IPL 2025: ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடி – ஹைதராபாத்துக்கு எதிராக பஞ்சாப் மாபெரும் சாதனை!

SRH vs PBKS: சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் 245 ரன்கள் குவித்தது. ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக ஆடி 83 ரன்கள் குவித்தார். இந்த நிலையில் முதல் பவர் பிளேயில் பஞ்சாப் அணி மாபெரும் சாதனை ஒன்றை படைத்திருக்கிறது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

IPL 2025: ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடி - ஹைதராபாத்துக்கு எதிராக பஞ்சாப் மாபெரும் சாதனை!

ஸ்ரேயாஸ் ஐயர்

Published: 

12 Apr 2025 22:52 PM

ஐபிஎல் 2025ல் ஏப்ரல் 12, 2025 அன்று இரண்டு போட்டிகள் நடைபெற்றன. முதல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (Lucknow Super Giants) மற்றும் குஜராத் டைட்டன்ஸ் (Gujarat Titans) அணிகள் மோதியது. இரு அணிகளும் சமமான அளவில் வெளிப்படுத்திய போட்டியாக அமைந்தது. முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 180 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் சாய் சுதர்சன்(Sai Sudharsan), சுப்மன் கில் சிறப்பான துவக்கம் தந்தனர். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய லக்னோ அணியின் மார்க்ரம் மற்றும் நிக்கோலஸ் பூரன் நல்ல துவக்கம் தந்தனர். கடைசி கட்டத்தில் லக்னோ அணி சிறப்பாக செயல்பட வெற்றி பெற்றது. இதனையடுத்து பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டிகள் நடைபெற்றன. பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார்.

பஞ்சாப் அணியின் வீரர்கள் பவர் பிளேயில் ஹைதராபாத் அணியின் பந்து வீச்சை வெளுத்து வாங்கினர். பிரப்சிம்ரன் சிங், பிரியான்ஸ் ஆர்யா நல்ல துவக்கம் தந்தனர். இருப்பினும் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ருத்ர தாண்டவம் ஆடினார். 36 பந்துகளில் 82 ரன்கள் அடித்து அந்த அணிக்கு பெரிதும் உதவினார். இதன் காரணமாக அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 245 ரன்கள் குவித்தது.

பஞ்சாப் கிங்ஸ் சாதனை

குறிப்பாக பஞ்சாப் அணி பவர் பிளேயில் ஒரு விக்கெட் மற்றும் இழந்து 99 ரன்களை குவித்தது. இதன் மூலம் ஹைதராபாத் அணிக்கு எதிராக முதல் 6 ஓவரில் அதிக ரன்கள் என்ற சாதனையை படைத்தது. இதற்கு முன் டெல்லி அணி 88 ரன்கள் அடித்ததே அதிக பட்ச ஸ்கோராக கருதப்படட்து. ஸ்ரேயாஸ் ஐயரின் அதிரடியால் அந்த அணி இமாலய ஸ்கோரை எட்ட வழி வகை செய்தது. இதனையடுத்து 246 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹைதராபாத் அணி களமிறங்கியுள்ளது.

கடைசி இடத்தில் ஹைதராபாத்

பஞ்சாப் கிங்ஸ் அணி புள்ளி பட்டியலில் இதுவரை விளையாடிய 4 போட்டிகளில் 3 வெற்றி 1 தோல்வியுடன் கடைசி இடத்தில் இருக்கிறது. இந்த போட்டியில் வென்றால் அந்த அணி 8 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் மேலும் முன்னேறி 4வது இடத்துக்கு செல்லும். இது அந்த அணி ப்ளே ஆப் சுற்றுக்கு செல்ல முக்கிய காரணமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.  அதே போல சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இதுவரை விளையாடி 5 போட்டிகளில் 1 வெற்றி 4 தோல்வி என புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது. அதனால் இந்த ஒரு போட்டியில் வென்றால் மட்டும் போதாது. இனிவரும் அனைத்து போட்டிகளிலும் அந்த அணி வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இனி வரும் போட்டிகளில் தொடர் வெற்றியைப் பெற்று அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுமா என பொறுத்து இருந்து பார்க்க வேண்டும்.

Related Stories
IPL 2025: முதலிடத்தை தக்க வைக்க விரும்பும் GT.. டஃப் கொடுக்க முயற்சிக்குமா KKR..? ஹெட் டூ ஹெட் விவரம் இதோ!
Youngest CSK Debutants: சிஎஸ்கே அணிக்காக இளம் வயதில் அறிமுகம்..! தோனி தலைமையில் களமிறங்கிய வீரர்கள் பட்டியல்!
MI vs CSK: வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய மும்பை.. CSK நம்பிக்கையை உடைத்த ரோஹித் – சூர்யா ஜோடி…!
PBKS vs RCB: மீண்டும் ஒரு அரைசதம்! கலக்கிய கோலி – படிக்கல் ஜோடி.. பெங்களூரு கெத்தான வெற்றி!
IPL 2025 Playoff Race: செய் அல்லது செத்துமடி! மும்பைக்கு எதிராக கட்டாய வெற்றி தேவை! பிளே ஆஃப் வெளியேற்ற அபாயத்தில் சிஎஸ்கே!
MI vs CSK IPL 2025: சென்னைக்கு எதிராக ஆதிக்கம்! வான்கடேவில் விட்டு கொடுக்குமா மும்பை..? ஹெட் டூ ஹெட் முழு விவரம்!