விருதுநகரில் ஷாக்.. திடீரென ராட்டினத்தில் இருந்து கீழே விழுந்த பெண்.. பதறவைக்கும் வீடியோ!

Virudhunagar Accident: விருதுநகர் மாவட்டத்தில் நடந்த பொருட்காட்சியில் ராட்டினத்தில் இருந்து இளம்பெண் தவறி கீழே விழுந்துள்ளார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் 22 வயதான கௌசல்யா என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர் பாத்திமா நகரை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

விருதுநகரில் ஷாக்.. திடீரென ராட்டினத்தில் இருந்து கீழே விழுந்த பெண்.. பதறவைக்கும் வீடியோ!

ராட்டினத்தில் இருந்து கீழே விழுந்த பெண்

Published: 

12 Apr 2025 14:48 PM

விருதுநகர், ஏப்ரல் 12: விருதுநகர் மாவட்டத்தில் ராட்டினத்தில் இருந்து இளம்பெண் கீழே விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுற்றிக் கொண்டு ராட்டினத்தில் இருந்து அந்த பெண் கீழே விழுந்துள்ளார். இதனால், அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தமிழகத்தில் கோடை விடுமுறை தொடங்கி உள்ளது. 11,12ஆம் வகுப்பு தேர்வுகள் முடிந்த நிலையில், மற்ற வகுப்புகளுக்கு தேர்வு நடந்து வருகிறது. இன்னும் சில நாட்களில் கோடை விடுமுறை தொடங்க உள்ளது.

திடீரென ராட்டினத்தில் இருந்து கீழே விழுந்த பெண்

இதனால், பல்வேறு மாவட்டங்களில் பொருட்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அரசு மற்றும் தனியார் சார்பில் பொருட்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால், காலை முதல் மாலை வரை மக்கள் இந்த பொருட்காட்சிகளை காண குவிந்துள்ளனர்.

இந்த நிலையில், பொருட்காட்சியில் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது.  அதாவது, விருதுநகரில் நடந்த பொருட்காட்சியில் ராட்டினத்தில் இருந்து இளம்பெண் தவறி கீழே விழுந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் கே.வி.எஸ் பள்ளியில் பொருட்காட்சி நடத்தப்பட்டது.

இந்த பொருட்காட்சியை காண அப்பகுதி மக்கள் பலரும் சென்றிருக்கின்றனர். இந்த பொருட்காட்சிக்கு 22 வயதான கௌசல்யா என்ற பெண்ணும் சென்றிருக்கிறார். அங்கு ராட்டினத்தில் ஏறி ரெய்டு சென்றிருக்கிறார். அப்போது, ராட்டினம் சுற்றிக் கொண்டிருக்கும்போதே அந்த பெண் தவறி கிழே விழுந்துள்ளார்.

அதாவது, ராட்டினத்தில் இருந்த தடுப்பு கம்பி மூலம் கால் பூட்டப்படும். ஆனால், அப்போது, கௌசல்யா அமர்ந்திருந்த பகுதியில் பூட்டு இருந்தும், சரியாக பூட்டாததால் அவர் கீழே விழுந்துள்ளதாக தெரிகிறது. இதனை அடுத்து, உடனே ராட்டினம் நிறுத்தப்பட்டது.

பதறவைக்கும் வீடியோ

கீழே விழுந்த கௌசல்யாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. இதுகுறித்து உடனே ஆம்புலன்ஸ்க்கு அழைக்கப்பட்டது. இதனை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த ஆம்புலன்ஸ், உடனே கௌசல்யாவை ஏற்றிக் கொண்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றது.

அங்கு இளம்பெண் கௌசல்யாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.  இதன் அடிப்படையில் விசாரித்து வருகின்றனர்.

அண்மையில் கூட, டெல்லியில் பொழுதுபோக்கு பூங்காவில் ரோலர் கோஸ்டரில் இருந்து இளம்பெண் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். ரோலர் கோஸ்டரில் இருந்த தடுப்பு கம்பி உடைந்ததால், அதில் இருந்து அவர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். அவர் 26 வயதான பிரியங்கா என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இவருக்கு சில மாதங்களில் திருமணம் நடைபெறுவதாக இருந்த நிலையில், இந்த மோசமான சம்பவம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.