கோயில் திருவிழாவில் ரகளை.. 11ம் வகுப்பு மாணவன் குத்திக் கொலை.. கன்னியாகுமரியில் அதிர்ச்சி!

Kanyakumari Crime News : கன்னியாகுமரியில் 11ஆம் வகுப்பு மாணவனை, கல்லூரி மாணவன் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். திருவிழாவில் ஏற்பட்ட தகராறில், ஆத்திரத்தில் 11ஆம் வகுப்பு மாணவை கொலை செய்துள்ளார். இதனை அடுத்து, கல்லூரி மாணவனை போலீசார் கைது செய்தனர்.

கோயில் திருவிழாவில் ரகளை..  11ம் வகுப்பு மாணவன் குத்திக் கொலை.. கன்னியாகுமரியில் அதிர்ச்சி!

கன்னியாகுமரியில் மாணவர் கொலை

Published: 

29 Apr 2025 07:43 AM

கன்னியாகுமரி, ஏப்ரல் 29:  கன்னியாகுமரியில் 11ஆம் வகுப்பு மாணவர் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயில் திருவிழாவில் தகராறு ஏற்பட்டதை அடுத்து, கல்லூரி மாணவர், 11ஆம் வகுப்பு மாணவரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இதனை அடுத்து, கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் மாதவபுரத்தைச் சேர்ந்தவர் விஷ்ணு. இவர் கன்னியாகுமரியில் தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்தவர் சந்துரு.

கோயில் திருவிழாவில் ரகளை

இவர் அப்பகுதியில் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் பகுதி நேரமாக ஆட்டோவும் ஒட்டி வருகிறார். இந்த நிலையில், மாதவபுரத்தில் கோயில் திருவிழா நடந்துள்ளது. பள்ளி விடுமுறை என்பதால் கோயில் திருவிழாவுக்கு விஷ்ணு மற்றும் சந்துரு அவரவர் நண்பர்களுடன் சென்றுள்ளனர்.

இந்த நிலையில், கோயில் திருவிழாவின்போது, சந்துருவுக்கும், விஷ்ணு மற்றும் அவரது நண்பர்களுக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. அபபோது, அவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால், ஆத்திரம் அடைந்த சந்துரு, தான் ஆட்டோவின் சாவியோடு இணைக்கப்பட்ட சிறியரக கத்தியால் விஷ்ணுவை குத்தியுள்ளார். இதில், பலத்த காயம் அடைந்த விஷ்ணு, ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதனால், அதிர்ச்சி அடைந்த சந்துரு, விஷ்ணுவை தனது ஆட்டோவில் ஏற்றிச் சென்று தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

11ம் வகுப்பு மாணவன் குத்தி கொலை

அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் விஷ்ணு இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதற்கிடையில், தனது மகன் விஷ்ணு கத்தியால் குத்தப்பட்டதை அறிந்து பெற்றோர் மருத்துவமனைக்கு வென்றனர். அப்போது, சந்துரு தனது மகனை கொலை செய்ததை அறிந்த பெற்றோர், உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், விஷ்ணு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரணையை தொடங்கினர். கொலை செய்த விஷ்ணுவை போலீசார் தேடினர். இறுதியில் அவரை 2025 ஏப்ரல் 28ஆம் தேதியான நேற்று கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

அவர் விஷ்ணுவை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். சந்துரு மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கோயில் திருவிழாவில் ஏற்பட்ட ரகளையில், 11ஆம் வகுப்பு மாணவன் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில் கூட, திருநெல்வேலியில் 8ஆம் வகுப்பு மாணவனை சக மாணவன் அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பென்சில் தொடர்பாக ஏற்பட்ட சண்டையில், 8ஆம வகுப்பு மாணவனை குத்தியுள்ளார்.  பின்பு, அரிவாளலுடன் காவல்நிலையத்தில் அந்த மாணவன் சரணடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.