IPL 2025: தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்குமா சென்னை..? தோனியை லாக் செய்யும் லக்னோ? ஆடுகளம் விவரம்!
LSG vs CSK IPL 2025 Match 30 Preview : லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இன்று, ஏப்ரல் 14, 2025 அன்று ஐபிஎல் 2025ன் 30வது போட்டியில் மோதுகின்றன. லக்னோவில் உள்ள ஏகானா ஸ்டேடியத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில், லக்னோ 4வது இடத்திலும், சென்னை 10வது இடத்திலும் உள்ளது. ஸ்டேடியத்தின் பிட்ச் பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்து வீச்சாளர்களுக்கு சமமான வாய்ப்புகளை வழங்குகிறது.

ரிஷப் பண்ட் - எம்.எஸ்.தோனி
இந்தியன் பிரீமியர் லீக் 2025ன் (Indian Premier League) 30வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (Lucknow Super Giants) மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணிகளுக்கு இடையே 2025 ஏப்ரல் 14ம் தேதியான இன்று மோத இருக்கிறது. இந்த போட்டியானது லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் மோத இருக்கிறது. ஐபிஎல் 2025 சீசனில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி இதுவரை 6 போட்டிகளில் விளையாடி புள்ளி பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. அதேநேரத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 போட்டிகளில் விளையாடி ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று, 10வது இடத்தில் உள்ளது.
பிட்ச் ரிப்போர்ட்:
Muskariyiye Aap Lucknow mein hai! 💛#WhistlePodu #Yellove 🦁💛 pic.twitter.com/aWXE5gk4q2
— Chennai Super Kings (@ChennaiIPL) April 13, 2025
லக்னோவில் உள்ள ஏகானா ஸ்டேடியத்தில் இந்த சீசனின் 4வது போட்டி இதுவாகும். சிவப்பு மண் ஸ்டேடியத்தில் பஞ்சாப் கிங்ஸ் போட்டிக்கு பிறகு, லக்னோ அணி தனது அடுத்த 2 போட்டிகளை கருப்பு மண்ணில் விளையாடியது. இந்த பிட்ச்சில் பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்து வீச்சாளர்கள் இருவரும் சமமான உதவியை பெறுகிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில், இன்றைய போட்டி மிகவும் பரபரப்பாக இருக்கும்.
லக்னோவில் இதுவரை விளையாடிய 3 போட்டிகளில் சேஸிங் அணி 2ல் வெற்றி பெற்றுள்ளது. இன்றைய போட்டியிலும் கூட, டாஸில் வெல்லும் கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்யலாம். அதேநேரத்தில், இரவில் பெய்யும் பனி போட்டியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
இரு அணிகளும் இதுவரை நேருக்குநேர்:
ஐபிஎல்லில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மொத்தம் 5 முறை மோதியுள்ளன. இதில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 3 போட்டிகளில் வெற்றி பெற்று ஆதிக்கத்தை செலுத்துகிறது. அதேசமயம், சென்னை சூப்பர் கிங்ஸ் லக்னோவுக்கு எதிராக ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது. அதேநேரத்தில், ஒரு போட்டி முடிவில்லாமல் முடிந்தது.
கணிக்கப்பட்ட இரு அணிகளின் விவரம்:
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்:
ஐடன் மார்க்ரம், மிட்செல் மார்ஷ்/ஹிம்மத் சிங், நிக்கோலஸ் பூரன், ரிஷப் பந்த் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), ஆயுஷ் படோனி, டேவிட் மில்லர், அப்துல் சமத், ஷர்துல் தாகூர், பிஷ் கான் தாக்குர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் :
டெவோன் கான்வே, ரச்சின் ரவீந்திரா, ராகுல் திரிபாதி, விஜய் சங்கர், சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, மகேந்திர சிங் தோனி (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், அன்ஷுல் கம்போஜ், நூர் அகமது, கலீல் அகமது.