பட்டப்பகலில் மதுபோதையில் வடமாநில இளைஞர் செய்த செயல்.. அடித்தே கொன்ற பொதுமக்கள்!

Erode Crime News : ஈரோடு மாவட்டத்தில் வீடு புகுந்து 70 வயதான முதியவரை கொலை செய்ய முயன்ற வடமாநில இளைஞரை பொதுமக்கள் அடித்தே கொலை செய்துள்ளனர். பொதுமக்கள் தாக்கியதில் படுகாயம் அடைந்த இளைஞருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.

பட்டப்பகலில் மதுபோதையில் வடமாநில இளைஞர் செய்த செயல்.. அடித்தே கொன்ற பொதுமக்கள்!

மாதிரிப்படம்

Updated On: 

19 Apr 2025 09:07 AM

ஈரோட்டு, ஏப்ரல் 19: ஈரோடு மாவட்டத்தில் முதியவரை கொலை செய்ய முயன்ற வடமாநில இளைஞரை, பொதுமக்கள் பிடித்து கடுமையாக தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளனர். பொதுமக்கள் தாக்கியதில் படுகாயம் அடைநத் வடமாநில இளைஞர், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் கொல்லம்பாளையம் பகுதியில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் சுப்பிரமணியன் (70).

மது போதையில் வடமாநில இளைஞர் செய்த செயல்

இவரது ஜெயலட்சுமி (62). இவர்கள் இரண்டு பேர் மட்டும் வீட்டில் வசித்து வருகின்றனர். சுப்பிரமணியன் தனியார் நடத்துனராக பணியாற்றி இருக்கிறார். இந்த நிலையில், 2025 ஏப்ரல் 17ஆம் தேதி மதியம் வட மாநில இளைஞர் ஒருவர், சுப்பிரமணியன் வீட்டிற்கு புகுந்து, அவரை பிளேடால் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்றார்.

இதனை பார்த்த அவரது மனைவி ஜெயலட்சுமி கத்தி கூச்சலிட்டு இருக்கிறார். உடனே சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். இதனை அறிந்த அந்த இளைஞர், உடனே தப்பிக்க முயன்று இருக்கிறார். ஆனால், ஆனால் அவரை கையும் களவுமாக பிடித்து பொதுமக்கள் அடித்து உதைத்தனர்.

இதனால், அந்த இளைஞருக்கு காயம் ஏற்பட்டு, மயக்கம் அடைந்துள்ளனர். இதுகுறித்து உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மயக்க நிலையில் கிடந்த வடமாநில இளைஞரை, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

சுற்றி வளைத்து பொதுமக்கள் தாக்கியதில் பலி

அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்தவர் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த எஸ். ராபி ஓரான் என அடையாளம் காணப்பட்டுள்ளது. அதே நேரத்தில், முதியவர் சுப்பிரமணியன் சிகிச்சை பெற்று வருகிறார்.

கொலை வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், ஓரானைத் தாக்கிய கும்பலை அடையாளம் காண சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். முதியவர் சுப்பிரமணியனை கொலை செய்ய முயன்றபோது, இளைஞர் ஓரான் மது போதையில் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தமிகத்தில் கொலை, கொள்ளை சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. குறிப்பாக, நாள்தோறும்  கொலை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இதனை தடுக்க மாநில அரசும் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும், கொலை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. அண்மையில், திருநெல்வேலியில் 8ஆம் வகுப்பு மாணவனை சக மாணவன் பள்ளி வளாகத்திலேயே அரிவாளால் வெட்டியது  மாநிலத்தையே உலுக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.