Kapil Dev: இந்திய அணிக்கு இவர்தான் கேப்டனாக வர வேண்டும்.. கபில் தேவ் சொன்ன வீரர் யார்..?
Next Indian Cricket Team Captain: சூர்யகுமார் யாதவ் ஏற்கனவே இந்திய டி20 அணிக்கு முழுநேர கேப்டனாக இருந்து வருகிறார். அதேநேரத்தில், 2025 சாம்பியன்ஸ் டிராபியின்போது இந்திய அணியின் துணை கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டார். எனவே, இவர்தான் அடுத்த இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக வரக்கூடும் என்று கூறப்படுகிறது.

ரோஹித் சர்மாவிற்கு (Rohit Sharma) பதிலாக இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த ஒருநாள் கேப்டனாக யார் இருக்க வேண்டும் என்பது குறித்து பல்வேறு முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்கள் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அதில், சிலர் டி20 கிரிக்கெட் அணிக்கு சூர்யகுமார் யாதவும், ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு சுப்மன் கில்லும் வர வேண்டும் என்று கூறி வருகின்றனர். இதில், சூர்யகுமார் யாதவ் (Suryakumar Yadav) ஏற்கனவே இந்திய டி20 அணிக்கு முழுநேர கேப்டனாக இருந்து வருகிறார். அதேநேரத்தில், 2025 சாம்பியன்ஸ் டிராபியின்போது இந்திய அணியின் துணை கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டார். எனவே, இவர்தான் அடுத்த இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக வரக்கூடும் என்று கூறப்படுகிறது. இந்தநிலையில், மை கேல் விளையாட்டு செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த முன்னாள் இந்திய கேப்டன் கபில் தேவ் (Kapil Dev), கேப்டனாக இந்த ஆல்ரவுண்டர் வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
கபில் தேவ் குறிப்பிட்ட வீரர் யார்..?
இதுகுறித்து பேசிய கபில் தேவ், “ ரோகித் சர்மாவிற்கு பிறகு, இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கு ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக வர வேண்டும் என்று நினைக்கிறேன். ஹர்திக் பாண்ட்யா ஒரு நல்ல கேப்டன் என்பதை நிரூபிப்பார், அவரது தலைமையில் இந்திய அணி ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட முடியும். இது தவிட, ஹர்திக் பாண்ட்யா டெஸ்ட் கிரிக்கெட்டையும் விளையாட வேண்டும். இதனால், இந்தியாவுக்கு அடுத்த கேப்டனை தேர்ந்தெடுப்பதில் உள்ள சிக்கல் முடிவுக்கு வரும். ஹர்திக் பாண்ட்யா டெஸ்ட் போட்டிகளில் விளையாடிக் கொண்டிருந்தால், இன்று இந்தியாவுக்கு வேறு கேப்டன்களை தேர்ந்தெடுக்க எந்த காரணனும் இருக்காது” என்று தெரிவித்தார்.
ஹர்திக் பாண்ட்யா:
Kapil dev said “To me, Hardik Pandya is my white ball captain. There are many contenders for the post but Pandya is my choice.” pic.twitter.com/IVCE0Rsoqv
— Hardik pics (@Hardikgallery) April 6, 2025
தற்போது சூர்யகுமார் யாதவ் இந்திய டி20 அணியின் கேப்டனாக உள்ளார். சூர்யகுமார் யாதவ் கேப்டனாக்கப்படுவதற்கு முன்பு, ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக்குவது குறித்து பேச்சு இருந்தது. ஆனால் பின்னர் அணி நிர்வாகம் சூர்யகுமார் யாதவை டி20 அணியின் கேப்டனாக நியமித்தது. தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் 2025ல் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா உள்ளார். முன்னதாக, ஹர்திக் பாண்ட்யா குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக 2 சீசன்கள் இருந்தார். அதில், ஒரு சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணி சாம்பியன் பட்டத்தையும், மற்றொரு சீசனில் இரண்டாவது இடத்தையும் பிடித்தது.
2024ம் ஆண்டு ஏலத்திற்கு முன்பு மும்பை இந்தியன்ஸ் அணி ஹர்திக் பாண்ட்யாவை வாங்கியது. தொடர்ந்து, ரோஹித் சர்மாவிற்கு பதிலாக ஹர்திக் பாண்ட்யாவை கேப்டனாக நியமித்தது. இது மிகப்பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்தது. தற்போது, மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவது மட்டுமின்றி, சிறந்த கேப்டனாக வரவும் முயற்சி செய்கிறார்.