மீனை விழுங்கிய இளைஞர்.. கடைசியில் பறிபோன உயிர்.. நடந்தது என்ன?
செங்கல்பட்டு மாவட்டத்தில் இளைஞரின் தொண்டையில் மீன் சிக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மீன் பிடிக்க சென்றபோது, உயிருடன் இருக்கும் மீனை வாயில் வைத்திருந்தார். அப்போது, எதிர்பாராவிதமாக அந்த மீன் அவரது தொண்டகையில் சிக்கியது. இதனை அடுத்து, அவர் மூச்சு திணறி உயிரிழந்துள்ளார்.

மீனை விழுங்கிய இளைஞர் பலி
செங்கல்பட்டு, ஏப்ரல் 09: செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டில் இளைஞரின் தொண்டையில் மீன் சிக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மீன் பிடிக்க சென்றபோது மீனை வாயில் வைத்திருந்தபோது, அந்த மீன் அவரது தொண்டகைக்குள் சென்று சிக்கி உள்ளது. இதனால், அந்த இளைஞர் மூச்சுவிட முடியாமல் உயிரிழந்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (29).
மீனை விழுங்கிய இளைஞர்
இவர் கூலி வேலை செய்து வந்தார். தனது கைகளால் மீன் பிடிப்பதில் நிபுணத்துவம் பெற்றவர். இவர் தினமும் ஏரியில் மீன் பிடித்து வந்துள்ளார். இந்த நிலையில், இவர் மீனால் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, 2025 ஏப்ரல் 9ஆம் தேதி கீழவலம் ஏரியில் மீன் பிடிக்க சென்றிருக்கிறார்.
அப்போது, தண்ணீர் குறைவாக இருந்துள்ளது. இதனால் கையால் தடவி மீன் பிடித்திருக்கிறார். அப்போது, தனது கையால் இரண்டு மீன்களை பிடித்திருக்கிறார். மீன்கள் கையில் இருந்து நழுவாமல் இருக்க ஒரு மீனை வாயில் கவியப்படியும், மற்றொரு மீனை கையில் வைத்துக் கொண்டு மீன் பிடித்திருக்கிறார்.
அப்போது, எதிர்பாராத விதமாக மணிகண்டன் வாயில் கல்விக் கொண்டிருந்த மீன் நழுவி அவரது தொண்டையில் சிக்கி உள்ளது. இதனால், மணிகண்டன் மூச்சு விட முடியாமல் தவித்துள்ளார். மீனை மணிகண்டன் எடுக்க முயன்றார். ஆனால், அப்போது மீன் வெளியே வரவில்லை.
இதனால், அரையப்பாக்கத்தில் உள்ள தனது வீட்டிற்கு ஒடினார். ஆனால், வழியிலேயே அவர் சரிந்து விழுந்துள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர், அவர் தொண்டையில் சிக்கிக் கொண்டிருக்கும் மீனை எடுக்க முயன்றனர். ஆனாலும், மீனை எடுக்க முடியவில்லை.
நடந்தது என்ன?
இதனால், உடனே செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக கூறினார். மணிகண்டன் உயிரிழந்தது அவர்களது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுபோன்ற சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது. அதாவது, கேரள மாநிலம் ஆலப்புழாவில் உயிருடன் இருக்கும் மீன் சிக்கியதில் 25 வயதான இளைஞர் உயிரிழந்துள்ளார். இறந்தவர் ஆதர்ஷ் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. ஆதர்ஷ் தனது நண்பர்களுடன் மீன் படித்துக் கொண்டிருந்தபோது, அவர் தனது வாயில் மீனை கவிக்கொண்டிருந்தார்.
அப்போது, அந்த மீன் தொண்டையில் சிக்கியுள்ளது. இதனால் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை அளித்ததில் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். மீன் தொண்டையில் சிக்கியதால் மூச்சு திணறி உயிரிழந்தாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதுபோன்ற செயல்களில் மக்கள் ஈடுபட வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இந்த சம்பவம் நடந்த நான்கு நாட்களில் செங்கல்பட்டில் இளைஞர் உயிரிழந்தார்.