MS Dhoni CSK Captaincy: சேப்பாக்கத்தில் கேப்டன்ஷியில் ராஜாவாக எம்.எஸ்.தோனி.. சென்னை சூப்பர் கிங்ஸின் அடடே பெர்ஃபாமன்ஸ்!
Dhoni's CSK Captaincy at Chepauk: சேப்பாக்கம் என்று அழைக்கப்படும் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக எம்.எஸ்.தோனி கேப்டனாக இதுவரை 62 போட்டிகளில் தலைமை தாங்கியுள்ளார். இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 45 போட்டிகளில் வெற்றியையும், 17 போட்டிகளில் தோல்வியையும் சந்தித்துள்ளது. தோனி கடைசியாக சென்னை அணிக்கு கேப்டனாக இருந்தபோது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.

எம்.எஸ்.தோனி
சென்னையில் இன்று அதாவது 2025 ஏப்ரல் 11ம் தேதி கொல்கத்தா ரைடர்ஸ் அணிக்கு எதிரான இந்தியன் பிரீமியர் லீக் 2025 (IPL 2025) போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக எம்.எஸ்.தோனி (MS Dhoni) பொறுப்பேற்கிறார். கடந்த 2023 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணிக்கு 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்த பிறகு, 43 வயதான எம்.எஸ்.தோனி மீண்டும் ஐபிஎல்லில் கேப்டனாகிறார். ஐபிஎல் 2025 சீசன் தொடங்கியது முதலே எம்.எஸ்.தோனியின் ஓய்வு குறித்தே அதிகமாக பேசப்பட்டு வந்தது. கேப்டனாக இருந்த ருதுராஜ் ரூல்டு அவுட் ஆன நிலையில், மீண்டும் தோனி கேப்டன் ஆனது மூலம் இந்த ஐபிஎல் 2025 சீசன் முழுவதும் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில் சிஎஸ்கேவின் சொந்த ஸ்டேடியமான சேப்பாக்கத்தில் எம்.எஸ்.தோனி கேப்டனாக எப்படி செயல்பட்டுள்ளார் என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.
சாதனை எப்படி..?
சேப்பாக்கம் என்று அழைக்கப்படும் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக எம்.எஸ்.தோனி கேப்டனாக இதுவரை 62 போட்டிகளில் தலைமை தாங்கியுள்ளார். இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 45 போட்டிகளில் வெற்றியையும், 17 போட்டிகளில் தோல்வியையும் சந்தித்துள்ளது. தோனி கடைசியாக சென்னை அணிக்கு கேப்டனாக இருந்தபோது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.
எம்.எஸ்.தோனி கேப்டன்ஷி:
“We might see a magical season for CSK” – Rayudu!@RayuduAmbati terms that #MSDhoni‘s return will be a change for #CSK and #RuturajGaikwad‘s loss!#IPLonJioStar 👉 CSK 🆚 KKR | FRI 11 APR, 6:30 PM LIVE on Star Sports 1, Star Sports 1 Hindi & JioHotstar! pic.twitter.com/1kd13QRmez
— Star Sports (@StarSportsIndia) April 11, 2025
எம்.எஸ்.தோனி தலைமையில் ரன்கள் அடிப்படையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெற்ற வெற்றி என்றால், கடந்த 2015ம் ஆண்டு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 97 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதுதான். அதிக விக்கெட்டுகள் வித்தியாசம் என்றால், கடந்த 2010ம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை அணி வீழ்த்தியது.
சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகபட்ச ஸ்கோர் என்றால், கடந்த 2010ம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 246 ரன்களை பதிவு செய்தது. அதேநேரத்தில் சென்னை அணியின் குறைந்தபட்ச ஸ்கோர், கடந்த 2012ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19.5 ஓவர்களில் 112 ஆல் அவுட் ஆனது.
683 நாட்களுக்குப் பிறகு..!
தோனி சுமார் 683 நாட்களுக்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குத் தலைமை தாங்க இருக்கிறார். அவர் கடைசியாக ஐபிஎல் 2023 ம் ஆண்டு சென்னை அணியின் கேப்டனாக இருந்தார். அப்போது, தோனி தலைமையில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக இறுதிப் போட்டியில் விளையாடி ஐபிஎல் பட்டத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் வென்றது. ஐபிஎல் 2023க்குப் பிறகு தோனியே கேப்டன் பதவியை கெய்க்வாட்டிடம் ஒப்படைத்தார். கெய்க்வாட் தலைமையிலான சிஎஸ்கே, இந்த ஐபிஎல் 2025 சீசனில் 5 போட்டிகளில் 4ல் தோல்வியடைந்தது. தோனி கேப்டனான பிறகு, அணியின் விளையாடும் பதினொன்றிலும் மாற்றம் இருக்கும். கெய்க்வாட்டுக்குப் பதிலாக, வேறு சில வீரர்கள் விளையாடும் பதினொன்றில் சேர்க்கப்படுவார்கள்.