வீல் சேரில் இருந்த ரசிகையின் ஆசையை நிறைவேற்றிய தோனி – நெகிழ்ச்சி சம்பவம் – வைரல் வீடியோ
MS Dhoni Wins Heart Again : ரசிகர்களால் தல என அழைக்கப்படும் எம்.எஸ்.தோனி கிரவுண்டிலும் சரி, கிரவுண்டிற்கு வெளியிலும் சரி தனது செயல்களால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்த நிலையில் விமான நிலையத்தில் வீல் சேரில் இருந்த ரசிகை ஒருவரின் ஆசையை அவர் நிறைவேற்றி வைத்தார்.

இதுவரை 5 முறை சாம்பியன் பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (Chennai Super Kings) இந்த சீசனில் தொடர் தோல்விகளால் விமர்சனங்களை எதிர்கொண்டுவருகின்றது. சிஎஸ்கேவின் பேட்டிங் மற்றும் பீல்டிங் என அனைத்தும் படு வீக்காக இருந்தன. அந்த அணியை வழி நடத்திய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக இந்த சீசனில் மற்ற போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து கேப்டனாக மீண்டும் மகேந்திர சிங் தோனி (Mahendra Singh Dhoni) கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து அவர் சிஎஸ்கேவை தோல்விகளில் இருந்து மீட்டெடுப்பார் என நம்பிய ரசிகர்களுக்கு கடந்த ஏப்ரல் 11, 2025 அன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (Kolkata Knight Riders) அணிக்கு எதிரான போட்டியில் அடைந்த தோல்வி மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த போட்டியில் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு வெறும் 103 ரன்கள் எடுத்தது. இந்த நிலையில் 10 ஓவர்களிலேயே இலக்கை அடைந்து கொல்கத்தா அபார வெற்றிபெற்றது.
இனி தோனியாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைக் காப்பாற்ற முடியாது, தோனி அவ்வளவு தான், அவர் ஓய்வு அறிவிக்க வேண்டும் என ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் அவர் மீது வைக்கப்பட்டன. இந்த நிலையில் ஏப்ரல் 14, 2025 அன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தன் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு எல்லாம் பதிலடி கொடுத்தார். அந்த போட்டியில் 11 பந்துகளில் 26 ரன்கள் அடித்து அந்த அணியின் வெற்றிக்கு உதவினார். கடந்த 2018 ஆம் ஆண்டுக்கு பிறகு மேன் ஆப் தி மேட்ச் விருதையும் பெற்றார். இதனையடுத்து தோனி இஸ் பேக், ஃபினிசர் என்பதை நிரூபித்துவிட்டார் என விமர்சித்தவர்கள் எல்லாம் புகழ தொடங்கினர்.
நெகிழ்ச்சியை ஏற்படுத்திய எம்.எஸ்.தோனியின் செயல்
Woman sitting on a wheelchair requested MS Dhoni for a selfie and he himself took a selfie with her. ❤ pic.twitter.com/fPbl2WsCAq
— ` (@WorshipDhoni) April 16, 2025
இதற்கிடையே எம்.எஸ்.தோனி குறித்த வீடியோ ஒன்று ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. விமான நிலையத்தில் பாதுகாப்பு வீரர்களுடன் தோனி சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கே வீல் சேரில் இருந்த ஒரு பெண் ரசிகை தோனியிடம் செல்ஃபி கேட்க, அவர் தயங்காமல் அவருடைய மொபைலை வாங்கி செல்ஃபி எடுத்தார். அவரது செயல் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது செயலுக்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
லக்னோவுக்கு இடையிலான போட்டியில் வெற்றி பெற்ற உத்வேகத்துடன் அடுத்ததாக ஏப்ரல் 20, 2025 அன்று மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்ளவிருக்கிறது. இந்த போட்டி மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெறவிருக்கிறது. மும்பை அணி இதுவரை 6 போட்டிகளில் பங்கேற்று 2 வெற்றி, 4 தோல்விகள் என புள்ளி பட்டியலில் 7 வது இடத்தில் இருக்கிறது. அதே போல சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 போட்டிகளில் விளையாடி, 2 வெற்றி, 5 தோல்வி என கடைசி இடத்தில் இருக்கிறது. இதனையடுத்து மும்பை இந்தியன்ஸ் அணியுடன் விளையாடும்போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் அந்த அணி இருக்கிறது. இனையடுத்து ஆட்டம் மிகவும் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.