6வது மாடியில் இருந்து தவறி விழுந்த 4 வயது சிறுவன்.. பறிபோன உயிர்.. சென்னையில் அதிர்ச்சி!
Chennai Crime News : சென்னை கோயம்பேட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் ஆறாவது மாடியின் இருந்து 4 வயது சிறுவன் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். வீட்டிற்குள் சிறுவன் விளையாடிக் கொண்டிருந்த எதிர்பாராத விதமாக ஆறாவது மாடியில் சிறுவன் விழுந்து உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாதிரிப்படம்
சென்னை, ஏப்ரல் 27: சென்னையில் 6வது மாடியில் இருந்து 4 வயது சிறுவன் தவறி விழுந்து உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 6வயது மாடியில் இருந்து ஜன்னல் வழியாக 4 வயது தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். சென்னை தியாகராய நகர் பகுதியைச் சேர்ந்தவர் திலீப். இவரது மனைவி சுவாமி. இந்த தம்பதிக்கு 4 வயதில் மகன் உள்ளார். இவர்கள் தியாகராய நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், 2025 ஏப்ரல் 26ஆம் தேதியான நேற்று சுவாதியின் பெற்றோர் வீட்டிற்கு இவர்கள் மூன்று பேரும் சென்றுள்ளனர்.
6வது மாடியில் இருந்து தவறி விழுந்து 4 வயது சிறுவன் பலி
அவர்கள் கோயம்பேட்டில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், இவர்கள் மூன்று பேரும் அங்கு சென்று இருக்கின்றனர். ஆறாவது மாடியில் இவர்கள் அனைவரும் இருந்திருக்கின்றனர். அப்போது விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுவன் ஜன்னல் வழியாக எட்டி பார்த்துள்ளார்.
அப்போது, கால் தவறி திடீரென கீழே விழுந்துள்ளனர். இதனால் பதறிய பெற்றோர், உடனே அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளார்.
கோயம்பேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. வெளியே சென்றாலும், வீட்டிற்குள் இருந்தால் குழந்தைகள் பெற்றோர் கண்காணிக்க வேண்டும். இல்லையென்றால், விளையாட்டு தனமாக குழந்தைள் செய்யும் செயலால், சில அசம்பாவித நிகழ்வுகளும் அரங்கேறி வருகின்றன.
சென்னையில் அதிர்ச்சி
அண்மையில் கூட, மும்பையில் 7 மாத குழந்தை 21வது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையின் விரார் மாவட்டத்தின் போலின்ஜ் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
அப்போது, குழந்தையில் கையில் வைத்துக் கொண்டு தாய் ஜன்னலை மூட முயன்றார். அப்போது கால் தவறி 21வது மாடியில் இருந்து 7 மாத அவரது பிடியில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது. விசாரணையில், ஜன்னலில் முழுமையான பாதுகாப்பு கிரில்கள் இல்லை என்று தெரியவந்துள்ளது.
அதற்கு முன்னதாக, 2025 ஜனவரி மாதத்தில் தானே மாவட்டத்தில் 2 வயது குழநதை 13 வயது மாடியின் பால்கனியில் தவறி விழும்போது, கீழே இருந்து ஒருவர் பத்திரமாக பிடித்து காப்பாற்றி இருக்கிறது. இந்த சம்பவத்தின் வீடியோவும் வெளியாகி இருந்தது. குழந்தையை சரியாக நேரத்தில் காப்பாற்றியதால், குழந்தைக்கு லேசான காயங்கள் மட்டுமே ஏற்பட்டு இருக்கிறது. பாவேஷ் மத்ரே என்ற நபர் குழந்தையை காப்பாற்றியுள்ளார். இவருக்கு பாராட்டுகள் குவிந்தது குறிப்பிடத்தக்கது.