IPL 2025: வைடா..? அவுட்டா..? நேர்மையாக இருக்க முயற்சித்து சிக்கலில் சிக்கிய இஷான் கிஷன்!
Ishan Kishan's Controversial Dismissal: ஐபிஎல் 2025 போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் இஷான் கிஷன் ஒரு வைடு பந்தை அவுட் என நினைத்து தானாகவே வெளியேறினார். நடுவர் முதலில் அவுட் என அறிவித்தாலும், பின்னர் வைடு என மாற்றினார். இஷான் கிஷனின் இந்த நேர்மையான செயல், அவரது அணிக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களில் இந்த சம்பவம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இது அவரது பார்ம் இல்லாமைக்கும் ஒரு காரணம்.

ஐபிஎல் 2025ன் (IPL 2025) 2025 ஏப்ரல் 23ம் தேதியான இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பேட்ஸ்மேன் இஷான் கிஷன் (Ishan Kishan) செய்த தவறு, அவருக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த அணிக்கும் பாதிப்பை தந்தது. ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (Sunrisers Hyderabad) முதலில் பேட்டிங் செய்ய வந்தது. முதல் விக்கெட் விழுந்த பிறகு, 3வது இடத்தில் பேட்டிங் செய்ய வந்த இஷான் கிஷனும் 3வது ஓவரிலேயே அவுட்டானார். ஆனால் இஷான் கிஷனுக்கு நடுவர் அவுட் கொடுத்த விதமும், அவர் செய்த செயலும் சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பியுள்ளது.
என்ன நடந்தது..?
ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், சன்ரைசர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய வந்தது. இந்த சீசனில் இந்த அணி எந்த அளவுக்கு ஃபார்மை கொண்டிருந்ததோ, அதே அளவு மீண்டும் அதன் பேட்டிங்கிலும் காணப்பட்டது. அதிரடி தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட்டை, இன்னிங்ஸின் 2வது ஓவரில் டிரெண்ட் போல்ட் பெவிலியனுக்கு திருப்பி அனுப்பினார். அத்தகைய சூழ்நிலையில், சீசனின் முதல் போட்டியில் சதம் அடித்த இஷான் கிஷன் 3வது இடத்தில் பேட்டிங் செய்ய வந்தார்.
மூன்றாவது ஓவரின் தொடக்கத்தில், இஷான் ஸ்ட்ரைக்கில் இருந்தார், வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் அவருக்கு எதிராக பந்து வீச வந்தார். முதல் பந்து லெக் ஸ்டம்புக்கு வெளியே சென்றது. அதை இஷான் விளையாட முயன்றார். அப்போது, அந்த பந்தை வைட் என அறிவிக்க வந்த அம்பயர். திடீரென குழப்பமடைந்து அவுட் என விரலை உயர்த்தி நிறுத்தினார். ஆனால் அடுத்த நொடியில் அம்பயர் வைட் என மீண்டும் அறிவித்தார், இதைப் பார்த்த பந்து வீச்சாளர் சாஹர், கேப்டன் ஹர்திக் பாண்ட்யா மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியின் மற்ற அனைத்து வீரர்களும் அதிர்ச்சியடைந்தனர்.
இதற்கு எந்த மும்பை இந்தியன்ஸ் வீரரும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. ஆனால் உடனடியாக இஷான் தானே கிரீஸை விட்டு வெளியேறி பெவிலியன் நோக்கித் திரும்பத் தொடங்கினார். அப்படிப்பட்ட சூழ்நிலையில் நடுவரும் அவரை அவுட் என்று அறிவித்தார். அதாவது, இஷான் கிஷன் இங்கே கிரிக்கெட்டிற்கு நேர்மையை இருக்க வேண்டும் என்று வெளியேறினார் போல, இதைப் பார்த்த மும்பை கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவும் இஷான் கிஷ முதுகில் தட்டி பாராட்டினார். ஆனால் சிறிது நேரத்திற்குப் பிறகு மைதானத்தின் பெரிய திரையில் மறுஒளிபரப்பு காட்டப்பட்டபோது, நடுவர் முன்பு வழங்கிய அதே முடிவுதான் சரியான முடிவு என்பதால் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். ரீப்ளே மற்றும் ஸ்னிக்கோமீட்டரில் பந்து இஷான் கிஷனின் ஜெர்சியையோ அல்லது பேடையோ தொடவில்லை. பேட்டிலும் தொடவில்லை என்பது தெளிவாகக் காட்டப்பட்டது.
இஷான் கிஷன் வெளியேறிய காட்சி:
View this post on Instagram
அதாவது அது ஒரு வைடு பந்து, இஷான் கிஷான் அதை அவுட் என நினைத்து வெளியேறி விட்டார். இதைப் பார்த்ததும், டிரஸ்ஸிங் ரூமில் அமர்ந்திருந்த இஷான் தன்னைப் பார்த்து மிகவும் கோபமாக தன்னைத்தானே திட்டிக் கொண்டார். அதன் பிறகு விக்கெட்டுகள் வீழ்ச்சியடைந்ததால், ஹைதராபாத் அணி 9வது ஓவரில், 5 விக்கெட்டுகள் வீழ்ந்தன. அதே நேரத்தில் அணியின் ஸ்கோர் 35 ரன்கள் மட்டுமே. இஷானால் ஒரு ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. ஐபிஎல் 2025ல் ஹைதராபாத் அணிக்காக முதல் இன்னிங்ஸில் சதம் அடித்த இஷான் கிஷன் அடுத்த 7 போட்டிகளில் 33 ரன்கள் மட்டுமே எடுத்து பார்ம் அவுட்டில் தவித்து வருகிறார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் மிகப்பெரிய விவாதத்தை கிளப்பியுள்ளது.