IPL 2025: பழைய அணிக்கு எதிராக ஷ்ரேயாஸ் களம்! கொல்கத்தாவை வீழ்த்துமா பஞ்சாப்..? வானிலை நிலவரம்!
PBKS vs KKR Match 31 Preview: ஐபிஎல் 2025ன் 31வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. முல்லன்பூர் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில், பஞ்சாப் அணியின் சாதனை மிகவும் சிறப்பாக இல்லை. இரு அணிகளும் 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் போட்டியிடுகின்றன. பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான பிட்ச் இருப்பதால் அதிக ஸ்கோர் எதிர்பார்க்கப்படுகிறது.

பஞ்சாப் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
ஐபிஎல் 2025ன் (IPL 2025) 31வது போட்டியில் இன்று அதாவது 2025 ஏப்ரல் 15ம் தேதி பஞ்சாப் கிங்ஸ் அணி (Punjab Kings) , கொல்கத்தா நைட் ரைடர்ஸை (Kolkata Knight Riders) எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி நியூ சண்டிகரில் உள்ள முல்லன்பூர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும். இந்த மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸின் செயல்திறன் அவ்வளவு சிறப்பாக இல்லை. இங்கு விளையாடிய 7 போட்டிகளில் பஞ்சாப் 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இருப்பினும், இந்த மைதானத்தில் விளையாடிய கடைசி போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தியிருந்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சென்னை அணிக்கு எதிரான தனது கடைசி போட்டியில் வெற்றியை பதிவு செய்தது. இதுபோன்ற சூழ்நிலையில், இரு அணிகளும் தங்களது வெற்றி பயணத்தை தக்க வைத்து கொள்ள விரும்புகின்றன. புள்ளி பட்டியலில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 புள்ளிகளுடன் 5வது இடத்தில், பஞ்சாப் கிங்ஸ் அணியும் 6 புள்ளிகளுடன் 6வது இடத்திலும் உள்ளது.
பிட்ச் எப்படி..?
பஞ்சாப் கிங்ஸ் அணியின் சொந்த மைதானமான முல்லன்பூரில் உள்ள மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் பிட்ச் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக உள்ளது. அதன்படி, இங்கு பேட்ஸ்மேன்கள் ரன் மழை பொழிவார்கள். இன்றைய கொல்கத்தா – பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டியிலும் அதிக ஸ்கோர் பதிவாக வாய்ப்புள்ளது. அதேநேரத்தில், இந்த ஸ்டேடியத்தில் ஆரம்பத்தில் வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு உதவியாக இருக்கும்.
இந்த ஸ்டேடியத்தில் மொத்தம் 7 ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில், முதலில் பேட்டிங் செய்த அணி நான்கு முறையும், 2வதாக பேட்டிங் செய்த அணி 3 முறையும் வெற்றி பெற்றுள்ளது.
கணிக்கப்பட்ட இரு அணிகளின் விவரம்:
பஞ்சாப் கிங்ஸ்:
ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங், நேஹால் வதேரா, ஷஷாங்க் சிங், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், மார்கோ ஜான்சன், ஹர்பிரீத் பிரார், அர்ஷ்தீப் சிங், லாக்கி பெர்குசன்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:
அஜிங்க்யா ரஹானே (கேப்டன்), குயின்டன் டி காக், சுனில் நரைன், ரிங்கு சிங், வெங்கடேஷ் ஐயர், ஆண்ட்ரே ரசல், ராமன்தீப் சிங், வைபவ் அரோரா, ஸ்பென்சர் ஜான்சன், ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி.
வானிலை எப்படி…?
பஞ்சாப் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியின்போது மழை பெய்ய வாய்ப்பு குறைவு என்று அக்யூவெதர் தெரிவித்துள்ளது. போட்டியின்போது வெப்பநிலை சுமார் 35 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாலை நேரத்தில் 26 டிகிரி வரை உயரக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. முல்லன்பூரில் உள்ள மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இதுவரை நடைபெற்ற போட்டிகளில் பனி மிகவும் குறைவாகவே இருந்தது. ஆனால், இன்று பனி பெய்ய வாய்ப்புள்ளதால், இப்போது போட்டியில் 2வதாக பேட்டிங் செய்யும் அணிக்கு சாதகமாக அமையலாம். அதன்படி, டாஸ் வெல்லும் அணி முதலில் பந்து வீச தேர்வு செய்யலாம்.