MS Dhoni Retirement: தோனி ஓய்வு அறிவிக்காதது ஏன்..? 5 முறை சாம்பியன்! இன்னும் ’தல’ எதிர்பார்ப்பது என்ன?
MS Dhoni's CSK Legacy: தொடக்க காலத்தில் நீண்ட முடியுடன் ஹெலிகாப்டர் ஷாட்களை பறக்கவிட்ட மகேந்திர சிங் தோனி, இப்போது அதையே செய்ய வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். 43 வயது மனிதன் 23 வயது இளைஞனாக மீண்டும் வயதை குறைத்து விளையாட வேண்டும் என்று நினைப்பது போராசை அல்ல, பைத்தியக்காரத்தனம்.

மகேந்திர சிங் தோனி
ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (Chennai Super Kings) எவ்வளவு வெற்றிகரமான அணி என்பது நம் எல்லாருக்கும் தெரியும். ஐபிஎல் வரலாற்றில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. 2016ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரை சென்னை அணி இரண்டு ஆண்டுகள் தடையை எதிர்கொண்டாலும், 2018ம் ஆண்டு மீண்டும் களமிறங்கி சாம்பியன் பட்டத்தை வென்றது. சென்னை அணியின் இவ்வளவு பெரிய வெற்றிக்கு யார் காரணம் என்று கேட்டால், 10ல் 9 பேர் சொல்லும் (MS Dhoni) பெயர் மகேந்திர சிங் தோனி. ஆனால், கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் தோனி அதிகம் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. தோனி இன்னும் ஓய்வு பெறாததற்கு காரணம் என்ன..?
தோனி இன்னும் ஓய்வு அறிவிக்காதது ஏன்..?
ஐபிஎல் 2025 சீசனின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்திய சென்னை அணி, இந்த சீசனை பிரமாண்டமாக தொடங்கியது. பின்னர், தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் தோல்வியடைந்து அதிர்ச்சியை அளித்தது. இந்த தோல்விகளில் ருதுராஜ் கெய்க்வாட்டை விட, சென்னை அணியின் செயல்திறனை விட, தோனியின் பேட்டிங் வரிசை மற்றும் தோனியின் ரன்கள் குறித்து அதிக விவாதம் நடைபெறுகிறது. சமூக வலைதளங்களில் ரசிகர்கள், தோனியால் பேட்டிங் செய்ய முடியவில்லை, அவர் அணிக்கு ஒரு சுமையாகிவிட்டார், ஏன் அவருக்கு ஓய்வு வழங்கப்படாமல் இன்னும் அணியைப் பிடித்துக் கொண்டிருக்கிறார் என்று கேள்வி எழுப்புகிறார்கள்.
ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில், 26 பந்துகளில் 98 ரன்கள் தேவைப்பட்டபோது, தோனி 9வது இடத்தில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது கடுமையான விமர்சனங்களுக்கு வழிவகுத்தது. அடுத்த இரண்டு போட்டிகளில் தோனி 7வது இடத்தில் பேட்டிங் செய்ய வந்தார். இருப்பினும், அணியின் வெற்றிக்குத் தேவையான ரன் விகிதத்தில் அவரால் பேட்டிங் செய்ய முடியவில்லை.
ரசிகர்களின் எதிர்பார்ப்பு:
Once upon a time, @msdhoni in IPL. 🫡
📸: IPL/Star Sports/BCCI | #IPL2025 pic.twitter.com/3kE02p9a49
— CricTracker (@Cricketracker) April 5, 2025
உண்மையை சொல்லவேண்டும் என்றால் எம்.எஸ்.தோனியால் முன்பு போல விளையாட முடியவில்லை. இந்த உண்மையை பலராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தொடக்க காலத்தில் நீண்ட முடியுடன் ஹெலிகாப்டர் ஷாட்களை பறக்கவிட்ட மகேந்திர சிங் தோனி, இப்போது அதையே செய்ய வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். 43 வயது மனிதன் 23 வயது இளைஞனாக மீண்டும் வயதை குறைத்து விளையாட வேண்டும் என்று நினைப்பது போராசை அல்ல, பைத்தியக்காரத்தனம். அணியின் தேவைக்கேற்ப விளையாட முடியாதவர்களையும், வயதானவர்களையும் ஓய்வு பெறச் செய்வது நல்லது.
தோனி எதிர்பார்ப்பது என்ன..?
இந்திய அணியின் கேப்டனாக தோனி இருந்தபோது, இதைதான் விராட் கோலிக்கு செய்தார். விராட் கோலி போன்ற ஒரு சிறந்த கேப்டன் தனக்குப் பிறகு இந்திய கேப்டனாக மாறி திறம்பட வழிநடத்த முடியும் என்று நம்பிய பிறகுதான், தோனி தலைமைப் பொறுப்பை அவரிடம் ஒப்படைத்து, அவரது தலைமையின் கீழ் சில ஆண்டுகள் விளையாடி, பின்னர் தனது ஓய்வை அறிவித்தார். அதேபோல்தான், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் எம்.எஸ்.தோனி முயற்சி செய்கிறார். ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு கேப்டன் பதவி கொடுத்து கடந்த 2 சீசன்களாக சென்னை அணி நிர்வாகம் முயற்சிக்கிறது. அதற்கு உறுதுணையாக தோனியும் இருக்கிறார். கடந்த 2024 ஐபிஎல் சீசனில் தோனி முழங்கால் வலியால் அவதிப்பட்டாலும், அவமானங்களைத் தாங்கினாலும் தோனி இன்னும் ஐபிஎல் விளையாடுவதற்குக் காரணம் இதுதான். மேலும், தனது ரசிகர்களுக்காகவும் முடிந்தவரை மகிழ்ச்சியாக வைக்க முயற்சி செய்கிறார்.
உண்மையில், 2023 ஆம் ஆண்டு சிஎஸ்கே கோப்பையை வென்ற பிறகு, ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெறுவதாக தோனி அறிவித்து, சிஎஸ்கேவின் வழிகாட்டியாகவோ அல்லது பயிற்சியாளராகவோ தொடர்ந்திருந்தால் அது மிகவும் கண்ணியமாகவும் மரியாதையாகவும் இருந்திருக்கும். இன்னும் விளையாடி கொண்டிருப்பதால் தனது பெயரை தானே கெடுத்து கொண்டிருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.