England New Captain: இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு இனி இவர்தான் கேப்டன்.. இளம் வீரரை களமிறக்கிய ECB..!
Harry Brook England's White-Ball Captain: இங்கிலாந்து அணியின் மோசமான செயல்பாட்டிற்குப் பிறகு பட்லர் தனது பதவியை ராஜினாமா செய்தார். கடந்த ஆண்டு செப்டம்பரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது காயமடைந்த பட்லருக்குப் பதிலாக புரூக் இங்கிலாந்து அணியை வழிநடத்தினார்.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் இங்கிலாந்து ஒருநாள் மற்றும் டி20 சர்வதேச அணியின் புதிய கேப்டனாக இளம் நட்சத்திர வீரர் ஹாரி புரூக்கை (Harry Brook) நியமித்துள்ளது. கடந்த 2025 சாம்பியன்ஸ் டிராவி வரை இங்கிலாந்து அணியின் கேப்டனாக ஜோஸ் பட்லர் (Jos Buttler) இருந்தார். இவரது தலைமையிலான இங்கிலாந்து அணி தொடர்ச்சியாக ஐசிசி நடத்தும் முக்கிய போட்டிகளில் மோசமாக செயல்பட்டது. இதன் காரணமாக, பாகிஸ்தானில் நடந்த 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் (2025 Champions Trophy) இங்கிலாந்து அணியின் மோசமான செயல்பாட்டிற்குப் பிறகு பட்லர் தனது பதவியை ராஜினாமா செய்தார். கடந்த ஆண்டு செப்டம்பரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது காயமடைந்த பட்லருக்குப் பதிலாக புரூக் இங்கிலாந்து அணியை வழிநடத்தினார்.
பட்லர் விலகிய காரணம் என்ன..?
கடந்த 2022ம் ஆண்டு ஜூன் மாதம் ஜோஸ் பட்லர் இங்கிலாந்து அணியின் வெயிட் பால் கிரிக்கெட் அணியின் கேப்டனாக பொறுப்பேற்றார். முன்னதாக, இங்கிலாந்து அணிக்கு இயன் மோர்கன் தலைமை தாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜோஸ் பட்லர் கேப்டனாக பதவியேற்ற அதே ஆண்டு இங்கிலாந்து அணி 2022 டி20 உலகக் கோப்பையை பாகிஸ்தானை வீழ்த்தி வென்றது. ஆனால், அதன்பிறகு இந்தியாவில் நடைபெற்ற 2023 ஒருநாள் உலகக்கோப்பை மற்றும் 2024 டி20 உலகக் கோப்பைகளில் லீக் சுற்றுடன் வெளியேறியது. இதனை தொடர்ந்து, 2025 சாம்பியன்ஸ் டிராபி வரை இங்கிலாந்து அணியின் கேப்டனாக இருந்த ஜோஸ் பட்லர் பதவி விலகினார். சுமார் 2 ஆண்டுகள் 8 மாதங்கள் இங்கிலாந்து அணியின் கேப்டனாக ஜோஸ் பட்லர் பதவி வகித்தார்.
கேப்டன் பதவி குறித்து ஹாரி புரூக்:
CAPTAIN BROOK 🦜
Harry Brook is our new Men’s ODI and IT20 captain!
Read more 👇
— England Cricket (@englandcricket) April 7, 2025
கேப்டன் பதவி குறித்து பேசிய ஹாரி புரூக், “இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் டி20 சர்வதேச அணிக்கு கேப்டனாக என்னை அறிவித்தது மிகப்பெரிய மரியாதை. வார்ஃபெடேலில் உள்ள பர்லியில் நான் கிரிக்கெட் விளையாடியதிலிருந்து, யார்க்ஷயர் அணிக்காக விளையாட வேண்டும், இங்கிலாந்து அணிக்காக விளையாட வேண்டும் என்று நினைத்தேன். அதேநேரத்தில், இங்கிலாந்து அணிக்கு சிறப்பாக விளையாடி கேப்டனாக மாற வேண்டும் என்று நினைத்தேன். இப்போது அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. இது எனக்கு மிகவும் முக்கியம். எனது ஒவ்வொரு அடியிலும் எனக்கு ஆதரவளித்த எனது குடும்பத்தினருக்கும், பயிற்சியாளர்களுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். அவர்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கை நிறைய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது, அவர்கள் இல்லாமல் நான் இந்த நிலையை எட்டியிருக்க முடியாது.
இங்கிலாந்து நாட்டில் ஏராளமான திறமையான வீரர்கள் உள்ளனர். நான் கேப்டனாக தொடங்குவதற்கும், எங்களை முன்னோக்கி அழைத்துச் செல்வதற்கும், தொடர்கள், உலகக் கோப்பைகள் மற்றும் முக்கிய போட்டிகளை வெல்வதற்கும் ஆவலுடன் காத்திருக்கிறேன். நான் தொடங்கி என் அனைத்தையும் கொடுக்க ஆவலாக உள்ளேன்” என தெரிவித்தார். நியூசிலாந்தில் நடந்த 2018 ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் உலகக் கோப்பையிலும் புரூக் இங்கிலாந்து அணியின் கேப்டனாக ஹாரி புரூக் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.