RCB vs PBKS: பெங்களூருவை வச்சு செய்த வதேரா.. வெற்றி நடைப்போகும் ஷ்ரேயாஸ் படை..!

Royal Challengers Bengaluru: ஐபிஎல்லின் 18வது பிறந்தநாளன்று, பெங்களூருவில் ஆர்சிபி மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. மழை காரணமாக தாமதமாகத் தொடங்கிய போட்டி, 14 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. பஞ்சாப் அணி டாஸ் வென்று முதலில் பந்து வீசியது. ஆர்சிபி அணி மோசமான தொடக்கத்திற்குப் பிறகு 95 ரன்கள் மட்டுமே எடுத்தது. பஞ்சாப் 96 ரன்களை எளிதாக எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டிம் டேவிட் 50 ரன்களுடன் ஆர்சிபிக்கு ஆறுதல் அளித்தார்.

RCB vs PBKS: பெங்களூருவை வச்சு செய்த வதேரா.. வெற்றி நடைப்போகும் ஷ்ரேயாஸ் படை..!

நேஹல் வதேரா - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி

Published: 

19 Apr 2025 00:19 AM

ஐபிஎல்லின் (IPL) 18வது பிறந்தநாள் இன்று. சரியாக 17 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் 2008ம் ஆண்டு ஏப்ரல் 18ம் தேதி ஐபிஎல் தொடங்கப்பட்டது. ஐபிஎல் பிறந்தநாளான இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி (Royal Challengers Bengaluru) மற்றும் பஞ்சாப் கிங்ஸ் (Punjab Kings) அணிகள் பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் மோதியது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த போட்டி மழை காரணமாக சுமார் இரண்டரை மணி நேரம் காத்திருந்த பிறகு, டாஸ் போடப்பட்டது. அதன்படி, போட்டியானது தலா 14 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

9.45க்கு முதல் பந்து:

ஐபிஎல் 2025 தொடரின் 34வது போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே எம் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. ழை காரணமாக, டாஸ் இரண்டரை மணி நேரம் தாமதமாகி இரவு 9.30 மணி வரை நீடித்தது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. இந்தப் போட்டியின் முதல் பந்து இரவு 9.45 மணிக்கு வீசப்பட்டது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக விராட் கோலி மற்றும் பில் சால்ட் களமிறங்கினர். பஞ்சாப் கிங்ஸ் அணியின் முதல் ஓவரை அர்ஷ்தீப் சிங் வீச, போட்டியின் முதல் பந்தில் பில் சால்ட் ஒரு பவுண்டரி அடித்தார். பின்னர் இரண்டு பந்துகள் டாட் ஆனதால் 4வது பந்தில் சால்ட் கேட்ச் அவுட் ஆனார். 3வது ஓவரில் பெங்களூரு அணிக்கு இரண்டாவது அடியை அர்ஷ்தீப் சிங் கொடுத்தார். விராட் கோலி மூன்று பந்துகளில் ஒரு ரன் எடுத்து ஆட்டமிழந்தார். மூன்றாவது ஓவரின் நான்காவது பந்தில் ஆர்சிபி 21 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. தொடர்ந்து, பெங்களூரு அணி 33 ரன்களுக்குள் 5 விக்கெட்களையும், 63 ரன்களுக்குள் 9 விக்கெட்களையும் இழந்து தடுமாறியது.

அதன்பிறகு, விஸ்வரூம் எடுத்த டிம் டேவிட் 26 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் உதவியுடன் 50 ரன்கள் எடுக்க, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 14 ஓவர்கள் முடிவில் 95 ரன்களை எடுத்தது.

96 ரன்கள் இலக்கு:

96 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக பிரியான்ஷ் ஆர்யா மற்றும் ப்ரப்சிம்ரன் சிங் களமிறங்கினர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 22 ரன்கள் எடுத்தாலும், 53 ரன்களுக்குள் பஞ்சாப் அணி பிரியான்ஷ் ஆர்யா, ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் ஜோஷ் இங்கிலிஸ் ஆகியோரின் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதன் காரணமாக, பஞ்சாப் அணி 8 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 53 ரன்கள் எடுத்து தடுமாறியது. உள்ளே வந்த வதேரா அதிரடியாக விளையாடினாலும், ஷஷாங்க் சிங் 5 பந்துகளில் 1 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து, வதேரா 19 பந்துகளில் 33 ரன்களை குவிக்க, ஸ்டாய்னிஸ் தன் பங்கிற்கு 2 பந்துகளில் 7 ரன்கள் அடித்து பஞ்சாப் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தார்.

Related Stories