IPL’s Explosive Growth: அதிக வருவாயில் ஆதிக்கம் செலுத்தும் ஐபிஎல்.. வியந்து பார்க்கும் உலக விளையாட்டு லீக்குகள்!
IPL Podcast Revenue: அக்வைர்டு என்பது IPL-ஐ பெரிய அமெரிக்க லீக்குகளான NFL, NBA, MLB மற்றும் NHL-க்கு எதிராக சூழலுக்கு ஏற்ப மாற்றுகிறது. தற்போது பாட்காஸ்ட் மூலம் அதிக வருமானம் ஈட்டும் NFL-ஐ மிஞ்சும் அளவிற்கு ஐபிஎல் வளர்ந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League) எவ்வளவு பிரபலமான விளையாட்டு என்பது நம் அனைவருக்கும் தெரியும். மேலும், இது உலகின் பணக்கார லீக் கிரிக்கெட்டில் ஒன்றாகவும் இருந்து வருகிறது. இன்றைய விளையாட்டு துறையில் வேகமாக வளர்ந்து வரும் லீக்காக இருந்து வருவதாக அக்வைர்டின் (Acquired Podcast) தொகுப்பாளர்களான பென் கில்பர்ட் மற்றும் டேவிட் ரோசெண்டல் தெரிவிக்கின்றனர். இதற்கு காரணம், ஐபிஎல்லில் பாட்காஸ்டர்களும், விளையாட்டு லீக்குகளில் ஐபிஎல்லின் ஆதிக்கமும்தான். ஆரம்பத்தில், அக்வைர்டு ஐபிஎல்லை அமெரிக்க ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது. இதன் காரணமாக, ஐபிஎல்லில் வருமானம் பல மடங்கு அதிகரித்துள்ளது.
ஐபிஎல் லாபம்:
In your podcast player now! pic.twitter.com/8rrRCDCCd5
— Acquired Podcast (@AcquiredFM) March 24, 2025
NFL என்று அழைக்கப்படும் நேஷனல் புட்பால் லீக் கடந்த 2024 சீசனில் கிட்டத்தட்ட 14 பில்லியன் மதிப்படப்பட்ட வருவாயுடன் மிகவும் இலாபகரமான விளையாட்டு லீக் என்ற தனது நிலையை பலப்படுத்தியுள்ளது. இது கடந்த 2023ம் ஆண்டு NBA என்று அழைக்கப்படும் தேசிய கூடைப்பந்து சங்கம் விட தோராயமாக 9 பில்லியன் அதிகமாக வசூலித்தது. இந்த முயற்சிகள் அனைத்தும் NFL கமிஷனர் ரோஜர் கூடலின் 2027 ஆம் ஆண்டுக்குள் 25 டாலர் பில்லியன் வருவாய் ஈட்டும் நோக்கத்தை அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
ஐபிஎல் 3வது இடமா..?
🚨 Indian Premier League (IPL) has become a decacorn, with its combined brand value surging 28% to .7 billion. (Brand Finance) pic.twitter.com/QHcgNR6492
— Indian Tech & Infra (@IndianTechGuide) December 13, 2023
அக்வைர்டு என்பது IPL-ஐ பெரிய அமெரிக்க லீக்குகளான NFL, NBA, MLB மற்றும் NHL-க்கு எதிராக சூழலுக்கு ஏற்ப மாற்றுகிறது. தற்போது பாட்காஸ்ட் மூலம் அதிக வருமானம் ஈட்டும் NFL-ஐ மிஞ்சும் அளவிற்கு ஐபிஎல் வளர்ந்து வருவதாக கூறப்படுகிறது. IPL-ன் தற்போதைய மதிப்பீடு 16 டாலர் பில்லியன் ஆகும், ஆண்டு வருவாய் 1.6-1/7 டாலர் பில்லியன் ஆகும். அதன்படி, 10 அணிகளை கொண்டு வெறும் 74 போட்டிகளை கொண்டு 2 மாதங்கள் மட்டுமே நீடிக்கும் ஐபிஎல்லின் ஒரு சீசனில் பாட்காஸ்ட் மூலம் ஐபிஎல்லின் குறைந்த லாபம்-அதிக லாபம் என்ற சமன்பாடுதான் உலக விளையாட்டுத் துறையை குழப்பத்தில் ஆழ்த்துகிறது. மேஜர் லீக் பேஸ்பால் (MLB) 6 மாதங்கள் நடைபெறும் லீக் போட்டிகளில் 30 அணிகள் பங்கேற்று 2500 ஆட்டங்கள், ஒரு ஆட்டத்திற்கு 1.7 டாலர் மில்லியன் மீடியா மதிப்புகளை பெறுகிறது. NFL சீசன் ஐந்து மாதங்கள், 32 அணிகள், 285 ஆட்டங்கள், ஒரு ஆட்டத்திற்கு 45-49 டாலர் மில்லியன் உரிமை மதிப்பை பெறுகிறது.
வெறும் 17 ஆண்டுகள் நடைபெற்ற நிலையில் குறைந்த போட்டிகளை நடத்தி ஐபிஎல் இவ்வளவு வருமானம் பெறுவது பெரிய ஆச்சர்யத்தை தருவதாக அக்வைர்டின் தொகுப்பாளர்களான பென் கில்பர்ட் மற்றும் டேவிட் ரோசென்டல் கூறுகின்றனர்.