CSK vs KKR: சொந்த மண்ணில் நொந்து போன சிஎஸ்கே.. ரசிகர்கள் கதறல்! புள்ளி பட்டியலில் கரை சேர்ந்த KKR!

KKR Dominate CSK: ஐபிஎல் 2025ன் 25வது போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸை சேப்பாக்கத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முதலில் பேட் செய்த சென்னை அணி 109 ரன்கள் மட்டுமே எடுத்தது. சுனில் நரைன் 44 ரன்களுடன் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி, கொல்கத்தாவிற்கு வெற்றியை தேடி தந்தார். இது சென்னையின் சேப்பாக்கத்தில் தொடர்ச்சியான மூன்றாவது தோல்வியும், மிகப்பெரிய தோல்வியுமாகும். கொல்கத்தா 6வது இடத்திலிருந்து 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

CSK vs KKR: சொந்த மண்ணில் நொந்து போன சிஎஸ்கே.. ரசிகர்கள் கதறல்! புள்ளி பட்டியலில் கரை சேர்ந்த KKR!

சென்னை சூப்பர் கிங்ஸ்

Published: 

11 Apr 2025 23:19 PM

ஐபிஎல் 2025ன் (IPL 2025) 25வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணியை அதன் சொந்த மைதானமான சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. முதலில் டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் அஜிங்க்யா ரஹானே (Ajinkya Rahane) பந்து வீச முடிவு செய்த, அதன் அடிப்படையில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 109 ரன்கள் மட்டுமே எடுத்தது. பந்து வீச்சின்போது கொல்கத்தா அணிக்காக சுனில் நரைன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியது மட்டுமல்லாமல், பேட்டிங்கிலும் நரைன் 18 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து கொல்கத்தா அணியின் வெற்றிக்கு உதவினார். இந்த சீசனில் சென்னை அணி தொடர்ச்சியாக சந்திக்கும் 5வது தோல்வி இதுவாகும் என்பது இதுவாகும்.

மேலும், ஐபிஎல் வரலாற்றில் சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ச்சியாக 3 போட்டிகளில் தோல்வியடைவது இதுவே முதல் முறை. இது மட்டுமின்றி, சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் சென்னை அணியின் மிகப்பெரிய தோல்வியாகவும் இது பதிவாகியுள்ளது.

அதிரடியான பேட்டிங்:

104 ரன்கள் என்ற சிறிய இலக்கை விரட்டுவதற்காக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக குயின்டன் டி காக் மற்றும் சுனில் நரைன் களமிறங்கினர். இவர்கள் இருவரும் முதல் விக்கெட்டுக்கு 4 ஓவர்களில் 46 ரன்கள் எடுத்தனர். சற்று நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய டி காக் 16 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, 2வது விக்கெட்டானது 8வது ஓவரில் சுனில் நரைனின் வடிவத்தில் விழுந்தது. சுனில் நரைன் வெறும் 18 பந்துகளில் 5 சிக்ஸர்களையும் 2 பவுண்டரிகளையும் விரட்டி 44 ரன்கள் எடுத்து அபாரமாக விளையாடினார்.

எளிதான வெற்றி:

மொத்தமாக இந்த போட்டியில் கொல்கத்தா அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் மொத்தம் 10 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டன. ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பவுண்டரிகளையும், சிக்ஸரையும் சேர்த்தே மொத்தமாக 9 என்ற கணக்கையே வைத்திருந்தனர். சென்னை சூப்பர் கிங்ஸின் முழு இன்னிங்ஸிலும் 8 பவுண்டரிகளும், ஒரே ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்கப்பட்டன. தொடர்ந்து கொல்கத்தா அணிக்காக கேப்டன் ரஹானே 20 ரன்களும், ரிங்கு சிங் 17 ரன்களும் அடிக்க, கொல்கத்தா அணி 59 பந்துகள் மீதமிருந்த நிலையில் வெற்றி பெற்றது. இது சேப்பாக்கத்தில் சென்னை அணிக்கு ஏற்பட்ட மிகப்பெரிய தோல்வியாகும். இந்த வெற்றியின் மூலம், புள்ளிகள் பட்டியலில் அஜிங்க்யா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6வது இடத்திலிருந்து 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

Related Stories