Padma Awards 2025: குடியரசு தலைவர் கைகளில் பத்ம விருதுகள்.. அஸ்வின், ஸ்ரீஜேஷூக்கு கிடைத்த கௌரவம்..!
PR Sreejesh and Ravichandran Ashwin: 2025 ஏப்ரல் 28 அன்று, இந்திய ஹாக்கி வீரர் பி.ஆர். ஸ்ரீஜேஷ் பத்ம பூஷண் மற்றும் கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பத்மஸ்ரீ விருதுகளைப் பெற்றனர். ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விருதுகளை வழங்கினார். விளையாட்டில் அவர்களின் சிறப்பான பங்களிப்பை இந்த விருதுகள் பாராட்டுகின்றன. அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னரும் இந்த கௌரவம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் இந்திய ஹாக்கி வீரர் பி.ஆர்.ஸ்ரீஜேஷூக்கு பத்ம பூஷண் விருதும், முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு பத்மஸ்ரீ விருதும் நேற்று அதாவது 2025 ஏப்ரல் 28ம் தேதி வழங்கப்பட்டது. டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் நடந்த விழாவில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, ஸ்ரீஜேஷ் (PR Sreejesh) மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் (Ravichandran Ashwin) ஆகியோரை கவுரவித்தார். இந்த நிகழ்ச்சியில் துணை அதிபர் ஜக்தீப் தன்கர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரும் கலந்து கொண்டனர். விளையாட்டுக்கு சிறப்பான பங்களிப்பை கொடுத்ததற்காக வழங்கியதற்காக ஸ்ரீஜேஷ் மற்றும் அஸ்வின் இந்த கௌரவத்தை பெற்றுள்ளனர். குடியரசு தினத்தை முன்னிட்டு மத்திய அரசு 2025 ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகளை (Padma Awards 2025) அறிவித்தது.
ரவிச்சந்திரன் அஸ்வின்:
#WATCH | Cricketer Ravichandran Ashwin receives Padma Shri award from President Droupadi Murmu for his contribution to the field of Sports.
(Video Source: President of India/YouTube) pic.twitter.com/n34QeaZz3y
— ANI (@ANI) April 28, 2025
2024 நவம்பர் மாதம் முதல் 2025 ஜனவரி மாதம் வரை இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. அந்த தொடரின்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இந்தியா மட்டுமின்றி உலக கிரிக்கெட் அரங்கிலும் ரவிச்சந்திரன் அஸ்வின் சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவர். இதுவரை இந்திய அணிக்காக 106 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின், 537 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன்மூலம், டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய 2வது பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்தார். இந்த பட்டியலில் முன்னாள் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் அனில் கும்ப்ளே 619 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார். தற்போது ரவிச்சந்திரன் அஸ்வின் ஐபிஎல் 2025ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
ஸ்ரீஜேஷ்:
#WATCH | Former Indian hockey player PR Sreejesh receives Padma Bhushan award from President Droupadi Murmu for his contribution to the field of Sports.
(Video Source: President of India/YouTube) pic.twitter.com/LrRflY8m4M
— ANI (@ANI) April 28, 2025
இந்திய ஹாக்கி அணியின் சுவர் என்று அழைக்கப்படும் பி.ஆர்.ஸ்ரீஜேஷ், கடந்த 2024 ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் பதக்கம் வென்ற பிறகு ஓய்வு பெறுவதாக அறிவித்தார். தற்போது, பி.ஆர்.ஸ்ரீஜேஷ் ஜூனியர் ஆண்கள் ஹாக்கி அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ளார். கடந்த 20210 உலகக் கோப்பையில் இந்திய ஹாக்கி அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான ஸ்ரீஜேஷ், இந்திய அணிக்கு பல போட்டிகளில் வெற்றியை தேடி தந்துள்ளார்.
பி.ஆர்.ஸ்ரீஜேஷின் அசாத்திய பங்குகள் காரணமாக இந்திய அணி 2014 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கமும், 2018 ஜகார்த்தா-பாலெம்பாங்கில் நடந்த ஆசிய விளையாட்டில் வெண்கலமும் வென்றது. மேலும், இவர் 2022 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியிலும், 2023 ஆசிய சாம்பியன்ஸ் டிராபியிலும் வெள்ளிப் பதக்கம் வென்ற அணியிலும் அவர் இடம் பெற்றிருந்தார். 2022 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா தங்கம் வெல்ல பெரும் உதவியாக இருந்தார்.
ஸ்ரீஜேஷுக்கு 2021 ஆம் ஆண்டு கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது. அதே நேரத்தில், 2022 ஆம் ஆண்டு, 2021 ஆம் ஆண்டிற்கான சிறந்த தடகள வீரராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். டோக்கியோ ஒலிம்பிக் மற்றும் பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கங்களை வென்ற ஹாக்கி அணியில் ஸ்ரீஜேஷ் இடம் பெற்றிருந்தார்.