IPL 2025: அம்மாவின் 3 மணிநேர தூக்கம்.. வேலையை விட்ட அப்பா..! வைபவ் சூர்யவன்ஷியின் போராட்ட கதை!
Vaibhav Suriyavanshi Struggle Story: வைபவ் சூர்யவன்ஷி தனது ஐபிஎல் அறிமுகத்தில் அதிவேக சதம் அடித்து அசத்தினார். இந்த வெற்றிக்குப் பின்னால் அவரது குடும்பத்தின் கடும் உழைப்பும், தியாகமும் இருக்கிறது. அம்மா இரவு உறக்கத்தைத் தியாகம் செய்து உணவு தயாரித்தது, அப்பா வேலையை விட்டுவிட்டு பயிற்சிக்கு உதவியது போன்ற தியாகங்கள் குறித்து அவர் பகிர்ந்து கொண்டார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இணைந்ததன் மூலம் அவர் தனது கனவை நனவாக்கினார்.

வைபவ் சூர்யவன்ஷி
ஐபிஎல்லில் தனது மூன்றாவது போட்டியிலேயே வைபவ் சூர்யவன்ஷி (Vaibhav Suriyavanshi) சிறப்பாக விளையாடி அதிவேக சதம் அடித்து அசத்தினார். இது ஐபிஎல்லில் மட்டுமல்ல, ஒட்டுமொத்தமாக டி20 கிரிக்கெட்டிலும் தனது பெயரில் பல சாதனைகளை பதிவு செய்தார். குஜராத் டைட்டன்ஸ் (Gujarat Titans) அணிக்கு எதிராக 210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 25 பந்துகள் மீதமிருந்த நிலையில், இலக்கை விரட்டி வெற்றி பெற்றது. இதற்கு காரணம், 14 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷிதான். வெறும் 38 பந்துகளில் 11 சிக்ஸர்கள் மற்றும் 7 பவுண்டரிகள் உதவியுடன் தனது சதத்தை பூர்த்தி செய்தார். இதன்மூலம், ஐபிஎல்லில் பல சாதனைகளை படைத்தார். இந்தநிலையில், வைபவ் சூர்யவன்ஷி தான் கிரிக்கெட் விளையாடுவதற்காக தனது குடும்பம் என்னென்ன கஷ்டங்களை எதிர்கொண்டது என்பது குறித்து பேசியுள்ளார்.
மனம் திறந்த வைபவ் சூர்யவன்ஷி:
ஐபிஎல்லில் சதம் அடித்த பிறகு வைபவ் சூர்யவன்ஷி, தனது போராட்டம், குடும்ப ஆதரவு மற்றும் தனது எதிர்கால இலக்குகள் குறித்து பேசினார். அதில், “நான் இன்று இந்த இடத்திற்கு வந்தேன் என்றால் அது என் பெற்றோரால்தான். என்னுடைய கிரிக்கெட் பயிற்சி காரணமாக, என் அம்மா இரவு 2 மணிக்கு எழுந்திருப்பார். அவர் எப்போதும் இரவு 11 மணிக்குதான் தூங்க செல்வார். வெறும் 3 மணிநேரம் மட்டுமே தூங்கி, எனது பயிற்சிக்காக உணவு தயாரித்து கொடுப்பார். அப்பா எனது பயிற்சிக்கு அழைத்து செல்வதற்காக வேலையை விட்டுவிட்டார். என் அண்ணன்தான் என் அப்பா இடத்தில் இருந்து வேலை செய்து வருகிறான். அதனால் நாங்கள் தினசரி வாழ்க்கையை நடத்துவதே கடினமாக உள்ளது. இருப்பினும், எப்போதும் என் அப்பா என் பின் நின்று ‘உன்னால் முடியும், நீ செய்வாய், நீ செய்வாய்’ என்று என்னை ஊக்கப்படுத்தி கொண்டே இருப்பார். கடினமாக உழைப்பவர்கள் ஒருபோதும் தோல்வியை சந்திக்க மாட்டார்கள். ” என்றார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இணைவதற்கு முன்பு என்ன நடந்தது..?
𝙏𝙖𝙡𝙚𝙣𝙩 𝙢𝙚𝙚𝙩𝙨 𝙊𝙥𝙥𝙤𝙧𝙩𝙪𝙣𝙞𝙩𝙮 🤗
He announced his arrival to the big stage in grand fashion 💯
It’s time to hear from the 14-year old 𝗩𝗮𝗶𝗯𝗵𝗮𝘃 𝗦𝘂𝗿𝘆𝗮𝘃𝗮𝗻𝘀𝗵𝗶 ✨
Full Interview 🎥🔽 -By @mihirlee_58 | #TATAIPL | #RRvGT https://t.co/x6WWoPu3u5 pic.twitter.com/8lFXBm70U2
— IndianPremierLeague (@IPL) April 29, 2025
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இணைந்தது தொடர்பான விவரத்தையும் வைபவ் சூர்யவன்ஷி பேசினார். அதில், “நான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பில் நடைபெற்ற பயிற்சி கேம்களில் பங்கேற்றேம். பயிற்சி முகாமில் விக்ரம் ராத்தோட் மற்றும் ரோமி பிந்தர் சார் அங்கே இருந்தார்கள். ரோனி சார் தான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மேலாளர். அப்போது நான் முகாமில் நன்றாக பேட்டிங் செய்திருந்தேன். பிறகு, அவர் என்னிடம் வந்து ஐபிஎல் 2025 ஏலத்தில் உங்களை எங்களது குழுவில் சேர்த்துக்கொள்ள முயற்சிப்போம் என்றார்.
நான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இணைந்ததும், எனக்கு வந்த முதல் போன் ரோமி சாரிடம் இருந்துதான். முதலில் அவர் என்னை வாழ்த்திவிட்டு, பின்னர் ராகுல் டிராவிட் சாரிடம் பேச வைத்தார். அது என் வாழ்வில் மிகச்சிறந்த உணர்வு. ஏனென்றால், ராகுல் சாரின் பயிற்சி கீழ் விளையாடுவது என்பது ஒவ்வொரு கிரிக்கெட் வீரருக்கும் மிகப்பெரிய கனவு” என்று தெரிவித்தார்.