டத்தில் (Southern Railway Consultative Meeting), தேனி எம்.பி. தங்கத் தமிழ் செல்வன் (Theni MP Thangath Tamil Selvan) திண்டுக்கல்-சபரிமலை அகல ரயில்பாதை (Dindigul-Sabarimala Broad-Land Railway) திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார். 60 ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டும் திட்டம் நடைமுறையில் வரவில்லை எனக் கூறினார். சபரிமலை வரை சாத்தியமில்லையெனில், குறைந்தது பம்பை வரை பாதை அமைக்க வேண்டும் என்றார். ரயில்வே அதிகாரிகள், வனத்துறை அனுமதி தேவையென பதிலளித்தனர். வாலாந்தூரில் புதிய ரயில்வே நிலையம் மற்றும் ஏத்தக்கோவில் சுரங்கப்பாதையில் மழைநீர் பிரச்சினையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரினார். போடி-ராமேஸ்வரம் இடையே புதிய ரயில் சேவை தொடங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

திண்டுக்கல்-சபரிமலை அகல ரயில்பாதை திட்டம் செயல்படுத்தப்படுத்த வலியுறுத்தல்

தெற்கு ரயில்வேயின் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட தேனி தொகுதி எம்.பி. தங்கத் தமிழ் செல்வன், நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள திண்டுக்கல்-சபரிமலை அகல ரயில்பாதை திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

60 ஆண்டுகளாக கோரிக்கை

கூட்டத்தில் பேசிய அவர், கடந்த 60 ஆண்டுகளாக இந்த திட்டத்திற்காக கோரிக்கை விடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டார். ஆண்டுதோறும் சுமார் 1.5 கோடி பக்தர்கள் சபரிமலைக்கு வருகை தருகின்றனர். மாதந்தோறும் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணம் செய்கின்றனர் என்றார்.

இதன் மூலம் ரயில்வேக்கு பெரும் வருமானம் கிடைக்கும் நிலையிலும், இதுவரை திட்டம் நடைமுறையில் வராததற்கு காரணம் என்ன என கேள்வி எழுப்பினார்.

குறைந்தது பம்பை வரை பாதை அமைக்க வேண்டும்

சபரிமலை வரை பாதை அமைக்க முடியவில்லை என்றால், குறைந்தது திண்டுக்கல் முதல் பம்பை அல்லது லோயர் கேம்ப் வரை அகல ரயில்பாதை அமைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் பற்றியும் விசாரித்தார்.

வனத்துறை அனுமதி தேவை: அதிகாரிகள் விளக்கம்

இதற்குப் பதிலளித்த ரயில்வே அதிகாரிகள், சபரிமலை வரையிலான பாதை அமைப்பதற்கு மத்திய வனத்துறையின் அனுமதி தேவையானதால் சாத்தியக்கூறு குறைவாக இருப்பதாக தெரிவித்தனர். திண்டுக்கல்-பம்பை பாதைக்கான ஆய்வு நிறைவடைந்துள்ளதாகவும், வருகிற ஆண்டில் திட்ட அனுமதிக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறினர்.

புதிய ரயில்வே நிலைய கோரிக்கை

தொடர்ந்து பேசிய எம்.பி. தங்கத் தமிழ் செல்வன், தேனி மாவட்டம் வள்ளல்நதி மற்றும் மதுரை மாவட்டம் வாலாந்தூரில் ரயில்கள் நிற்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்றார். வாலாந்தூரில் உள்ள 60 ஏக்கர் நிலத்தில் புதிய ரயில்வே நிலையம் அமைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

மழைநீர் பிரச்சினை தீர்க்க நடவடிக்கை

அதேபோல், ஆண்டிப்பட்டி அருகே உள்ள ஏத்தக்கோவில் ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்குவதால், அருகிலுள்ள கிராம மக்கள் கடந்து செல்ல சிரமப்படுகிறார்கள் எனவும், அங்கு மேற்கூரை அமைக்க வேண்டும் எனவும் அவர் கேட்டார்.

போடி-ராமேஸ்வரம் ரயில் சேவை தொடங்க வேண்டும்

போடி ரயில் நிலையத்தில் போதுமான இட வசதிகள் உள்ளதால், சில ரயில்கள் போடி வரை நீட்டிக்கப்பட வேண்டும் என்றும், புதிய போடி-ராமேஸ்வரம் ரயில் சேவையை தொடங்க வேண்டும் என்றும் எம்.பி. தங்கத் தமிழ் செல்வன் வலியுறுத்தினார். இவை அனைத்தையும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என ரயில்வே அதிகாரிகள் உறுதியளித்தனர்.

மேத்யூ தாமஸ் நடிப்பில் வெளியானது ’லவ்லி’ படத்தின் ட்ரெய்லர்
மேத்யூ தாமஸ் நடிப்பில் வெளியானது ’லவ்லி’ படத்தின் ட்ரெய்லர்...
130 அணு ஆயுதங்கள் இந்தியாவுக்காக தயாராக உள்ளன - பாக். அமைச்சர்!
130 அணு ஆயுதங்கள் இந்தியாவுக்காக தயாராக உள்ளன - பாக். அமைச்சர்!...
லக்கி பாஸ்கர் பட இயக்குநருடனான கூட்டணியை உறுதி செய்த சூர்யா...
லக்கி பாஸ்கர் பட இயக்குநருடனான கூட்டணியை உறுதி செய்த சூர்யா......
தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை மற்றும் மழை முன்னறிவிப்பு
தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை மற்றும் மழை முன்னறிவிப்பு...
ரேஷன் கடை துவரம் பருப்பில் கலப்படம்... தமிழகம் முழுவதும் ஆய்வு!
ரேஷன் கடை துவரம் பருப்பில் கலப்படம்... தமிழகம் முழுவதும் ஆய்வு!...
தமிழக ஆழ்கடல் பகுதியில் எண்ணெய் எடுக்க ஓஎன்ஜிசிக்கு அனுமதி!
தமிழக ஆழ்கடல் பகுதியில் எண்ணெய் எடுக்க ஓஎன்ஜிசிக்கு அனுமதி!...
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்... விசாரணையை தொடங்கிய என்ஐஏ!
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்... விசாரணையை தொடங்கிய என்ஐஏ!...
முருகனின் 108 பெயர்களில் அர்ச்சனை செய்தால் இதெல்லாம் நடக்குமா?
முருகனின் 108 பெயர்களில் அர்ச்சனை செய்தால் இதெல்லாம் நடக்குமா?...
NEET UG 2025 தொடர்பான சந்தேகம் இருக்கா? நியூ போர்டல் அறிமுகம்...
NEET UG 2025 தொடர்பான சந்தேகம் இருக்கா? நியூ போர்டல் அறிமுகம்......
முன்னாள் காதலர்கள் குறித்தும் வெளிப்படையாக பேசிய ஸ்ருதி ஹாசன்!
முன்னாள் காதலர்கள் குறித்தும் வெளிப்படையாக பேசிய ஸ்ருதி ஹாசன்!...
பஹல்காம் தாக்குதல்.. மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர்
பஹல்காம் தாக்குதல்.. மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர்...