மிரட்டிய பிரியான்ஷ் ஆர்யா – 18 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கேவை வீழ்த்திய பஞ்சாப்
Punjab Kings Beat CSK: இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 தோல்வி, 1 வெற்றி என 9 வது இடத்தில் உள்ளது. அதற்கு அடுத்து சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 5 போட்டிகளில் விளையாடி 4 தோல்விகள் 1 வெற்றியுடன் கடைசி இடத்தில் உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 4 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் 3 வெற்றி, 1 தோல்வி என 4 வது இடத்தை பிடித்துள்ளது.

ஐபிஎல் (Indian Premier League )2025-ன் 22வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) மற்றும் பஞ்சாப் கிங்ஸ் (Punjab Kings) அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் குவித்தது. இந்தப் போட்டியில் பஞ்சாப் அணி இவ்வளவு ரன்கள் குவிக்க சென்னை அணியின் மோசமான பீல்டிங் ஒரு காரணம். இந்தப் போட்டியில் முக்கியமான தருணங்களில் 3 கேட்ச் வாய்ப்புகளையும் ஒரு ரன் அவுட் வாய்ப்பையும் தவறவிட்டு அதிர்ச்சி அளித்தது. சென்னை அணியின் தொடர் தோல்விகளுக்கு மோசமான பீல்டிங் ஒரு காரணம் என கூறப்படுகிறது. மேலும் 5 முறை சாம்பியன் பட்டம் பெற்ற ஒரு அணியில் பீல்டிங் இப்படி மோசமாக இருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதனைத் தொடர்ந்து 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது.
முதலில் களமிறங்கிய ரச்சின் ரவீந்திரா மற்றும் கான்வே நல்ல துவக்கம் தந்தனர். இந்த நிலையில் 23 பந்துகளில் 36 ரன்கள் எடுத்திருந்த ரச்சின் ரவீந்திரா, மேக்ஸ்வெல் பந்து வீச்சில் அவுட்டானார். அவரைத் தொடர்ந்து மிகப்பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் களமிறங்கிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 1 ரன்னில் வெளியேறி அதிர்ச்சி அளித்தார். பின்னர் கான்வேயுடன், சிவம் டுபே ஜோடி சேர்ந்து அதிரடியாக ஆடி ரன்கள் சேர்த்தனர். இதனிடையில் 3 பவுண்டரிகள் 2 சிக்சர் என 27 பந்துகளில் 42 ரன்கள் குவித்த டுபே போல்டாகி வெளியேறினார்.
கான்வேயின் போராட்டம் வீண்
பின்னர் சென்னை அணியின் நம்பிக்கை நட்சத்திரம் தல தோனி, கான்வேயுடன் கைகோர்த்து அதிரடி காட்டினார். இந்த நிலையில் கான்வே retd out மூலம் வெளியே செல்ல அவரைத் தொடர்ந்து ஜடேஜா களமிறங்கினார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தோனியும் 3 சிக்சர், 1 பவுண்டரி என 12 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து யஷ் தாக்கூர் பந்தில் வெளியேறினார். இதன் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 201 ரன்கள் மட்டுமே எடுத்தது. சென்னை பீல்டிங்கில் சிறப்பாக செயல்பட்டிருந்தால் இந்த போட்டியில் நிச்சயம் வெற்றிபெற்றிருக்கும்.
இதனையடுத்து 5 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 தோல்வி, 1 வெற்றி என 9 வது இடத்தில் உள்ளது. அதற்கு அடுத்து சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 5 போட்டிகளில் விளையாடி 4 தோல்விகள் 1 வெற்றியுடன் கடைசி இடத்தில் உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 4 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் 3 வெற்றி, 1 தோல்வி என 4 வது இடத்தை பிடித்துள்ளது.
தோனியின் சாதனை
இந்த போட்டியில் 8வது ஓவரில் நேஹல் வதேரா அடித்த பந்தை கேட்ச் படித்து அவரை அவுட்டாக்கினார். இது அவரது 150 கேட்ச். ஐபிஎல் போட்டிகளில் இதுவரை 150 கேட்ச்சுகள் பிடித்த முதல் வீரர் என்ற பெருமையை தோனி பெற்றிருக்கிறார். அவருக்கு அடுத்த இடத்தில் 137 கேட்ச்சுகளுடன் தினேஷ் கார்த்திக் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.