Youngest IPL Centurion: சூர்யவன்ஷி முதல் ஜெய்ஸ்வால் வரை.. ஐபிஎல்லில் சதமடித்த இளம் வீரர்கள் பட்டியல்!

Five Youngest Centurions in IPL History: 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி, ஐபிஎல் 2025ல் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக 35 பந்துகளில் சதம் அடித்து ஐபிஎல் வரலாற்றில் மிக இளம் வயதில் சதம் அடித்த இந்திய வீரர் என்ற சாதனை படைத்தார். இதுவரை மனிஷ் பாண்டேயின் பெயரில் இருந்த இந்த சாதனையை அவர் முறியடித்தார். இந்த வெற்றியைத் தொடர்ந்து, ஐபிஎல் வரலாற்றில் மிக இளம் வயதில் சதம் அடித்த இந்திய வீரர்களின் பட்டியலை இந்தக் கட்டுரை விரிவாக விளக்குகிறது.

Youngest IPL Centurion: சூர்யவன்ஷி முதல் ஜெய்ஸ்வால் வரை.. ஐபிஎல்லில் சதமடித்த இளம் வீரர்கள் பட்டியல்!

ஐபிஎல்லில் சதமடித்த இளம் வீரர்கள்

Published: 

29 Apr 2025 15:45 PM

ஐபிஎல் 2025ன் (IPL 2025) 47வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரரான 14 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி, குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக வெறும் 35 பந்துகளில் சதமடித்து அசத்தினார். ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான் சிங் ஸ்டேடியத்தில் சூர்யவன்ஷி (Vaibhav Suryavanshi) பேட்டிலிருந்து ரன் மழை பொழிந்தது. குஜராத் டைட்டன்ஸ் (Gujarat Titans) அணிக்கு எதிராக வைபவ் சூர்யவன்ஷி 38 பந்துகளைச் சந்தித்து 11 சிக்ஸர்கள் மற்றும் 7 பவுண்டரிகளுடன் 101 ரன்கள் எடுத்தார். இதன்மூலம், ஐபிஎல் வரலாற்றில் இளம் வயதில் சதமடித்த வீரர் என்ற சாதனையை வைபவ் சூர்யவன்ஷி படைத்தார். இந்தநிலையில், ஐபிஎல் வரலாற்றில் இளம் வயதில் சதமடித்த இந்திய வீரர்கள் பட்டியலை இங்கே தெரிந்து கொள்வோம்.

மிக இளம் வயதில் சதம் அடித்த இந்திய வீரர்கள்:

ஐபிஎல் வரலாற்றில் மிக இளம் வயதில் சதம் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை மிக நீண்ட காலமாக மனிஷ் பாண்டே பெயரில் இருந்தது. தற்போது அதை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் வைபவ் சூர்யவன்ஷி முறியடித்தார். ஐபிஎல் 2025ல் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி வெறும் 14 ஆண்டுகள் மற்றும் 32 நாட்களில் சதம் அடித்தார். இதன்மூலம், ஐபிஎல் வரலாற்றில் மிக இளம் வயதில் சதம் அடித்த இந்திய வீரர் ஆனார். முன்னதாக, கடந்த 2009ம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடிய மனிஷ பாண்டே 19 ஆண்டுகள் மற்றும் 253 நாட்களில் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிராக வெறும் 73 பந்துகளில் 114 ரன்கள் அடித்தார்.

வைபவ் சூர்யவன்ஷி:

இதை தொடர்ந்து, தற்போதையை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி கேப்டன் ரிஷப் பண்ட், கடந்த 2018ம் ஆண்டு ஐபிஎல் சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக வெறும் 20 ஆண்டுகள் மற்றும் 218 நாட்களில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக 63 பந்துகளில் 128 ரன்கள் அடித்தார். இந்த பட்டியலில் 4வதாக தேவ்தத் படிக்கல் உள்ளார். இவர் ஐபிஎல் 2021ல் தனது 20 ஆண்டுகள் மற்றும் 289 நாட்களில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக வெறும் 52 பந்துகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் எதிராக 101 ரன்கள் குவித்தார். ஐபிஎல் வரலாற்றில் மிக இளம் வயதில் சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 5வது இடத்தில் உள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக கடந்த 2023ம் ஆண்டு யஷஸ்வி ஜெய்ஸ்வால் 21 ஆண்டுகள் மற்றும் 123 நாட்களில் வெறும் 62 பந்துகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 124 ரன்களுடன் சதம் அடித்து அசத்தினார்.