Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ரூ.200க்கு வீடு தேடிவரும் வைஃபை இன்டர்நெட்.. அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அசத்தல் அறிவிப்பு!

Palanivel Thiagarajan Announced Internet Facility For Homes | தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (ஏப்ரல் 25, 2025) தகவல் தொழில்நுட்பத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ரூ.200 கட்டணத்தில் வீடுகளுக்கு இணைய சேவை வழங்க திட்டம் உள்ளதாக கூறியுள்ளார்.

ரூ.200க்கு வீடு தேடிவரும் வைஃபை இன்டர்நெட்.. அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அசத்தல் அறிவிப்பு!
அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
vinalin-sweety
Vinalin Sweety | Updated On: 25 Apr 2025 20:10 PM

சென்னை, ஏப்ரல் 25 : தமிழகத்தில் வீடுகளுக்கு கேபிள் டிவி சேவை (Cable TV Service) வழங்கப்படுவதை போல மாதம் ரூ.200 கட்டணத்தில் இணைய சேவை (Internet Facility) வழங்க திட்டம் உள்ளதாக தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப துறை (Tamil Nadu Information Technology Department) அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் (Palanivel Thiyagarajan) தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (ஏப்ரல் 25, 2025) தகவல் தொழில்நுட்பத் துறை மானிய கோரிக்கை மீதான விவாவதம் நடைபெற்றது. அதில் பேசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் நடைபெற்று வரும் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம்

தமிழக சட்டப்பேரவையில் மார்ச் 14, 2025 அன்று 2025 – 2026 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் (Tamil Nadu Budget 2025 – 2026) செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து துறை ரீதியான மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இன்று (ஏப்ரல் 25, 2025) தகவல் தொழில்நுட்பத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தனது துறை சார்ந்த சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதில் முக்கிய அறிவிப்பாக வீடுகளுக்கு கேபிள் டிவி சேவை வழங்கப்படுவதை போல இணைய சேவை வழங்க திட்டமிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். அதாவது, 100 எம்பிபிஎஸ் (Mpbs) வேகத்தில் மாதம் ரூ.200 கட்டணத்தில் இந்த சேவையை அறிமுகம் செய்ய உள்ளதாக அவர் கூறியுள்ளார். அதுமட்டுமன்றி, இ-சேவை மையங்கள் மூலம் பெறக்கூடிய சேவைகளை வாட்ஸ்அப் (WhatsApp) செயலி மூலம் ஒருங்கிணைத்து வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தகவல் தொழில்நுட்பத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம்

இ-சேவை மூலம் பேருந்து டிக்கெட் முன்பதிவு

இதேபோல இ-சேவை மூலம் அரசு பேருந்துகளின் டிக்கெட்டுகளை பெறும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளார். வீட்டின் இணையதள வசதி மூலம் அரசு பேருந்தின் இணையதளத்திற்கு சென்று பேருந்து டிக்கெட் முன்பதிவு செய்துக்கொள்ளலாம் என்றும் சட்டப்பேரவையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆன்லைனில் ஆர்டர் செய்தவருக்கு பஸ் டிக்கெட்டுடன் வந்த பேண்ட் !
ஆன்லைனில் ஆர்டர் செய்தவருக்கு பஸ் டிக்கெட்டுடன் வந்த பேண்ட் !...
சுற்றுலா பயணிகளுக்கு உதவியவர்கள் இஸ்லாமியர்கள் தான் - மெஹபூபா!
சுற்றுலா பயணிகளுக்கு உதவியவர்கள் இஸ்லாமியர்கள் தான் - மெஹபூபா!...
சிக்கிம் நிலச்சரிவு - சிக்கி தவிக்கும் 1,000 சுற்றுலா பயணிகள்!
சிக்கிம் நிலச்சரிவு - சிக்கி தவிக்கும் 1,000 சுற்றுலா பயணிகள்!...
சர்க்கரை சாப்பிடுவதால் ஏற்படும் 7 முக்கிய ஆபத்துகள்!
சர்க்கரை சாப்பிடுவதால் ஏற்படும் 7 முக்கிய ஆபத்துகள்!...
ஊட்டி, கொடைக்கானல் விடுதிகள் குறித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
ஊட்டி, கொடைக்கானல் விடுதிகள் குறித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவு!...
இன்ஸ்டாகிராம் அறிமுகப்படுத்தியிருக்கும் Blend - என்ன ஸ்பெஷல்?
இன்ஸ்டாகிராம் அறிமுகப்படுத்தியிருக்கும் Blend - என்ன ஸ்பெஷல்?...
சம்மருக்கு ஏற்ற ஸ்கின் கேர்.. காபி தூள் இருந்தாலே போதும்!
சம்மருக்கு ஏற்ற ஸ்கின் கேர்.. காபி தூள் இருந்தாலே போதும்!...
தல ஆட்டத்தை பார்க்க வந்த அஜித் - சிவகார்த்திகேயன் - வைரல் வீடியோ!
தல ஆட்டத்தை பார்க்க வந்த அஜித் - சிவகார்த்திகேயன் - வைரல் வீடியோ!...
மிரட்டல் அரசியல் பாஜகவின் டிஎன்ஏவில் தான் உள்ளது - கோவி.செழியன்!
மிரட்டல் அரசியல் பாஜகவின் டிஎன்ஏவில் தான் உள்ளது - கோவி.செழியன்!...
த்ரிஷாவின் சூப்பர் ஹிட் படம் 9 மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது
த்ரிஷாவின் சூப்பர் ஹிட் படம் 9 மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது...
தாக்குதலின் நோக்கம் சமூகத்தை பிளவுபடுத்தும் - ராகுல் காந்தி!
தாக்குதலின் நோக்கம் சமூகத்தை பிளவுபடுத்தும் - ராகுல் காந்தி!...