RR vs GT: சூறாவளியாக உருவெடுத்த வைபவ் சூர்யவன்ஷி.. குஜராத்தை வீழ்த்த 35 பந்துகளில் சதம்!
Vaibhav Suryavanshi's Record-Breaking IPL Century: ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதிய ஐபிஎல் 2025 போட்டியில், 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி அதிவேக சதம் (38 பந்துகள்) அடித்து அசத்தினார். யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் அரைசதத்துடன் இணைந்து, ராஜஸ்தான் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சூர்யவன்ஷியின் சாதனை ஐபிஎல் வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.

ஐபிஎல் 2025ல் (IPL 2025) இன்று அதாவது 2025 ஏப்ரல் 28ம் தேதி ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் (Rajasthan Royals) அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் வைபவ் சூர்யவன்ஷியின் (Vaibhav Suryavanshi) அதிவேக அபார சதத்தாலும், யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் சூப்பர் அரைசதத்தாலும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி வெறும் 38 பந்துகளில் 11 சிக்ஸர்கள் மற்றும் 7 பவுண்டரிகளுடன் 101 ரன்கள் எடுக்க, யஷஸ்வி ஜெய்ஸ்வால் 40 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 70 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இருவரும் இணைந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முதல் விக்கெட்டுக்கு 166 ரன்கள் எடுத்தது.
இதன் காரணமாக, ராஜஸ்தான் அணி 210 ரன்கள் என்ற இலக்கை 15.5 ஓவர்களில் எட்டியது. குஜராத் தரப்பில் பிரசித் கிருஷ்ணா, ரஷித் கான் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். முன்னதாக, குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுக்கு இழப்பிற்கு 209 ரன்கள் எடுத்தது. குஜராத் அணிக்காக கில் 50 பந்துகளில் 84 ரன்கள் எடுத்தார். ஜோஸ் பட்லரும் 26 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். ராஜஸ்தான் அணி தரப்பில் மஹிஷ் தீக்ஷனா அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
சூறாவளியாக உருவெடுத்த வைபவ் சூர்யவன்ஷி:
Youngest to score a T20 1⃣0⃣0⃣ ✅
Fastest TATA IPL hundred by an Indian ✅
Second-fastest hundred in TATA IPL ✅Vaibhav Suryavanshi, TAKE. A. BOW 🙇 ✨
Updates ▶ https://t.co/HvqSuGgTlN#TATAIPL | #RRvGT | @rajasthanroyals pic.twitter.com/sn4HjurqR6
— IndianPremierLeague (@IPL) April 28, 2025
வைபவ் சூர்யவன்ஷி படைத்த சாதனைகள்:
- ஐபிஎல் வரலாற்றில் மிக இளம் வயதில் சதம் (14 ஆண்டுகள் 32 நாட்கள்)
- டி20 போட்டிகளில் மிக இளம் வயதில் சதம்
- ஐபிஎல் 2025ல் அதிவேக அரைசதம் (17 பந்துகள்)
- ஐபிஎல் வரலாற்றில் 2வது வேகமான சதம் (35 பந்துகள்)
- ஐபிஎல்லில் அரைசதம் அடித்த இளம் வீரர்
- ஐபிஎல்லில் அறிமுகமான இளம் வீரர் (14 வயது 23 நாட்கள்)
- ஐபிஎல்லில் சிக்ஸர் அடித்த இளம் வீரர்
- ஐபிஎல் வரலாற்றில் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்த இளம் வீரர்
- குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக வேகமான சதம்
- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 2வது வேகமான அரைசதம்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய வைபவ் சூர்யவன்ஷி, குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக 17 பந்துகளில் அரை சதத்தையும், 35 பந்துகளில் சதத்தையும் பதிவு செய்தார். இந்த சதத்தின் மூலம், ஐபிஎல் வரலாற்றில் வேகமாக சதம் அடித்த 2வது பேட்ஸ்மேன் என்ற சாதனையையும், முதல் இந்தியர் என்ற பெருமையையும் வைபவ் சூர்யவன்ஷி பெற்றுள்ளார். 30 பந்துகளில் சதம் அடித்து ஐபிஎல் வரலாற்றில் வைபவ் சூர்யவன்ஷியை விட கிறிஸ் கெய்ல் மட்டுமே முன்னிலையில் உள்ளார்.