மதுரையில் அதிர்ச்சி.. பள்ளியில் தண்ணீர் தொட்டியில் விழுந்த 4 வயது சிறுமி.. பறிபோன உயிர்!

Madurai Crime News : மதுரையில் உள்ள தனியார் பள்ளியில் சக சிறுமிகளுடன் விளையாட்டிக் கொண்டிருந்த போது 4 வயது சிறுமி திறந்து கிடந்த தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரை மணி நேரத்திற்கு மேலாக தண்ணீர் தொட்டியில் பரிதவித்த 4 சிறுமி, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மதுரையில் அதிர்ச்சி.. பள்ளியில் தண்ணீர் தொட்டியில் விழுந்த 4 வயது சிறுமி.. பறிபோன உயிர்!

மதுரை பள்ளியில் சிறுமி பலி

Updated On: 

29 Apr 2025 13:56 PM

மதுரை, ஏப்ரல் 29: மதுரை மாவட்டத்தில் (Madurai Crime) உள்ள தனியார் மழைலையர் பள்ளியில் 4 வயது பெண் குழந்தை தண்ணீர் தொட்டியில் (Madurai 4 years old Girl Dies) விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சக பெண் குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த போது, திறந்து கிடந்த தண்ணீர் தொட்டியில் 4 வயது தவறி விழுந்து உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து, பள்ளி உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பள்ளியில் தண்ணீர் தொட்டியில் விழுந்த 4 வயது சிறுமி பலி

மதுரை மாவட்டம் கேகே நகர் பகுதியில் தனியார் பள்ளி மழலையர் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில், இந்த பள்ளியில் 2025 ஏப்ரல் 29ஆம் தேதியான இன்று அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது.

அதாவது, இந்த பள்ளியில் படித்து வருபவர் 4 வயது சிறுமியான ஆருத்ரா. இவர் 2025 ஏப்ரல் 29ஆம் தேதியான இன்று சக சிறுமிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில், அந்த பகுதியில் 11 அடி ஆழம் கொண்ட தண்ணீர் தொட்டி திறந்து இருந்துள்ளது.

சக சிறுமிகளுடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி ஆருத்ரா, அந்த இடத்திற்கு சென்றுள்ளார். அப்போது, தண்ணீர் தொட்டியை எட்டி பார்த்தபோது, எதிர்பாராத விதமாக ஆருத்ரா தண்ணீர் தொட்டிக்குள் விழுந்துள்ளார். 11 அடி ஆழம் கொண்ட தண்ணீர் தொட்டியில் விழுந்த சிறுமி, மூச்சு திணறி உள்ளார்.

நடந்தது என்ன?

அரை மணி நேரமாக தண்ணீர் தொட்டியில் சிறுமி தத்தளித்தாக தெரிகிறது. சிறுமியின் அலறல் சத்தத்தை கேட்ட ஆசிரியர்கள், உடனே பார்த்துள்ளனர். அப்போது, சிறுமி தண்ணீர் கிடந்ததை பார்த்து உடனே, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டுள்ளனர்.

உடனே அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு சிறுமி ஆருத்ராவை கொண்டு சென்றனர்.  அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், சிறுமி ஏற்கனவே  இறந்துவிட்டதாக கூறியுள்னர். இதனை அறிந்த பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகார் அடிப்படையில், மாநகர துணை ஆணையர் அனிதா பள்ளி ஆசிரியர்கள், நிர்வாகத்திடம் விசாரணை நடத்தினார்.

இதனை அடுத்து, பள்ளியின் தாளாளரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், அப்பள்ளியில் இருந்து 4 ஆசிரியர்களையும் கைது செய்ததாக கூறப்படுகிறது.  சிறுமி எப்படி விழுந்தது? தண்ணீர் தொட்டியை திறந்து வைத்தது ஏன் என்ற கோணத்தில் மதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  தண்ணீர் தொட்டியில் விழுந்து 4 வயது குழந்தை உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.