Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

RCB Historic Win: ஒரே சீசன்! 3 சாம்பியன்ஸை சொந்த மண்ணில் வீழ்த்திய பெங்களூரு.. புதிய வரலாறு படைத்த RCB!

RCB's Unbelievable Winning Journey: ஐபிஎல் 2025ல் அதாவது இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளை அவர்களது சொந்த மைதானத்தில் தோற்கடித்த 2வது அணி என்ற பெருமையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி படைத்தது.

RCB Historic Win: ஒரே சீசன்! 3 சாம்பியன்ஸை சொந்த மண்ணில் வீழ்த்திய பெங்களூரு.. புதிய வரலாறு படைத்த RCB!
ஐபிஎல்லில் பெங்களூரு அணி புதிய வரலாறுImage Source: PTI
mukesh-kannan
Mukesh Kannan | Published: 08 Apr 2025 09:31 AM

ஐபிஎல் 2025ல் (IPL 2025) நேற்று அதாவது 2025 ஏப்ரல் 8ம் தேதி வான்கடே ஸ்டேடியத்தில் மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (Royal Challengers Bengaluru) அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 221 ரன்கள் குவித்தது. பெங்களூரு அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 67 ரன்கள் எடுத்திருந்தார். பதிலுக்கு பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணியால் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்கள் இழப்பிற்கு வெறும் 209 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் பெங்களூரு அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஐபிஎல்லில் புதிய வரலாறு படைத்தது.

என்ன சாதனை..?

ஐபிஎல் 2025ல் அதாவது இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளை அவர்களது சொந்த மைதானத்தில் தோற்கடித்த 2வது அணி என்ற பெருமையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி படைத்தது. ஐபிஎல் வரலாற்றில் ஒரே சீசனில் வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியையும், சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியையும், ஈடன் கார்டனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியையும் தோற்கடித்த இரண்டாவது அணியாக ஆர்சிபி ஆனது. அதாவது ஒரே சீசனில் மூன்று பெரிய அணிகளையும் சொந்த மண்ணில் தோற்கடித்த இரண்டாவது அணியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மாறியுள்ளது.

கடந்த 2012ம் ஆண்டு இந்த சாதனையை பஞ்சாப் கிங்ஸ் அணி முதன் முதலாக செய்தது. 2012 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) சீசனில் ஆடம் கில்கிறிஸ்ட் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்தார். இவரது தலைமையிலான பஞ்சாப் அணி, வான்கடே மைதானத்தில் ஹர்பஜன் சிங் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியையும், சேப்பாக்கத்தில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியையும், ஈடன் கார்டனில் கௌதம் கம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியையும் வீழ்த்தியது.

ஐபிஎல் 2025ல் கலக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி:\

ஐபிஎல் 2025ல் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, இந்த சீசனை கேகேஆரை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கியது. ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடந்த முதல் போட்டியில் அது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இரண்டாவது போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சென்னை சூப்பர் கிங்ஸை 50 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. மூன்றாவது போட்டியில் குஜராத்திடம் தோல்வியடைந்த பெங்களூரு அணி, நேற்று அதாவது 2025 ஏப்ரல் 7ம் தேதி வான்கடே மைதானத்தில் நடந்த நான்காவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை தோற்கடித்தது.

அப்படிப்போடு.. மீண்டும் ஏ.ஆர்.ரஹ்மான் இசை.. தனுஷ் பட அப்டேட்!
அப்படிப்போடு.. மீண்டும் ஏ.ஆர்.ரஹ்மான் இசை.. தனுஷ் பட அப்டேட்!...
தமிழகத்தில் அதிகரிக்கும் எச்.ஐ.வி. நோய் தொற்றுக்கு காரணம் என்ன?
தமிழகத்தில் அதிகரிக்கும் எச்.ஐ.வி. நோய் தொற்றுக்கு காரணம் என்ன?...
'பணம் மீது ஆசையில்லை... அண்ணனுக்கு கோபம் இதுதான்'
'பணம் மீது ஆசையில்லை... அண்ணனுக்கு கோபம் இதுதான்'...
மீண்டும் ஏ பிளஸில் ரோஹித், கோலி.. மத்திய ஒப்பந்தம் அறிவிப்பு
மீண்டும் ஏ பிளஸில் ரோஹித், கோலி.. மத்திய ஒப்பந்தம் அறிவிப்பு...
நிதியும் இல்லை, அதிகாரமும் இல்லை - விரக்தியுடன் பேசிய பிடிஆர்!
நிதியும் இல்லை, அதிகாரமும் இல்லை - விரக்தியுடன் பேசிய பிடிஆர்!...
சுவாமி நாராயண் கோயிலை கண்டு ஆச்சரியப்பட்ட ஜே.டி.வான்ஸ்!
சுவாமி நாராயண் கோயிலை கண்டு ஆச்சரியப்பட்ட ஜே.டி.வான்ஸ்!...
88வது வயதில் காலமானார் போப் பிரான்சிஸ் - வத்திக்கான் அறிவிப்பு!
88வது வயதில் காலமானார் போப் பிரான்சிஸ் - வத்திக்கான் அறிவிப்பு!...
நீரிழிவு நோயாளிகள் மாம்பழம் சாப்பிடும்போது கவனிக்க வேண்டியவை..!
நீரிழிவு நோயாளிகள் மாம்பழம் சாப்பிடும்போது கவனிக்க வேண்டியவை..!...
பயணிகளே..! புறநகர் ஏசி ரயில் எப்போதெல்லாம் இயக்க வேண்டும்..?
பயணிகளே..! புறநகர் ஏசி ரயில் எப்போதெல்லாம் இயக்க வேண்டும்..?...
வில்லன் ரோல் குறித்து நடிகர் எஸ்.ஜே.சூர்யா ஓபன் டாக்
வில்லன் ரோல் குறித்து நடிகர் எஸ்.ஜே.சூர்யா ஓபன் டாக்...
வெள்ளிக்கிழமை பிரதோஷம்.. சிவனை வழிபட்டால் இவ்வளவு சிறப்பா?
வெள்ளிக்கிழமை பிரதோஷம்.. சிவனை வழிபட்டால் இவ்வளவு சிறப்பா?...