Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

IPL 2025 Playoffs Scenarios: டெல்லி முதல் சென்னை வரை! பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைய என்ன செய்ய வேண்டும்..?

IPL 2025 Playoffs Race: ஐபிஎல் 2025ல் இதுவரை 22 போட்டிகள் நடைபெற்றுள்ளது. அதன்படி, புள்ளிகள் பட்டியலில் டெல்லி கேபிடல்ஸ் முதலிடத்திலும், குஜராத் டைட்டன்ஸ் 2வது இடத்திலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 3வது இடத்தில், பஞ்சாப் கிங்ஸ் 4வது இடத்தில் உள்ளது. இந்தநிலையில், ஐபிஎல் 2025ல் விளையாடும் 10 அணிகளும் பிளே ஆஃப்களுக்கு செல்ல என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.

IPL 2025 Playoffs Scenarios: டெல்லி முதல் சென்னை வரை! பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைய என்ன செய்ய வேண்டும்..?
ஐபிஎல் 2025 கேப்டன்கள்Image Source: PTI
mukesh-kannan
Mukesh Kannan | Published: 09 Apr 2025 19:35 PM

2025 ஐபிஎல் (IPL 2025) 18வது சீசனில் இதுவரை 22 போட்டிகள் நடந்துள்ளன. பங்கேற்கும் 10 அணிகளும் ஒவ்வொரு போட்டியிலும் பிளே ஆஃப் சுற்றுகளை அடைவதற்கு தீவிரமாக முயற்சிகளை மேற்கொள்ளும். 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இந்த முறை பிளே ஆஃப் சுற்றுகளுக்கு முன்னேறுவது கடினம் என்று கூறப்படுகிறது. அதேநேரத்தில், கடந்த முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் நிலைமை சற்று தொங்கலில் உள்ளது. இந்தநிலையில், ஐபிஎல் 2025ல் விளையாடும் 10 அணிகளும் பிளே ஆஃப்களுக்கு (IPL 2025 Playoffs Scenarios) செல்ல என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.

ஐபிஎல் 2025ல் இதுவரை 22 போட்டிகள் நடைபெற்றுள்ளது. அதன்படி, புள்ளிகள் பட்டியலில் டெல்லி கேபிடல்ஸ் முதலிடத்திலும், குஜராத் டைட்டன்ஸ் 2வது இடத்திலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 3வது இடத்தில், பஞ்சாப் கிங்ஸ் 4வது இடத்தில் உள்ளது.

டெல்லி கேபிடல்ஸ்:

ஐபிஎல் 2025ல் அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணி, இதுவரை சிறப்பாக விளையாடி தோல்வியே சந்திக்காமல் உள்ளது. இதுவரை 3 போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி கேபிடல்ஸ் அணி 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதேநேரத்தில், இவர்களது நிகர ரன் டேட்டும் +1.257 என்ற அடிப்படையில் சிறப்பாக உள்ளது. அந்தவகையில், ஐபிஎல் 2025 பிளே ஆப் சுற்றுக்குள் டெல்லி கேபிடல்ஸ் செல்ல 11 போட்டிகளில் குறைந்தது 5 போட்டிகளில் வெற்றி பெற வேண்டும்.

குஜராத் டைட்டன்ஸ்:

ஐபிஎல் 2025ல் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி இதுவரை 4 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. அதன்படி, ஐபிஎல் 2025 பிளே ஆஃப் சுற்றுக்குள் குஜராத் அணி நுழைய 10 போட்டிகளில் குறைந்தது 5 போட்டிகளில் வெற்றி பெற வேண்டும்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:

ஐபிஎல் 2025ல் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, இதுவரை 4 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் 3 போட்டிகளில் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் +1.015 நிகர ரன் என்ற நிகர ரன் ரேட்டுடன் புள்ளிகள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. அடுத்த 10 போட்டிகளில் குறைந்தது 5 போட்டிகளில் அவர் வெற்றி பெற வேண்டும்.

பஞ்சாப் கிங்ஸ்:

ஐபிஎல் 2025ல் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் 4 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில் கடந்த 2024ம் ஆண்டு ஐபிஎல்லில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது. தற்போது புள்ளிகள் பட்டியலில் பஞ்சாப் கிங்ஸ் அணி 4வது இடத்தில் உள்ளது. அதன்படி, பஞ்சாப் அணியும் பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைய அடுத்த 10 போட்டிகளில் 5 போட்டிகளில் வெற்றி பெற வேண்டும்.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்:

ஐபிஎல் 2025ல் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 5 போட்டிகளில் 3ல் வெற்றியும், 2ல் தோல்வியும் பெற்றுள்ளது. இதன் அடிப்படையில் புள்ளிகள் பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. அதன்படி, லக்னோ அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைய 9 போட்டிகளில் குறைந்தது 5ல் வெற்றி பெற வேண்டும்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:

அஜிங்க்யா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ஐபிஎல் 2025ல் இதுவரை 5 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அதன் அடிப்படையில், புள்ளிகள் பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. அடுத்த 9 போட்டிகளில் குறைந்தது 6 போட்டிகளில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றாக வேண்டும். இல்லையெனில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணி வெளியேறுவது உறுதி.

