Sunil Gavaskar: நிதி நெருக்கடி! உடல் நலம் பாதிப்பு.. வினோத் காம்ப்ளிக்கு உதவிக்கரம் நீட்டிய கவாஸ்கர்!
Vinod Kambli Financial Crisis: முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி நீண்ட கால நிதி நெருக்கடியில் இருந்து வந்த நிலையில், சுனில் கவாஸ்கரின் CHAMPS அறக்கட்டளை அவருக்கு மாதம் ரூ.30,000 மற்றும் ஆண்டுக்கு ரூ.30,000 மருத்துவ உதவி வழங்குகிறது. இந்த உதவி, வான்கடே ஸ்டேடியத்தின் 50வது ஆண்டு விழாவின் போது கவாஸ்கர் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் வழங்கப்படுகிறது. காம்ப்ளியின் சமீபத்திய உடல்நலப் பிரச்னைகளையும் கருத்தில் கொண்டு இந்த உதவி வழங்கப்படுகிறது.

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், சச்சின் டெண்டுல்கரின் நெருங்கிய நண்பருமான வினோத் காம்ப்ளி (Vinod Kambli) நீண்ட ஆண்டுகாலமாக நிதி நெருக்கடியில் தவித்து வருகிறார். மேலும், அவரது உடல்நலம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் வினோத் காம்ப்ளி உடல்நலக்குறைவு காரணமான மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில், முன்னாள் இந்திய கேப்டனும், ஜாம்பவானுமான சுனில் கவாஸ்கர் (Sunil Gavaskar), வினோத் காம்ப்ளிக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளார். இது காம்ப்ளிக்கும் அவரது ரசிகர்களுக்கும் ஒரு பெரிய நிம்மதியை கொடுத்துள்ளார்.
என்ன உதவி அது..?
A great move by Sunil Gavaskar
The Sunil Gavaskar Foundation will give Vinod Kambli Rs 30,000 per month for the rest of his life from April 1 and an additional Rs 30,000 annually for medical expenses.#SunilGavaskar #VinodKambli pic.twitter.com/8y8Bqyg7we
— DR Yadav (@DrYadav5197) April 15, 2025
இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் பேட்ஸ்மேன் சுனில் கவாஸ்கர், வினோத் காம்ப்ளிக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளார். டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்ட தகவலின்படி, சுனில் கவாஸ்கர் தனது அறக்கட்டளையான CHAMPS நிறுவனம் மூலம் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளிக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.30,000 வழங்க இருக்கிறார். இது தவிர, இந்த அறக்கட்டளை மூலம் மேலும் ஆண்டுதோறும் மருத்துவ உதவிகளுக்காக ரூ. 30 ஆயிரம் வழங்குவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வினோத் காம்ப்ளிக்கு ஆண்டுதோறும் ரூ. 3,00,000 கிடைக்கும்.
கடந்த 2025 ஜனவரி மாதம் வான்கடே ஸ்டேடியத்தின் 50வது ஆண்டு விழா கொண்டாட்டத்தின்போது சுனில் கவாஸ்கரும், காம்ப்ளியும் ஒருவரையொருவர் சந்தித்தனர். அப்போது, சுனில் கவாஸ்கர் வினோத் காம்ப்ளிக்கு உதவுவதாக உறுதி அளித்தார். வான்கடே மைதானத்தில் காம்ப்ளியை சந்தித்த பிறகு, கவாஸ்கர் அவரது மருத்துவர்களுடன் பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காம்ப்ளியின் உடல்நிலை குறித்து அறிந்த பிறகு, காம்ப்ளிக்கு நிதி மற்றும் மருத்துவ உதவிகளை வழங்குமாறு கவாஸ்கர் தனது அமைப்புக்கு உத்தரவிட்டார். ஏப்ரல் 1 முதல் காம்ப்ளிக்கு இந்த உதவி கிடைக்கத் தொடங்கியது.
வினோத் காம்ப்ளி உடல்நிலை:
கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் வினோத் காம்ப்ளிக்கு சிறுநீர் பாதை தொற்று மற்றும் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக தானேவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனைக்கு பிறகு, காம்ப்ளியின் மூளையின் இரத்த உறைவு இருப்பது கண்டறியப்பட்டது. சுமார் இரண்டு வாரங்கள் நீடித்த சிகிச்சைக்குப் பிறகு காம்ப்ளி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
வினோத் காம்ப்ளி சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை:
1993 மற்றும் 2000 க்கு இடையில் காம்ப்ளி இந்திய அணிக்காக 104 ஒருநாள் போட்டிகளிலும், 17 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் டெஸ்ட் போட்டிகளில் 54.20 சராசரியுடன் 4 சதங்களும், 3 அரை சதங்களுடன் 1084 ரன்கள் எடுத்துள்ளார். இதன்மூலம், டெஸ்ட் போட்டிகளில் 1000 டெஸ்ட் ரன்களை வேகமாக எடுத்த இந்திய பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைத்தார் வினோத் காம்ப்ளி. மேலும், இந்திய அணிக்காக 104 ஒருநாள் போட்டிகளில் 32.59 சராசரியுடன் 2 சதங்கள், 14 அரை சதங்களுடன் 2477 ரன்கள் எடுத்துள்ளார். இது தவிர, 129 முதல் தர போட்டிகளில் 35 சதங்கள் மற்றும் 44 அரை சதங்களுடன் 9965 ரன்கள் எடுத்துள்ளார்.