Top Unmarried IPL 2025 Captains: ஐபிஎல் 2025ல் கேப்டனாக கலக்கல்.. கணவனாக எப்போது அசத்துவார்கள்..? திருமணமாகாத ஐபிஎல் கேப்டன்கள் பட்டியல்!
Unmarried IPL Captains: இந்திய கிரிக்கெட் அணியின் பிரின்ஸ் என்று அழைக்கப்படும் சுப்மன் கில், ஐபிஎல்லில் தற்போது குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக உள்ளார். சுப்மன் கில்லுக்கு இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. கில் பெயருடன் பல பெண்களின் பெயர்கள் இணைக்கப்பட்டு பேசப்பட்டு வருகிறது. முன்னதாக, சுப்மன் கில் சாரா அலி கான், சாரா டெண்டுல்கர் என இருவரில் யாரோ ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்பட்டது.

திருமணமாகாத ஐபிஎல் கேப்டன்கள் பட்டியல்
2025 ஐபிஎல் 18வது சீசன் (IPL 2025) 2025 மார்ச் 22ம் தேதி முதல் தொடங்கி பிரமாண்டமாக வெவ்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. ஐபிஎல் 18வது சீசனில் இதுவரை 18 போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளன. கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஐபிஎல் 2025க்கான மெகா ஏலம் நடைபெற்றது. இதில் பல முக்கிய வீரர்கள் பல அணிகளுக்கு மாறி விளையாடத் தொடங்கினர். மேலும், பல முக்கிய வீரர்கள் அணிகளுடன் சேர்ந்து, இந்த முறை பல அணிகளின் கேப்டன்களும் மாறிவிட்டனர். அந்தவகையில், ரிஷப் பண்ட் (Rishabh Pant) லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் கேப்டனாகவும், ரஜத் படிதர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கேப்டனாகவும் உள்ளனர். அதேபோல், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ஷ்ரேயாஸ் ஐயரும் (Shreyas Iyer) மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு அக்சர் படேலும் புதிய கேப்டன்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில், நடப்பு 2025 சீசனின் பெரும்பாலான கேப்டன்கள் திருமணமானவர்கள். ஆனால் ஐபிஎல் 2025 இன் சில கேப்டன்கள் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. அந்தவகையில், அவர்கள் யார் யார் என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.
எந்த கேப்டன்களுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை:
ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் ரிஷப் பண்ட் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ரூ.27 கோடிக்கு வாங்கியது. தொடர்ந்து, ஐபிஎல் 2025ல் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக உள்ளார். ரிஷப் பண்ட் நீண்ட காலமாக பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுடேலாவை காதலித்து வருவதாக கூறப்படுகிறது. மறுபுறம், இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனின் பெயர் இஷா நேகியுடன் ரிஷப் பண்ட் பெயர் இணைக்கப்பட்டு பேசப்பட்டு வருகிறது. சில ஊடக அறிக்கைகளின்படி, பண்ட் மற்றும் இஷா 2015 முதல் ஒருவரையொருவர் டேட்டிங் செய்து வருகின்றனர் என்று தெரிவித்தது. ஆனால் பண்ட் இதுவரை யாரை திருமணம் செய்து கொள்ள போகிறார் என்பது தெரியவில்லை.
ஷ்ரேயாஸ் ஐயர்:
ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் ஷ்ரேயாஸ் ஐயரை பஞ்சாப் கிங்ஸ் அணி 26.75 கோடி ரூபாய்க்கு வாங்கியது. இப்போது ஷ்ரேயாஸ் ஐயர் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக உள்ளார். கடந்த சில ஆண்டுகளாக ஷ்ரேயாஸ் ஐயர், த்ரிஷா குல்கர்னியை காதலித்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் இருவரும் இன்னும் தங்கள் காதல் உறவை இதுவரை உறுதிப்படுத்தவில்லை. இந்த சீசனில் ஐயர் சிறந்த ஃபார்மில் உள்ளார். வெறும் 2 போட்டிகளில் 149 ரன்கள் எடுத்துள்ளார்.
சுப்மன் கில்:
Shubman gill spotted 👀 with Sara Ali Khan in Dubai . pic.twitter.com/O5Qbh9Vffk
— Yash MSdian ™️ 🦁 (@itzyash07) August 29, 2022
இந்திய கிரிக்கெட் அணியின் பிரின்ஸ் என்று அழைக்கப்படும் சுப்மன் கில், ஐபிஎல்லில் தற்போது குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக உள்ளார். சுப்மன் கில்லுக்கு இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. கில் பெயருடன் பல பெண்களின் பெயர்கள் இணைக்கப்பட்டு பேசப்பட்டு வருகிறது. முன்னதாக, சுப்மன் கில் சாரா அலி கான், சாரா டெண்டுல்கர் என இருவரில் யாரோ ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்பட்டது. இப்போது மேலும், சுப்மன் கில்லுடன் ரிதிமா பண்டிட் மற்றும் சோனம் பஜ்வாவுடன் இணைத்து பேசப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக கில் தற்போது அவ்னீத் கவுரை டேட்டிங் செய்து வருவதாக வதந்திகள் பரவி வருகின்றன. ஆனால், இதுவரை இது எதுவும் உறுதியாகவில்லை.