ராஜஸ்தான் ராயல்ஸ்:

ஐபிஎல் 2025ல் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்தது. ஆனால் பின்னர் தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று நல்ல முன்னேற்றத்தை பெற்றுள்ளது. இதையடுத்து, பிளே ஆஃப் சுற்றுக்குள் செல்ல, ராஜஸ்தான் அணி அடுத்த 10 போட்டிகளில் குறைந்தது 6 போட்டிகளில் வெற்றி பெற வேண்டும்.

மும்பை இந்தியன்ஸ்:

ஐபிஎல் 2025ல் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, இதுவரை 5 போட்டிகளில் விளையாடி 1ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. மும்பை அணி இன்னும் 9 போட்டிகளில் விளையாட வேண்டியுள்ளது. ஆனால் பிளேஆஃப் பந்தயத்தில் தனது இடத்தை வலுப்படுத்த குறைந்தது 7 போட்டிகளில் வெற்றி பெற வேண்டும். அதாவது 2 போட்டிகளுக்கு மேல் தோல்வியடைந்தால் வெளியேறுவது உறுதி.

சென்னை சூப்பர் கிங்ஸ்:

ஐபிஎல் 2025ல் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ், 5 போட்டிகளில் 1 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. சென்னை அணி இன்னும் 9 போட்டிகளில் விளையாட வேண்டும். அதன்படி, 7ல் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்குள் செல்ல முடியும்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:

பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் நிலைமையும், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் போன்றே உள்ளது. ஹைதராபாத் அணி இதுவரை 5 போட்டிகளில் விளையாடி 4ல் தோல்வியை சந்தித்துள்ளது. நிகர ரன் ரேட் அடிப்படையில் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. அதன்படி, ஹைதராபாத் அணி அடுத்த 9 போட்டிகளில் 7 போட்டிகளில் வெற்றி பெற வேண்டும், இல்லையெனில் அந்த அணியின் பிளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்புகள் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிடும்.

சனிபகவானின் அதிர்ஷ்ட பார்வை.. இந்த ராசிகளுக்கு நல்லகாலம்
சனிபகவானின் அதிர்ஷ்ட பார்வை.. இந்த ராசிகளுக்கு நல்லகாலம்...
அஜித்தின் குட் பேட் அக்லி இதுவரை இவ்வளவு வசூல் செய்துள்ளதா?
அஜித்தின் குட் பேட் அக்லி இதுவரை இவ்வளவு வசூல் செய்துள்ளதா?...
கார் ரேஸ் பந்தயம்.. மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் குமார்!
கார் ரேஸ் பந்தயம்.. மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் குமார்!...
பதவியை துறந்த துரை வைகோ.. மதிமுகவில் அடுத்து என்ன?
பதவியை துறந்த துரை வைகோ.. மதிமுகவில் அடுத்து என்ன?...
சமையல் எண்ணெயில் கொழுப்பு அமிலம்... மார்பக புற்றுநோய் வருமா?
சமையல் எண்ணெயில் கொழுப்பு அமிலம்... மார்பக புற்றுநோய் வருமா?...
சவுதி அரேபியாவுக்கு அரசுமுறை பயணமாக செல்லும் பிரதமர் மோடி..
சவுதி அரேபியாவுக்கு அரசுமுறை பயணமாக செல்லும் பிரதமர் மோடி.....
மதிமுகவில் மோதல்? பதவியை தூக்கி எறிந்த துரை வைகோ
மதிமுகவில் மோதல்? பதவியை தூக்கி எறிந்த துரை வைகோ...
சீலம்பூர் கொலை: "லேடி டான்" என்ற பெண் குற்றவாளிக்கு தொடர்பா..?
சீலம்பூர் கொலை:
15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் சிம்புவுடன்.. நடிகை திரிஷா!
15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் சிம்புவுடன்.. நடிகை திரிஷா!...
வெற்றிக்காக போராடும் ராஜஸ்தான்..? ராஜ நடை போடுமா லக்னோ..?
வெற்றிக்காக போராடும் ராஜஸ்தான்..? ராஜ நடை போடுமா லக்னோ..?...
குடியரசுத் துணைத் தலைவருடன் ஆளுநர் ரவி சந்திப்பு.. பின்னணி என்ன?
குடியரசுத் துணைத் தலைவருடன் ஆளுநர் ரவி சந்திப்பு.. பின்னணி என்ன?...