KL Rahul Daughter Name: கே.எல்.ராகுலின் மகள் பெயர் இதுதானா..? க்யூட் குழந்தை புகைப்படத்துடன் வெளியீடு!

Evaarah Vipula Rahul Meaning: கே.எல். ராகுலும் அதியா ஷெட்டியும் தங்களது மகளுக்கு "இவாரா விபுலா ராகுல்" என்று பெயரிட்டுள்ளனர். "இவாரா" என்பதன் பொருள் மற்றும் "விபுலா" பாட்டியின் நினைவாக வைக்கப்பட்டது என ராகுல் தெரிவித்துள்ளார். இந்த தனித்துவமான பெயர் தேர்வு பின்னணியில் உள்ள காரணங்கள் மற்றும் அதன் சிறப்பு குறித்து இந்தக் கட்டுரை விளக்குகிறது. ரசிகர்களின் வரவேற்பு மற்றும் சமூக வலைத்தளங்களில் ஏற்பட்ட எதிர்வினைகள் பற்றியும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

KL Rahul Daughter Name: கே.எல்.ராகுலின் மகள் பெயர் இதுதானா..? க்யூட் குழந்தை புகைப்படத்துடன் வெளியீடு!

கே.எல்.ராகுலின் குடும்ப புகைப்படம்

Published: 

18 Apr 2025 20:08 PM

இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கே.எல்.ராகுலும், (KL Rahul) நடிகை அதியா ஷெட்டியும் (Athiya Shetty) தங்களது மகளின் பெயரை அறிவித்தனர். ராகுலின் மகள் கடந்த மாதம் 2025 மார்ச் 24ம் தேதி அன்று பிறந்தார். ஆனால், ராகுல் தனது மகளின் பெயரை இன்று அதாவது 2025 ஏப்ரல் 18ம் தேதி உலகிற்கு சொன்னார். இதுப்போன்ற சூழ்நிலையில், கே.எல்.ராகுல் ஏன் இன்றைய நாளை தேர்ந்தெடுத்தார் என்ற கேள்வியை ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பின்னால் ஒரு முக்கிய காரணம் உள்ளது. அதியாவும் ராகுலும் தங்கள் மகளுக்கு ‘இவாரா விபுலா ராகுல்’ என்று பெயரிட்டுள்ளனர், மேலும் அவரது முழுப் பெயர் இவாரா வி.ஆர். தனது மகளின் பெயர் ஏன் இவ்வளவு தனித்துவமானது என்று கே.எல். ராகுல் கூறினார். இந்தப் பதிவில், மகளின் பெயர் இவாரா என்றும், விபுலா இவாரா என்பது பாட்டியின் நினைவாகப் பெயரிடப்பட்டதாகவும், ராகுல் என்பது தந்தையின் பெயரால் பின் தொடர்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

கே.எல்.ராகுல் மகளின் பெயர் என்ன..?

இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் மற்றும் அதியா ஷெட்டி ஆகியோர் தங்களது மகளுக்கு ‘இவாரா’ என்று பெயர் வைத்துள்ளனர். இன்று கே.எல். ராகுலின் பிறந்தநாள். இந்த காரணத்திற்காக, ராகுல் தனது பிறந்தநாளை முன்னிட்டு தனது மகளின் பெயரை சமூக வலைதளங்கள் மூலம் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், கே.எல்.ராகுல் தனது மகள் இவாராவை மடியில் வைத்தப்படியே இருக்க, மனைவி அதியா குழந்தையை பார்த்தப்படி இருந்தார்.

அந்த பதிவின் தலைப்பின் கீழ், “ எங்கள் மகள், எங்கள் எல்லாம். இவரா எங்களுக்கு கடவுளிடமிருந்து கிடைத்த பரிசு.” என்று குறிப்பிட்டிருந்தார். கே.எல். ராகுல் மற்றும் நடிகை அதியா ஷெட்டி ஜனவரி 23, 2023 அன்று திருமணம் செய்து கொண்டனர். அவர்களின் மகள் மார்ச் 24, 2025 அன்று பிறந்தார்.

கே.எல். ராகுலின் மகளின் பெயர் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்றும், இவரா என்பதன் அர்த்தம் என்ன என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ரசிகர்கள் கேள்வி:

டெல்லி அணிக்காக கலக்கும் கே.எல்.ராகுல்:

ஐபிஎல் 2025ல் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடி வரும் கே.எல்.ராகுல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஐபிஎல் 2025ல் இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள கே.எல்.ராகுல் 238 ரன்கள் எடுத்துள்ளார். இதில், 2 அரைசதங்களும் அடங்கும்.

Related Stories