ஐபிஎல் 2025 புள்ளி பட்டியல்.. யார் டாப்? சென்னை நிலைமை என்ன?

IPL 2025 : ஐபிஎல் 2025ல், மும்பை இந்தியன்ஸ் அணி டெல்லி கேபிடல்ஸை தோற்கடித்தால் புள்ளிப்பட்டியலில் பின் தங்கியுள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. டெல்லி இரண்டாவது இடத்திற்குச் சென்றுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி இடத்தில் உள்ளது. இந்தப் போட்டிகளின் விளைவாக புள்ளிகள் பட்டியலில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

ஐபிஎல் 2025 புள்ளி பட்டியல்.. யார் டாப்? சென்னை நிலைமை என்ன?

ஐபிஎல் அணிகள்

Published: 

14 Apr 2025 08:58 AM

ஐபிஎல் 2025 இல் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிடல்ஸை தோற்கடித்து தங்கள் தோல்விப் பயணத்தை முடிவுக்குக் கொண்டுவந்தது. இருப்பினும், 2025 ஏப்ரல் 13ல் நடந்த முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸை 9 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்ததால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு முன்னேறியுள்ளது. இந்த இரண்டு போட்டிகளின் முடிவுகளும் புள்ளிகள் பட்டியலில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. அதன்படி எந்த அணிகள் எந்த இடத்தில் இருக்கிறது என்பதை பார்க்கலாம்.

முதல் இடத்திலிருந்து டெல்லி பின்தங்கியது.

மும்பை அணியிடம் தோல்வியடைந்த பிறகு டெல்லி அணி முதலிடத்திலிருந்து பின்தங்கிவிட்டது. டெல்லி அணி தற்போது புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. அக்சர் படேல் தலைமையிலான டெல்லி அணி 5 போட்டிகளில் 4-ல் வெற்றி பெற்றது. தொடர் தோல்விகளுக்குப் பிறகு மும்பை தற்போது ஆறாவது இடத்தில் உள்ளது. ஹார்திக் அணி 6 போட்டிகளில் 2 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது. ராஜஸ்தானை ஒருதலைப்பட்சமாக வீழ்த்தியதன் மூலம் பெங்களூரு அணி மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது. சுவாரஸ்யமாக, பெங்களூரு அணி விளையாடிய நான்கு வெளியூர் போட்டிகளிலும் வெற்றி பெற்றது, இரண்டு உள்ளூர்ப் போட்டிகளில் தோல்வியடைந்தது. பெங்களூரு அணி 8 புள்ளிகளை பெற்றுள்ளது.

சென்னை அணி:

ஐபிஎல் என்றாலே புள்ளி பட்டியலில் டாப் 3 லெவலி இருக்கும் சிஎஸ்கே தற்போது கடைசி  இடத்தில் இருக்கிறது. தொடர் தோல்விகளால் மீள முடியாமல் சென்னை அணி தள்ளாடி வருகிறது. புள்ளிகளை பொறுத்தவரை,  போட்டிகள் – 6, வெற்றி – 1, தோல்வி – 5, முடிவு இல்லை – 0, டை – 0, புள்ளிகள் – 2, ரன் ரேட்- -1.554 என்ற கணக்கில் உள்ளது

ஐபிஎல் 2025 இல் 29வது போட்டிக்குப் பிறகு புள்ளிகள் அட்டவணை

1) குஜராத் டைட்டன்ஸ்: (போட்டிகள் – 6, வெற்றிகள் – 4, தோல்விகள் – 2, முடிவு இல்லை – 0, டைகள் – 0, புள்ளிகள் – 8, ரன் ரேட் – +1.081)

2) டெல்லி கேபிடல்ஸ்: (போட்டிகள் – 5, வெற்றி – 4, தோல்வி – 1, முடிவு இல்லை – 0, டை – 0, புள்ளிகள் – 8, ரன் ரேட் – +0.899)

3) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: (போட்டிகள் – 6, வெற்றிகள் – 4, தோல்விகள் – 2, முடிவு இல்லை – 0, டைகள் – 0, புள்ளிகள் – 8, ரன் ரேட் – +0.672)

4) லக்னோ சூப்பர்ஜெயண்ட்ஸ்: (போட்டிகள் – 6, வெற்றிகள் – 4, தோல்விகள் – 2, முடிவு இல்லை – 0, டைகள் – 0, புள்ளிகள் – 6, ரன் ரேட் – +0.162)

5) கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: (போட்டிகள் – 6, வெற்றிகள் – 3, தோல்விகள் – 3, முடிவு இல்லை – 0, டைகள் – 0, புள்ளிகள் – 6, ரன் ரேட் – +0.803)

6) பஞ்சாப் கிங்ஸ்: (போட்டிகள் – 5, வெற்றிகள் – 3, தோல்விகள் – 2, முடிவு இல்லை – 0, டைகள் – 0, புள்ளிகள் – 6, ரன் ரேட் +0.065)

7) மும்பை இந்தியன்ஸ்: (போட்டிகள் – 6, வெற்றிகள் – 2, தோல்விகள் – 4, முடிவு இல்லை – 0, டைகள் – 0, புள்ளிகள் – 2, ரன் ரேட் – +0.104)

8) ராஜஸ்தான் ராயல்ஸ்: (போட்டிகள் – 6, வெற்றி – 2, தோல்வி – 4, முடிவு இல்லை – 0, டை – 0, புள்ளிகள் – 4, ரன் ரேட்– -0.838)

9) சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: (போட்டிகள் – 6, வெற்றிகள் – 2, தோல்விகள் – 4, முடிவு இல்லை – 0, டைகள் – 0, புள்ளிகள் – 4, ரன் ரேட் – -1.245)

10) சென்னை சூப்பர் கிங்ஸ்: (போட்டிகள் – 6, வெற்றி – 1, தோல்வி – 5, முடிவு இல்லை – 0, டை – 0, புள்ளிகள் – 2, ரன் ரேட்- -1.554).