Virat Kohli T20 Record: டி20 கிரிக்கெட்டில் 13,000 ரன்கள்.. ஓய்வு பிறகும் ரன் மழை பொழியும் விராட் கோலி..!
Virat Kohli 13,000 T20 Runs: டி20 போட்டிகளில் 13000 ரன்கள் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற சாதனை தற்போது விராட் கோலி பெயரில் உள்ளது. இரண்டாவது இடத்தில் இருக்கும் ரோஹித் சர்மா இவருக்கு பின்னாடி இருந்தாலும், துரத்தி பிடிக்க பல ஆண்டுகள் விளையாட வேண்டி இருக்கும்.

ஐபிஎல் 2025ன் (IPL 2025) 20வது போட்டியில் 2025 ஏப்ரல் 7ம் தேதியான நேற்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் மோதியது. முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி (Royal Challengers Bengaluru) 20 ஓவர்கள் முடிவில் 221 ரன்கள் எடுத்தது. இலக்கை துரத்திய மும்பை இந்தியன்ஸ் அணி 209 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம், பெங்களூரு அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய விராட் கோலி (Virat Kohli), 3வது பேட்ஸ்மேனாக களமிறங்கிய தேவ்தத் படிக்கலுடன் இணைந்து 91 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். அதன் பிறகு, கேப்டன் ரஜத் படிதருடன் இணைந்து கோலி 48 ரன்கள் சேர்த்தார். மொத்தமாக விராட் கோலி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 42 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 8 பவுண்டரிகளுடன் 67 ரன்கள் எடுத்தார். இதற்கிடையில், விராட் கோலி தனது டி20 வாழ்க்கையில் 13000 ரன்களை நிறைவு செய்தார். இதன்மூலம், இந்த சாதனையை படைத்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றார்.
13,000 ரன்கள்:
விராட் கோலி டி20 கிரிக்கெட்டில் இதுவரை 13050 ரன்கள் எடுத்துள்ளார். போட்டிக்கு முன்பு, 13 ஆயிரம் ரன்களை முடிக்க அவருக்கு 17 ரன்கள் மட்டுமே தேவையாக இருந்தது, மேலும், இது கோலியின் 403வது டி20 போட்டியாகவும் அமைந்தது. விராட் கோலி இதுவரை டி20 வடிவத்தில் டெல்லி, இந்திய கிரிக்கெட் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 2024 உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்திற்கு பிறகு கோலி, சர்வதேச டி20 வடிவத்திலிருந்து ஓய்வு பெற்றார்.
விராட் கோலி சாதனை முறியடிக்க முடியுமா..?
Ma𝓥erick’s Massive Milestone! 👑🙇🏼♂️
1️⃣3️⃣,0️⃣0️⃣0️⃣ T20 runs with 9️⃣ centuries and 9️⃣8️⃣ fifties! 🤯
keep the runs flowing, VK! 💪#PlayBold #ನಮ್ಮRCB #IPL2025 #MIvRCB pic.twitter.com/rz5jaAXSdg
— Royal Challengers Bengaluru (@RCBTweets) April 7, 2025
டி20 போட்டிகளில் 13000 ரன்கள் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற சாதனை தற்போது விராட் கோலி பெயரில் உள்ளது. இரண்டாவது இடத்தில் இருக்கும் ரோஹித் சர்மா இவருக்கு பின்னாடி இருந்தாலும், துரத்தி பிடிக்க பல ஆண்டுகள் விளையாட வேண்டி இருக்கும். ரோஹித் சர்மா சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார். ரோஹித் சர்மா தற்போது 11851 ரன்கள் எடுத்துள்ளார். இன்னும் ரோஹித் சர்மா டி20 வடிவத்தில் 12 ஆயிரம் ரன்கள் கூட அடிக்கவில்லை. இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ள ஷிகர் தவான், சர்வதேச கிரிக்கெட் மற்றும் ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். இவர்களை தவிர, வேறு எந்த இந்திய பேட்ஸ்மேனும் 10 ஆயிரம் ரன்களைக் கூட தொடவில்லை. இதன் பொருள் விராட் கோலி இந்த சாதனையை பல ஆண்டுகளாக தக்க வைத்துக் கொள்வார் என்பது தெளிவாகிறது.
உலகளவில் 5வது இடம்:
ஒட்டுமொத்தமாக டி20 போட்டிகளில் 13 ஆயிரம் ரன்களை கடந்த உலகின் 5வது பேட்ஸ்மேன் என்ற பெருமையையும் விராட் கோலி பெற்றார். இந்தப் பட்டியலில் கிறிஸ் கெய்ல் 14562 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். மேலும், 14 ஆயிரம் ரன்கள் எடுத்த ஒரே பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்ல் மட்டும்தான். 13610 ரன்களுடன் இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் இரண்டாவது இடத்திலும், 13557 ரன்களூடன் சோயிப் மாலிக் மூன்றாவது இடத்திலும், 13537 ரன்களுடன் கீரன் பொல்லார்ட் நான்காவது இடத்திலும் உள்ளனர்.