T20 Cricket’s Most Expensive Overs: ஒரு ஓவரில் அதிக ரன்கள்! டி20 போட்டியில் அதிக ரன்கள் விட்டுகொடுத்த பந்துவீச்சாளர்கள்!
Shocking T20 Bowling Figures: குறைந்த பந்துகளில் அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற இலக்குடன் பேட்ஸ்மேன்கள் களமிறங்குவதால், பந்துவீச்சாளர்களின் பந்துகளை வெறிகொண்டு அடிக்கின்றனர். இதனால், பந்துவீச்சாளர்கள் தங்கள் பெயரில் ரன்களை வாரி வழங்கி மோசமான சாதனைகளை படைக்கின்றனர்.

டி20 கிரிக்கெட் (T20 Cricket) என வந்துவிட்டால் ரன் எண்ணிக்கையானது மழைபோல் குவிய தொடங்குகிறது. பேட்ஸ்மேன்களின் சீற்றமான பேட்டிங் பாணி சில நேரங்களில் அணிக்கு வியக்கத்தக்க வகையில் ரன்களை குவிக்கும். இது எதிரணியில் பந்துவீச்சும் பந்துவீச்சாளர்களுக்கு தொல்லையாக மாற்றும். குறைந்த பந்துகளில் அதிக ரன்கள் (Most Runs) எடுக்க வேண்டும் என்ற இலக்குடன் பேட்ஸ்மேன்கள் களமிறங்குவதால், பந்துவீச்சாளர்களின் பந்துகளை வெறிகொண்டு அடிக்கின்றனர். இதனால், பந்துவீச்சாளர்கள் தங்கள் பெயரில் ரன்களை வாரி வழங்கி மோசமான சாதனைகளை படைக்கின்றனர். இந்தநிலையில், டி20 கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் அதிக ரன்கள் விட்டுகொடுத்த பந்துவீச்சாளர்கள் பட்டியலை இங்கே தெரிந்து கொள்வோம்.
நலின் நிபிகோ
2025ம் ஆண்டு அபியாவில் நடந்த டி20 உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் சமோவாவுக்கு எதிரான டி20 போட்டியில் வனுவாட்டுவின் வேகப்பந்து வீச்சாளர் நலின் நிபிகோ விட்டுக்கொடுத்த 39 ரன்கள்தான் டி20 போட்டிகளில் ஒரு ஓவரில் அதிக ரன்கள் விட்டுகொடுத்த மோசமான சாதனை ஆகும். அந்த ஓவரில் சமோவா வீரர் விஸ்ஸர் 6 சிக்ஸர்கள் அடித்தார். அப்போது அதே ஓவரில் நிபிகோ 3 நோ பால்களை வீசி 39 ரன்கள் விட்டுகொடுத்தார்.
நலின் நிபிகோ ஒரு ஓவரில் விட்டுகொடுத்த ரன்கள்:
View this post on Instagram
ஜேம்ஸ் புல்லர்
2012ம் ஆண்டு நடைபெற்ற டி20 கோப்பையில் காலிறுதிப் போட்டியில் இங்கிலாந்து கவுண்டி அணியான க்ளெளசெஸ்டர்ஷையருக்காக விளையாடிய ஜேம்ஸ் புல்லர், சசெக்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஒரே ஓவரில் 38 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் அதிக ரன்கள்:
விட்டுகொடுத்த ரன்கள் | பந்துவீச்சாளர் | அணி | எதிரணி | ஆண்டு |
39 | நலின் நிபிகோ | வனுவாட்டு | சமோவா | 2024 |
36 | ஸ்டூவர்ட் பிராட் | இங்கிலாந்து | இந்தியா | 2007 |
36 | அகில தனஞ்சய | இலங்கை | வெஸ்ட் இண்டீஸ் | 2021 |
36 | கரீம் ஜனத் | ஆப்கானிஸ்தான் | இந்தியா | 2024 |
36 | கம்ரான் கான் | கத்தார் | நேபாளம் | 2024 |
36 | அஸ்மதுல்லா உமர்சாய் | ஆப்கானிஸ்தான் | வெஸ்ட் இண்டீஸ் | 2024 |
35 | மூசா ஜோபர்தே | காம்பியா | ஜிம்பாப்வே | 2024 |
34 | சிவம் துபே | இந்தியா | நியூசிலாந்து | 2020 |
34 | நாசும் அகமது | வங்கதேசம் | ஜிம்பாப்வே | 2022 |
33 | ஆண்டிலே பெஹ்லுக்வாயோ | தென்னாப்பிரிக்கா | இங்கிலாந்து | 2022 |
ஐபிஎல்லில் ஒரே ஓவரில் அதிக ரன்கள்:
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்கு எதிரான லீக் கட்ட போட்டியின் இறுதி ஓவரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் ஹர்ஷல் படேல் 37 ரன்கள் விட்டுக்கொடுத்தார். சென்னை அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா 5 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி, ஒரு டூஸ் என 6, 6, 6 (நோ பால்), 6, 2, 6, 4 ரன்கள் திரண்டினார். ஹர்ஷல் படேலின் 37 ரன்கள் ஐபிஎல்லில் ஒரு ஓவரில் கூட்டு அதிகபட்ச ரன்கள் ஆகும்
ஐபிஎல்லில் ஒரே ஓவரில் 37 ரன்கள் விட்டுக்கொடுத்த மோசமான சாதனை 2011ம் ஆண்டு நிகழ்ந்தது. அப்போது கொச்சி டஸ்கர்ஸ் கேரளா வீரர் பிரசாந்த் பரமேஸ்வரனின் பந்தையை ராயல் சேலஞ்சர் பெங்களூரு வீரர் கிறிஸ் கெய்ல் அடித்து பறக்கவிட்டார். அந்த ஓவரில் கிறிஸ் கெய்ல் 6, 6 (நோ பால்), 4, 4, 6, 6, 4 என 37 ரன்களை குவித்தார்.